என் மலர்
தலைப்புச்செய்திகள்
- சம்பவ இடத்தில் கூட்ட நெரிசல் இருந்தது என்றால் கரூர் எல்லையில் விஜயை போலீசார் வரவேற்றது ஏன்?
- எல்லாம் சரியாகத்தான் இருக்கிறதா? என்பதை அறிந்தபிறகே விஜய் பேசத் தொடங்கினார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவ வழக்கை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.
இந்நிலையில் த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:
* விஜய் தாமதமாக வந்தார் என்று குற்றம்சாட்டினர். காவல் துறை அனுமதித்த மதியம் 3 முதல் 10 வரைக்கு உள்ளாகத்தான் விஜய் வந்தார்.
* விஜய் தாமதமாக வந்தார் என்று கூறுவது அபாண்டமான குற்றச்சாட்டு
* சம்பவ இடத்தில் கூட்ட நெரிசல் இருந்தது என்றால் கரூர் எல்லையில் விஜயை போலீசார் வரவேற்றது ஏன்?
* கூட்டத்தில் விஜய் வாகனம் நுழைந்தபோது ஒட்டுமொத்த காவல்துறை எங்கு நிறுத்த சொன்னதோ அங்கு நிறுத்திதான் பேசினார்.
* எல்லாம் சரியாகத்தான் இருக்கிறதா? என்பதை அறிந்தபிறகே விஜய் பேசத் தொடங்கினார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அமெரிக்க அதிபர் டிரம்ப் இஸ்ரேல் புறப்பட்டுச் சென்றார்.
- பணயக் கைதிகளின் குடும்பத்தினரை டிரம்ப் சந்திக்கிறார்.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் முதல்முறையாக இஸ்ரேல் புறப்பட்டுச் சென்றார்.
ஹமாஸ் அமைப்பால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பணயக் கைதிகளின் குடும்பத்தினரை சந்திக்கும் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை சந்தித்து, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார்.
இஸ்ரேல் பயணத்தை முடித்துக்கொண்டு டிரம்ப் அங்கிருந்து எகிப்து செல்கிறார்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "போர்களைத் தீர்ப்பதில் சிறந்தவன் நான். பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே போர் நடப்பதாக கேள்விப்பட்டேன். மத்திய கிழக்கு பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்கா திரும்பியதும், அதையும் நிறுத்துவேன். காசா போர் என்பது நான் தீர்த்து வைத்த 8வது போராகும்" என்று தெரிவித்தார்.
- கியாஸ் டேங்கர் லாரிகள் சாலை ஓரங்கள் மற்றும் பட்டறைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
- தமிழகம் உள்பட தென்மாநிலங்களில் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
நாமக்கல்:
நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தென்மண்டல எல்.பி.ஜி.கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 9-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டம் இன்று 5-வது நாளாக நீடித்து வருகிறது. இதன் காரணமாக கியாஸ் டேங்கர் லாரிகள் சாலை ஓரங்கள் மற்றும் பட்டறைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கியாஸ் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சிலிண்டர்களில் கியாஸ் நிரப்பும் தொழிற்சாலைகளுக்கு கியாஸ் கொண்டு செல்லும் பணி முற்றுலுமாக முடங்கியுள்ளது. எனவே தமிழகம் உள்பட தென்மாநிலங்களில் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
- ஜான் கேம்பல் 115 ரன்கள் எடுத்து ஜடேஜா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
- முதல் சதம் அடிக்க அதிக இன்னிங்ஸ்கள் எடுத்த கொண்ட வீரர்கள் பட்டியலில் கேம்பல் 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி கடந்த 10-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்பிற்கு 518 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 248 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் பால் ஆன வெஸ்ட் இண்டீஸ் அணி தொடர்ந்து 2-வது இன்னிங்சை விளையாடி வருகிறது.
தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை வெஸ்ட் இண்டீஸ் அணி பறிகொடுத்தது. இதனையடுத்து தொடக்க வீரர் ஜான் ஜாம்பெல் மற்றும் சாய் ஹோப் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜான் கெம்பல், டெஸ்டில் தனது முதலாவது சத்தை பதிவு செய்தார்.
