என் மலர்
தலைப்புச்செய்திகள்
- வார இறுதி நாளான கடந்த சனிக்கிழமை தங்கம் விலை உயர்ந்தது.
- தங்கம் விலை கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 11,525 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற-இறக்கத்தில் காணப்படுகிறது. அதிலும் கடந்த சில நாட்களாக தினமும் காலை மற்றும் பிற்பகலில் தங்கம் விலையில் மாற்றம் இருந்து வருகிறது. இதனால் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வந்தது. கடந்த வாரம் விலை அதிகரித்து ஒரு சவரன் ரூ.91 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சியை கொடுத்து இருந்தது. அடுத்த 2 நாட்களுக்கு பிறகு தங்கம் விலை குறைந்தது.
வார இறுதி நாளான கடந்த சனிக்கிழமை தங்கம் விலை உயர்ந்தது. காலையில் தங்கம் விலை கிராமுக்கு 85 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 11,425 ரூபாய்க்கும் சவரனுக்கு 680 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.91,400-க்கும் விற்பனையான நிலையில் மாலையில் மீண்டும் தங்கம் விலை உயர்ந்தது.
மாலையில் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.75 அதிகரித்து, கிராம் ரூ.11,500க்கு விற்பனையானது. சவரனுக்கு ரூ.600 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.92,000க்கு விற்பனையானது. நேற்றும் தங்கம் இதே விலையில் விற்கப்பட்டது.
இந்த நிலையில் தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 11,525 ரூபாய்க்கும் சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.92,200-க்கும் விற்பனையாகிறது.
தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் உச்சம் அடைந்து வருகிறது. அந்த வகையில், இன்று கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 195 ரூபாய்க்கும் கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
12-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 92,000
11-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 92,000
10-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 91,720
09-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 91,400
08-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 91,080

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
12-10-2025- ஒரு கிராம் ரூ.190
11-10-2025- ஒரு கிராம் ரூ.190
10-10-2025- ஒரு கிராம் ரூ.184
09-10-2025- ஒரு கிராம் ரூ.177
08-10-2025- ஒரு கிராம் ரூ.170
- பைசன் படம் படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 17-ம் தேதி வெளியாக உள்ளது.
- இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும்.
இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 17-ம் தேதி வெளியாக உள்ளது.
இன்று இப்படத்தில் டிரெய்லர் வெளியாகும் நிலையில், இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பா. ரஞ்சித், "ராம் சார் தான் மாரி செல்வராஜை என்னிடம் அனுப்பிவைத்தார். மெட்ராஸ் படம் மீது மாரி செல்வராஜூக்கு விமர்சனம் உள்ளது என்று கூறி தான் ராம் என்னிடம் அனுப்பினார். அப்படி தான் மாரி செல்வராஜுடன் எனக்கு அறிமுகம் கிடைத்தது. பரியேறும் பெருமாள் படத்தை விட ஒரு இயக்குநராக பைசன் படத்தில் மாரி செல்வராஜ் வளர்ச்சி அடைந்துள்ளார்" என்று தெரிவித்தார்.
- பைசன் படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.
- இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும்.
இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 17-ம் தேதி வெளியாக உள்ளது.
இன்று இப்படத்தில் டிரெய்லர் வெளியாகும் நிலையில், இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், "திருநெல்வேலி மாவட்டம் குறித்து என்ன மாதிரியான படம் எடுக்கலாம் என்று யோசித்து கொண்டிருந்தபோது எனக்கு கிடைத்த tool தான் மணத்தி கணேசன் அண்ணா. அவரை உதாரணமாக வைத்து என்னுடைய அரசியலை கலந்து உருவாக்கப்பட்ட படம் தான் பைசன்.
பைசன் படத்திற்குள் தென் மாவட்டத்திற்குள் வாழ்க்கையை தொலைத்த நிறைய இளைஞர்கள் இருக்கிறார்கள். தென் தமிழ்நாட்டின் அரசியலை மையப்படுத்திய படம்தான் பைசன்
பைசன் படத்தின் வெற்றியை விட இப்படம் இந்த சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.
- இன்றைய முக்கியச் செய்திகள்.
- இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
- பரியேறும் பெருமாள் படத்திற்கு பிறகு நான் மாரி செல்வராஜ் சாரின் fan ஆக மாறிவிட்டேன்.
- பைசனுக்கு முந்தைய அனுபமா வேற.. பைசனுக்கு பிறகான அனுபமா வேற
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும்.
இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 17-ம் தேதி வெளியாக உள்ளது.
இன்று இப்படத்தில் டிரெய்லர் வெளியாகும் நிலையில், இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய அனுபமா பரமேஸ்வரன், "பரியேறும் பெருமாள் படத்தில் நடிக்க ரஞ்சித் சார் எனக்கு கால் செய்தார். அந்த சமயத்தில் நான் மாரி செல்வராஜ் சாரிடம் நான் பேசினேன். அனால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது என்னுடைய துரதிஷ்டம். அதற்காக நான் ரொம்ப வருத்தப்பட்டேன். பரியேறும் பெருமாள் படத்திற்கு பிறகு நான் மாரி செல்வராஜ் சாரின் fan ஆக மாறிவிட்டேன். அதன்பிறகு நீங்கள் என்னை படத்தில் நடிக்க கூப்பிடுவீர்கள் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் பைசன் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது.
