என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    த.வெ.க. கூட்டத்திற்கு வந்தது கட்டுக்கடங்காத கூட்டமல்ல! கட்டுப்பாடற்ற கூட்டம் - செந்தில் பாலாஜி
    X

    த.வெ.க. கூட்டத்திற்கு வந்தது 'கட்டுக்கடங்காத' கூட்டமல்ல! 'கட்டுப்பாடற்ற' கூட்டம் - செந்தில் பாலாஜி

    • ஜெனரேட்டர் அணைக்கப்பட்ட நேரத்தில் தெரு விளக்குகள் எரிந்து கொண்டுதான் இருந்தன.
    • நாமக்கல்லில் இருந்து விஜய் வாகனத்துடன் 2 ஆம்புலன்ஸ்கள் வந்தன.

    கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் கரூரில் நடந்த துயர சம்பவம் தொடர்பாக தி.மு.க. அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * கூட்ட நெரிசல் காரணமாக த.வெ.க. தொண்டர்கள் ஜெனரேட்டர் அறைக்கு சென்றனர்.

    * தொண்டர்கள் சென்ற காரணத்தால் ஜெனரேட்டர் அணைக்கப்பட்டது.

    * ஜெனரேட்டர் அணைக்கப்பட்ட நேரத்தில் தெரு விளக்குகள் எரிந்து கொண்டுதான் இருந்தன.

    * கூட்டம் நடக்கும் 500மீ முன்னர் விஜய் பேருந்தின் உள்ளே சென்றது ஏன்?

    * விஜயின் கவனத்தை ஈர்க்க அந்த கட்சி தொண்டர்களே செருப்பை எறிந்திருக்கலாம்.

    * அரசியல் தலைவர்கள் முன்சீட்டில் அமர்ந்து கை காட்டுவது வழக்கம்.

    * விஜய் பிரசார பகுதிக்கு வந்ததும் வாகனத்தின் முன்பகுதி லைட் அணைக்கப்பட்டது.

    * எல்லா நாளும் வாகனம் ஓட்டும் எனக்கு இன்று மட்டும் விபத்து ஏன் ஏற்பட்டது என்பது போல் உள்ளது.

    * தண்ணீர் கேட்டபோது கடைகள் பூட்டியிருந்ததால் தி.மு.க.வினர் கைவசம் இருந்த பாட்டில்களை கொடுத்தோம்.

    * காவல்துறையினர் அறிவுரையை த.வெ.க.வினர் கேட்டிருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது.

    * நாமக்கல்லில் இருந்து விஜய் வாகனத்துடன் 2 ஆம்புலன்ஸ்கள் வந்தன.

    * த.வெ.க. கூட்டத்தில் தி.மு.க.வை சேர்ந்த எந்த ஆம்புலன்ஸ்களும் செல்லவில்லை.

    * கூட்டநெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு த.வெ.க.வினர் உதவ முன்வரவில்லை.

    * த.வெ.க. கூட்டத்திற்கு வந்தது கட்டுக்கடங்காத கூட்டமல்ல, கட்டுப்பாடற்ற கூட்டம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×