இதன்மூலம் இந்தியாவுக்கு எதிராக 19 ஆண்டுக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
கடைசியாக 2006-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் தொடக்க வீரர் டேரன் கங்கா இந்தியாவிற்கு எதிராக சதமடித்திருந்தார்.
மேலும் தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்ய அதிக இன்னிங்ஸ்கள் எடுத்த கொண்ட வீரர்கள் பட்டியலில் இவர் 2-வது இடத்தை பிடித்துள்ளார். இதன் முதல் இடத்தில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த டிரெவோர் கொடாட் உள்ளார். இவர் முதல் சதத்தை பதிவு செய்ய 58 இன்னிங்ஸ்கள் எடுத்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உச்ச நீதிமன்றம், கரூர் கூட்டநெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.
- ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கரூரில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு தமிழக வெற்றிக்கழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி, கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை குழு அமைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது. இந்த மனு, நீதிபதிகள் மகேஸ்வரி, அஞ்சாரியா ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக போலீசை மட்டும் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும் என்று தவெக தரப்பு வலியுறுத்தியது.
இந்நிலையில், இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், கரூர் கூட்டநெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.
இது இடைக்கால உத்தரவு மட்டுமே என்று தெளிவுபடுத்திய உச்சநீதிமன்றம், சிபிஐ விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
விசாரணை குழுவில் 2 ஐபிஎஸ் அதிகாரிகள் இடம்பெறுவார்கள். எனினும் அவர்கள் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர்களாக இருக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கை விசாரித்த விதத்திற்கு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
எதையும் ஆய்வு செய்யாமல் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி சிறப்பு புலனாய்வு குழுவுக்கு உத்தரவிட்டுள்ளார் என கூறிய உச்சநீதிமன்றம், சிறப்பு விசாரணை குழு விசாரணைக்கு உத்தரவிட்டது எப்படி என்றும் சென்னை உயர்நீதிமன்றத்திடம் உச்சநீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.
பரப்புரை குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க கோரிய வழக்கு, கிரிமினல் வழக்காக பட்டியலிடப்பட்டது எப்படி? என உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிக்கை தர ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
- காதல் திருமணம் செய்த 3 மாதத்தில் மருமகனை கொடூரமாக வெட்டிக்கொன்ற மாமனார் கைது செய்யப்பட்டார்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள ராமநாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 24). பால் வியாபாரம் செய்து வந்தார். மேலும் வெவ்வேறு பகுதிகளுக்கு சென்று பால் கறவை தொழிலும் செய்து வந்தார்.
இவர் பால் கறக்கும் தொழிலுக்கு செல்லும் போது வீடு அருகே உள்ள கணபதிபட்டியைச் சேர்ந்த சந்திரன் (49) என்பவரின் மகளான ஆர்த்தி (21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. ஆர்த்தி கரூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர்கள் காதல் நாளுக்கு நாள் வேகமாக வளர்ந்து வந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
குறிப்பாக ஆர்த்தியின் தந்தை சந்திரன் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை. இதனால் தங்களை பிரித்து விடுவார்களோ என அச்சமடைந்த காதலர்கள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகும் பெண் வீட்டார் ஏற்றுக்கொள்ளவில்லை.
இதனைத் தொடர்ந்து ராமச்சந்திரன் குடும்பத்தினர் சம்மத்துடன் காதல் தம்பதி ராமநாயக்கன்பட்டியில் தனியாக வசித்து வந்தனர். திருமணத்துக்கு பிறகு ஆர்த்தியின் குடும்பத்தினர் அவ்வப்போது ராமச்சந்திரன் குடும்பத்தினருடன் பேசி வந்த போதிலும் மாமனார் சந்திரன் பேசாமல் இருந்து வந்தார். மேலும் மாப்பிள்ளை வீட்டாருக்கும், ராமச்சந்திரனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனிடையே திருமணம் முடிந்து தலைதீபாவளியை கொண்டாட காதல் தம்பதியினர் தயாராகி வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை ராமச்சந்திரன் நிலக்கோட்டை அருகே உள்ள குல்லிப்பட்டிக்கு பால் கறப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் மீண்டும் அங்கிருந்து தனது வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார். கூட்டாத்து அய்யம்பாளையம் பகுதியில் உள்ள பாலத்தின் வழியாக ராமச்சந்திரன் வந்தபோது அங்கு ஏற்கனவே நின்று கொண்டு இருந்த மாமனார் சந்திரன் அவரை வழிமறித்து தகராறு செய்தார். அப்போது அவர்கள் 2 பேருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த சந்திரன் தான் ஏற்கனவே மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராமச்சந்திரனை சரமாரியாக வெட்டினார். இதனை எதிர்பார்க்காத ராமச்சந்திரன் பைக்கை விட்டு இறங்கி ஓட முயன்றார். இருந்தபோது துரத்திச் சென்று வெட்டியதில் ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். பின்னர் சந்திரன் அங்கிருந்து தப்பி ஓடினார்.
இதைப் பார்த்து அப்பகுதி மக்கள் நிலக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கொலை செய்யப்பட்ட ராமச்சந்திரனின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய சந்திரனை வலை வீசி தேடிய நிலையில் அவர் உறவினர் வீட்டில் இருந்தது தெரிய வரவே அங்கு சென்று கைது செய்தனர்.
வேறு சமூகத்தைச் சேர்ந்த வாலிபரை திருமணம் செய்ததால் மருமகனையே மாமனார் வெட்டிக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே தலை தீபாவளியை கொண்டாட ஆவலுடன் காத்திருந்த ஆர்த்தி தனது காதல் கணவர் உடலை பார்த்து கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
- இந்தியாவில் திருமணம், விசேஷங்கள் மற்றும் பண்டிகைகளின் போது தங்கம் வாங்குவது பாரம்பரியாக இருக்கிறது.
- இன்று தங்கம் விலை ஒவ்வொரு நாளும் உயர்ந்து உச்சத்துக்கு சென்று கொண்டிருக்கிறது.
சென்னை:
தங்கம் உலோகம் மட்டுமல்ல. அது முக்கிய முதலீடாகவும், செல்வத்தின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரையில், தங்கம் ஆபரணமாக மட்டும் பார்ப்பது கிடையாது. கலாசாரம், பாரம்பரியம், குடும்பத்தின் ஒரு அங்கமாகவே பார்க்கிறார்கள்.
உலகில் சீனாவுக்கு அடுத்தபடியாக தங்க நுகர்வு செய்வதில் இந்தியாதான் இருக்கிறது. காரணம், வீட்டில் ஒரு குண்டுமணி தங்கமாவது இருக்க வேண்டும் என்ற முனைப்பில் சிறுக சிறுக பணம் சேர்த்து வாங்கும் வழக்கம் இன்றளவும் இந்திய குடும்பங்களில் இருந்து வருகிறது. அதிலும், இந்தியாவில் திருமணம், விசேஷங்கள் மற்றும் பண்டிகைகளின் போது தங்கம் வாங்குவது பாரம்பரியாக இருக்கிறது.
இந்தியாவில் தங்க உற்பத்தி மிகக்குறைவாக இருப்பதால், தங்க நுகர்வுத் தேவையை பூர்த்தி செய்ய பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது.
இன்று தங்கம் விலை ஒவ்வொரு நாளும் உயர்ந்து உச்சத்துக்கு சென்று கொண்டிருக்கிறது. ஆனாலும் இந்திய குடும்பங்களில் தங்கத்தை வாங்குபவர்களின் எண்ணிக்கையோ, அதன் மீதான விருப்பமோ கொஞ்சமும் குறையவில்லை என்பதை பல தங்கம் சார்ந்த புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. அப்படி ஒரு புள்ளி விவரத்தைத்தான் உலக தங்க கவுன்சில் சமீபத்தில் வெளியிட்டு இருக்கிறது.
அதில், இந்திய குடும்பங்களில் ஒட்டுமொத்தமாக சுமார் 34,600 டன் தங்கம் இருப்பு இருப்பதாக சொல்லப்பட்டு உள்ளது. இது ஆபரணமாகவோ, நாணயமாகவோ, கட்டியாகவோ இருக்கலாம் என கூறப்படுகிறது. தற்போதைய சந்தை விலையின் அடிப்படையில் பார்க்கும்போது, இதன் மதிப்பு சுமார் ரூ.337 லட்சம் கோடி என கணக்கிடப்பட்டிருக்கிறது.
இந்த தங்க இருப்பு, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 88.8 சதவீதம் எனவும், இந்திய குடும்பங்களில் இருக்கும் தங்க இருப்பு என்பது, உலக நாடுகளின் மத்திய வங்கிகள் வைத்திருக்கும் மொத்த தங்க இருப்புகளைவிட அதிகம் எனவும் சொல்லப்படுகிறது.
இதற்கு முன்பு அதாவது, கடந்த 2023-ம் ஆண்டு உலக தங்க கவுன்சில் இதேபோல் வெளியிட்டிருந்த புள்ளி விவரங்களில் இந்திய குடும்பங்களில் சுமார் 25 ஆயிரம் டன் தங்கம் இருப்பதாக சொல்லப்பட்டு இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 9 ஆயிரத்து 600 டன் வரை தங்க இருப்பு இந்திய குடும்பங்களில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- கூட்டநெரிசலில் உயிரிழந்த சிறுவனின் தாயார் சர்மிளா குற்றம் சாட்டினார்.
- தன்னை ஏமாற்றி கையொப்பம் பெறப்பட்டதாக செல்வராஜ் என்பவரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
கரூரில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு தமிழக வெற்றிக்கழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி, கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை குழு அமைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது. இந்த மனு, நீதிபதிகள் மகேஸ்வரி, அஞ்சாரியா ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக போலீசை மட்டும் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும் என்று தவெக தரப்பு வலியுறுத்தியது.
அதே சமயம், இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கவேண்டும் என்று தனது மகனை இழந்த பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்குகள் மீது உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கவுள்ளது.
இந்நிலையில், கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை கோரி தாங்கள் மனுத் தாக்கல் செய்யவே இல்லை என உயிரிந்தவர்களின் குடும்பத்தினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
குடும்பத்தைப் பிரிந்துச் சென்ற, தங்களுக்கு தொடர்பில்லாத பன்னீர்செல்வம் பணத்திற்காக வழக்கு தொடர்ந்துள்ளதாக உயிரிழந்த சிறுவனின் தாயார் சர்மிளா குற்றம் சாட்டினார். மேலும், தன்னை ஏமாற்றி கையொப்பம் பெறப்பட்டதாக செல்வராஜ் என்பவரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
- வாலிபர், தனது வாட்ஸ் அப்-ல் காட்சி படமாக தன்னுடைய மனைவியின் நிர்வாண படத்தை வைத்துள்ளார்.
- அந்த வாலிபரின் மீது போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூர் அருகே உள்ள திருக்காக்கரை பகுதியை சேர்ந்த 26 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், குடும்ப தகராறு காரணமாக தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் அந்த வாலிபர், தனது வாட்ஸ் அப்-ல் காட்சி படமாக தன்னுடைய மனைவியின் நிர்வாண படத்தை வைத்துள்ளார். அதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி, தனது கணவரின் மீது பெரும்பாவூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், அந்த வாலிபரின் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். குடும்ப தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் மனைவியின் நிர்வாண படத்தை வாட்ஸ்-அப் காட்சி படமாக வைத்தது ஏன்? என்று அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது தனது மனைவிக்கு மற்றொரு ஆணுடன் தொடர்பு உள்ளதாகவும், அந்த நபருடன் உடலில் ஆடைகள் இல்லாமல் நிர்வாணமாக வீடியோ கால் பேசியதை மறைந்திருந்து ரகசியமாக புகைப்படம் எடுத்ததாகவும், தனது மனைவி மீது உள்ள கோபத்தில் அதனையே தனது வாட்ஸ்-அப் காட்சிபடமாக வைத்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பிரிந்து சென்ற மனைவி மீதான கோபத்தில் அவரது நிர்வாண புகைப்படத்தை வாட்ஸ்-அப் காட்சி படமாக வைத்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் எர்ணாகுளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஒரு தெருவில், ஒரு ஊரில் குழுவாக நல் உறவு உடன் வசிக்கின்ற மக்கள் அடையாளமாகவும் அந்த பகுதிக்கு அவர்கள் சமூக பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது.
- சாதியப் பெயர்கள் கூடாது என்ற நிலைப்பாட்டை தமிழக அரசு எடுத்து உள்ளது தமிழ்நாட்டில் பல சமுதாயங்களின் அடையாளங்களை அழிக்கும் செயலாக உள்ளது.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் பல காலமாக நடைமுறையில் உள்ள ஊர்கள், சாலைகள், தெருக்கள், நீர்நிலைகள் பெயர்களில் உள்ள சாதி அடையாள பெயர்களை நீக்குவதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை தமிழகத்தில் உள்ள பல சமூக மக்கள் இடத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்த முன்னோர்கள் பலர் தமது பகுதி மக்களின் கல்வி வளர்ச்சிக்கு பல ஏக்கர் நிலங்களை கல்விக் கூடங்களுக்கு தானமாக கொடுத்தும், மக்களின் பொது செயல்பாடுகளுக்காகவும் பல கொடைகளை வழங்கி பல பகுதிகளை வளர்ச்சி அடைய செய்துள்ளனர். அவர்கள் நினைவாகவும், அவர்களை போற்றி நினைவு கூறும் வகையில் அவர்களின் பெயர் உடன் அவர்கள் பயன்படுத்தி வந்த அவர்கள் குல பெயர் உடன் முழுமையாக பெயரை கொண்டு அவர்கள் பெயர் அந்த பகுதி மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப சூட்டப்பட்டது. அதுபோல் விடுதலைப் போராட்ட வீரர்கள், மொழி, மண், மக்களுக்காக போராடிய தியாகிகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக அவர்களின் பெயர்கள் உடன் அவர்கள் பயன்படுத்தி வந்த அவர்கள் சமுதாய மற்றும் குல பெயர் உடன் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஒரு தெருவில், ஒரு ஊரில் குழுவாக நல் உறவு உடன் வசிக்கின்ற மக்கள் அடையாளமாகவும் அந்த பகுதிக்கு அவர்கள் சமூக பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது சாதிய பெயர்களை நீக்குவதாக கூறி அரசு ஒட்டுமொத்தமாக பல சமூகங்களின் அடையாளத்தையே நீக்குவது சமூக ஒற்றுமைக்கும், பல ஆண்டு கால கலாச்சார நடைமுறைக்கும் எதிராக உள்ளது. நமது முன்னோர்கள் செய்த தியாகங்களையும் சீர்குலைத்து அவர்கள் நினைவுகளை மறைக்க வழி செய்வது போல் உள்ளது.
இவ்வாறு பெயர் நீக்குவதிலும் புதிய பெயர் சூட்டுவதிலும் ஆங்காங்கே முரண்பாடுகள் அந்த பகுதி மக்கள் மத்தியில் எழுந்துள்ளன. அதேசமயம் ஒரு சமுதாயத்தின் பெயர் நீக்கப்படும் இடத்தில் அதே சமுதாயத்தைச் சார்ந்த தலைவர்கள் பெயர்தான் சூட்டப்பட வேண்டும். அப்போது தான் அந்தப் பகுதி மக்களிடத்தில் அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை வரும். இது அனைத்து சமுதாயப் பெயர்களுக்கும் பொருந்தும்.
அந்தந்த பகுதி மக்களுக்காக தங்களை அர்ப்பணித்தவர்கள் முழு பெயர்களை அந்தந்த பகுதியில் தான் சூட்ட வேண்டும். அப்போதுதான் அவர்கள் நினைவுகளை அந்த பகுதி மக்கள் நினைவு கூறுவார்கள். அதை தவிர்த்து தன்னிச்சையாக அரசு நிர்வாகம் பெயர் சூட்டுவது ஏற்புடையது அல்ல.
தமிழ்நாடு முழுக்க இப்படி சமூக அடையாள பெயர்களை அகற்ற நினைத்த தமிழக அரசு 9-ஆம் தேதி கோவையில் தமிழக முதல்வர் திறந்து வைத்த மேம்பாலத்திற்கு "ஜி.டி.நாயுடுவின்" பெயரினை வைத்துள்ளது அரசின் அரசாணைக்கு முரண்பாட்டை ஏற்படுத்தி உள்ளது. நாயுடு என்பது சாதிய பெயர் இல்லையா ? அப்படி எனில் தலைவர்களின் பெயருடன் வருகின்ற அவர் அடையாள பெயரும் சாதிய பெயர் அல்ல என கொள்ள வேண்டும்.
சாதியப் பெயர்கள் கூடாது என்ற நிலைப்பாட்டை தமிழக அரசு எடுத்து உள்ளது தமிழ்நாட்டில் பல சமுதாயங்களின் அடையாளங்களை அழிக்கும் செயலாக உள்ளது. சமூக அடையாளத்துடனான ஊர்கள், தெருக்களின் பெயர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறது. காலங்காலமாக இருக்கின்ற இந்த பெயர்களை எல்லாம் நீக்குவது தமிழக மக்கள் இடத்தில் குழப்பத்தையும், முரண்பாடுகளையுமே ஏற்படுத்தும்.
எனவே தமிழக அரசு இந்த விவகாரத்தில் நிதானமாக பொறுமையை கையாண்டு, அந்தந்த பகுதி மக்களின் கருத்தறிந்து முறையாக செயல்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வார இறுதி நாளான கடந்த சனிக்கிழமை தங்கம் விலை உயர்ந்தது.
- தங்கம் விலை கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 11,525 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற-இறக்கத்தில் காணப்படுகிறது. அதிலும் கடந்த சில நாட்களாக தினமும் காலை மற்றும் பிற்பகலில் தங்கம் விலையில் மாற்றம் இருந்து வருகிறது. இதனால் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வந்தது. கடந்த வாரம் விலை அதிகரித்து ஒரு சவரன் ரூ.91 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சியை கொடுத்து இருந்தது. அடுத்த 2 நாட்களுக்கு பிறகு தங்கம் விலை குறைந்தது.
வார இறுதி நாளான கடந்த சனிக்கிழமை தங்கம் விலை உயர்ந்தது. காலையில் தங்கம் விலை கிராமுக்கு 85 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 11,425 ரூபாய்க்கும் சவரனுக்கு 680 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.91,400-க்கும் விற்பனையான நிலையில் மாலையில் மீண்டும் தங்கம் விலை உயர்ந்தது.
மாலையில் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.75 அதிகரித்து, கிராம் ரூ.11,500க்கு விற்பனையானது. சவரனுக்கு ரூ.600 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.92,000க்கு விற்பனையானது. நேற்றும் தங்கம் இதே விலையில் விற்கப்பட்டது.
இந்த நிலையில் தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 11,525 ரூபாய்க்கும் சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.92,200-க்கும் விற்பனையாகிறது.
தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் உச்சம் அடைந்து வருகிறது. அந்த வகையில், இன்று கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 195 ரூபாய்க்கும் கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
12-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 92,000
11-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 92,000
10-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 91,720
09-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 91,400
08-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 91,080

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
12-10-2025- ஒரு கிராம் ரூ.190
11-10-2025- ஒரு கிராம் ரூ.190
10-10-2025- ஒரு கிராம் ரூ.184
09-10-2025- ஒரு கிராம் ரூ.177
08-10-2025- ஒரு கிராம் ரூ.170
- பைசன் படம் படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 17-ம் தேதி வெளியாக உள்ளது.
- இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும்.
இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 17-ம் தேதி வெளியாக உள்ளது.
இன்று இப்படத்தில் டிரெய்லர் வெளியாகும் நிலையில், இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பா. ரஞ்சித், "ராம் சார் தான் மாரி செல்வராஜை என்னிடம் அனுப்பிவைத்தார். மெட்ராஸ் படம் மீது மாரி செல்வராஜூக்கு விமர்சனம் உள்ளது என்று கூறி தான் ராம் என்னிடம் அனுப்பினார். அப்படி தான் மாரி செல்வராஜுடன் எனக்கு அறிமுகம் கிடைத்தது. பரியேறும் பெருமாள் படத்தை விட ஒரு இயக்குநராக பைசன் படத்தில் மாரி செல்வராஜ் வளர்ச்சி அடைந்துள்ளார்" என்று தெரிவித்தார்.