பைசனுக்கு முந்தைய அனுபமா வேற.. பைசனுக்கு பிறகான அனுபமா வேற... ஒரு நடிகராக வித்தியாசமான கண்ணோட்டத்தை மாரி செல்வராஜ் சார் எனக்கு கொடுத்தார்.
- கஷ்டமான காட்சிகள் நடிக்கும்போது சியானை நினைத்துக்கொள்வேன்.
- மாரி செல்வராஜ் 'டேக் ஓகே' என்று சொன்னாலே எனக்கு வாழ்க்கையில ஏதோ சாதிச்ச மாதிரி இருக்கும்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும்.
இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 17-ம் தேதி வெளியாக உள்ளது.
இன்று இப்படத்தில் டிரெய்லர் வெளியாகும் நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய துருவ் விக்ரம், "கஷ்டமான காட்சிகள் நடிக்கும்போது சியானை நினைத்துக்கொள்வேன். என் அப்பாவுடன் என்னை ஒப்பிட முடியாது. இருந்தாலும் அவரை போல நடிக்க நான் தொடர்ந்து முயற்சிப்பேன்.
பைசன் படத்தைக் கொடுத்ததற்கு என் குரு, இயக்குனர் மாரிசெல்வராஜ் சாருக்கு நன்றி. நான் இப்படத்திற்காக 2-3 வருடங்கள் காத்திருந்தேன் என்று சிலர் கூறுகிறார்கள், இதற்காக நான் 10 வருடங்கள் கூட காத்திருப்பேன். பைசன் படப்பிடிப்பின் போது மாரி செல்வராஜ் 'டேக் ஓகே' என்று சொன்னாலே எனக்கு வாழ்க்கையில ஏதோ சாதிச்ச மாதிரி இருக்கும். உங்களுடன் மீண்டும் பணியாற்ற நான் காத்திருக்கிறேன்" என்று தெரிவித்தார்.
- தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
- அண்ணா நகர், காஞ்சிபுரத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்தை உட்கொண்ட 24 பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தது அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பான விசாரணையில், காஞ்சிபுரம் அடுத்த சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிப் இருமல் மருந்தில், தடை செய்யப்பட்ட ரசாயனம் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதனையடுத்து தலைமறைவாக இருந்த ஸ்ரீசன் பார்மா நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் சென்னை அசோக் நகரில் கைது செய்யப்பட்டார். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரங்கநாதனுக்கு, டிரான்சிட் வாரண்ட் வழங்கியதையடுத்து, மத்திய பிரதேசம் போலீசார் அவரை அம்மாநிலத்துக்கு அழைத்து சென்றனர்.
இந்நிலையில் கோல்ட்ரிப் இருமல் மருந்து தயாரித்த ஸ்ரீசன் பார்பா உரிமையாளர் ரங்கநாதன் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கோடம்பாக்கத்தில் உள்ள ரங்கநாதன் வீடு மற்றும் அண்ணா நகர், காஞ்சிபுரத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை அண்ணா நகரில் உள்ள மருந்து நிர்வாகத்துறை இணை இயக்குநர் கார்த்திகேயன் வீடு, தமிழக மருந்து தரக்கட்டுப்பாட்டு நிர்வாக இயக்குநர் தீபா ஆகியோர் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.
- சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
- திருவெம்பல் ஸ்ரீசிவபெருமான் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு புரட்டாசி-27 (திங்கட்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : சப்தமி மாலை 6.18 மணி வரை பிறகு அஷ்டமி.
நட்சத்திரம் : திருவாதிரை மாலை 6.39 மணி வரை பிறகு புனர்பூசம்.
யோகம் : சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்
சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம். திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் புறப்பாடு கண்டருளல். திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். திருவெம்பல் ஸ்ரீசிவபெருமான் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சன்னதியில் ஸ்ரீகருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் கொலுதர்பார் காட்சி.
திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத்சுந்தரகுசாம்பாள் சமேத ஸ்ரீமகாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீகற்பகாம்பாள் சமேத ஸ்ரீகபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீதிரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீமருந்தீஸ்வரர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. நத்தம் வரகுணவல்லித்தாயார் சமேத ஸ்ரீவிஜயாசனப் பெருமாளுக்கு காலை அலங்கார திருமஞ்சன சேவை. திருச்சேறை ஸ்ரீசாரநாதர் புறப்பாடு. கோவில்பட்டி ஸ்ரீசெண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீபூவண்ணநாதருக்கு காலையில் பால் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-மேன்மை
ரிஷபம்-போட்டி
மிதுனம்-புகழ்
கடகம்-ஊக்கம்
சிம்மம்-விருத்தி
கன்னி-ஆதரவு
துலாம்- ஆர்வம்
விருச்சிகம்-ஆசை
தனுசு- நன்மை
மகரம்-நற்சிந்தனை
கும்பம்-வரவு
மீனம்-ஆக்கம்
- கூட்ட நெரிசலில் சிக்கி 5 பெண்கள் உட்பட 8 பயணிகள் காயமடைந்தனர்.
- இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் உள்ள பர்தமான் ரயில் நிலையத்தில் நேற்று மாலை 4 மற்றும் 5வது நடைமேடைகளில் ஒரே நேரத்தில் ரெயில்கள் வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
ரெயில்களில் ஏறவும் இறங்கவும் பயணிகள் முண்டியடித்து முயன்றதால் பலர் கீழே விழுந்து மிதிபட்டு காயமடைந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி 5 பெண்கள் உட்பட 8 பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு ரெயில்வே மருத்துவர்கள் முதலுதவி அளித்த பின்னர் சிகிச்சைக்காக பர்தாமன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பண்டிகை கால கூட்டம் காரணமாக ரெயில் நிலையில் நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகளைத் தடுப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
- சட்டசபை கூட்டம் எத்தனை நாட்கள் நடக்கும் என்பதை அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்ய உள்ளது.
- சட்டசபை கூட்டத்தொடரில் காசா போர் நிறுத்தம் தொடர்பாக தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.
சென்னை:
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் ஜனவரி மாதம் 6-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டம் 4 நாட்கள் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து மார்ச் 14-ந் தேதி சட்டசபையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் ஆனது. அதைத்தொடர்ந்து, மார்ச் 17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை 2 பட்ஜெட்டுகள் மீதான பொது விவாதம் நடைபெற்றது.
மார்ச் 24-ந் தேதி முதல் ஏப்ரல் 29-ந் தேதிவரை துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடந்தன. பின்னர் தேதி குறிப்பிடாமல் சட்டசபை கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில் 6 மாத கால இடைவெளியில் சட்டசபை மீண்டும் கூட்டப்பட வேண்டும் என்ற அவை விதியின் அடிப்படையில், தமிழக சட்டசபை மீண்டும் நாளை கூடுகிறது.
சட்டசபை கூடியதும், மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கற்குறிப்பு வாசிக்கப்படுகிறது. கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்படுகிறது.
அதனைத்தொடர்ந்து, வால்பாறை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த அமுல் கந்தசாமி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவை அலுவல்கள் ஒத்திவைக்கப்படுகிறது.
சட்டசபை கூட்டம் எத்தனை நாட்கள் நடக்கும் என்பதை அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்ய உள்ளது. இதற்கான கூட்டம், சபாநாயகர் அறையில் இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு நடக்க உள்ளது. சட்டசபை கட்சிகளின் தலைவர்கள், கொறடாக்கள் பங்கேற்கிறார்கள். 15, 16 மற்றும் 17 ஆகிய 3 நாட்கள் அவை நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சட்டசபை கூட்டத்தொடரில் காசா போர் நிறுத்தம் தொடர்பாக தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. சட்டசபை தேர்தல் நெருங்குவதால் இந்த கூட்டத்தில் காரசார விவாதத்திற்கு பஞ்சம் இருக்காது.
- முகநூல் பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் நீதிபதிக்கு எதிராக சில கருத்துக்களை பதிவு செய்திருந்தார்.
- நிர்மல்குமாரை உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என த.வெ.க.வினர் கோஷமிட்டனர்.
கரூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு த.வெ.க. தலைவர் விஜய் கலந்து கொண்ட பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது. கரூர் சம்பவம் தொடர்பாக விஜய் குறித்து சில கருத்துக்களை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி செந்தில்குமார் தெரிவித்து இருந்தார்.
இந்தநிலையில் சாணார்பட்டி அருகே உள்ள பெத்தாம்பட்டியை சேர்ந்த திண்டுக்கல் தெற்கு மாவட்ட த.வெ.க. செயலாளரான நிர்மல்குமார் (வயது 35). இவர், முகநூல் பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் நீதிபதிக்கு எதிராக சில கருத்துக்களை பதிவு செய்திருந்தார். இது சமூக வலைதளங்களில் பரவியது.
இதைத்தொடர்ந்து சாணார்பட்டி போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து, நிர்மல்குமாரை கைது செய்தனர்.
த.வெ.க. மாவட்ட செயலாளர் நிர்மல் குமார் கைது செய்யப்பட்டு பல மணி நேரமாகியும் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வருவதாக அக்கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிர்மல்குமாரை உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என த.வெ.க.வினர் கோஷமிட்டனர். காவல்துறையை கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்ட த.வெ.க.வினரை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். பின்னர் அவர்களை விடுதலை செய்தனர்.
இந்நிலையில் ஜே3 நீதிமன்ற நீதிபதி ஆனந்தி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட திண்டுக்கல் தெற்கு த.வெ.க. மாவட்ட செயலாளர் நிர்மல்குமாருக்கு வரும் 24-ந்தேதி வரை நீதிமன்ற காவல் அளித்து அவர் உத்தரவிட்டார். இதையடுத்து நிர்மல்குமார் சிறையில் அடைக்கப்பட்டார்.
- இந்திய அதிகாரிகளுக்கு அதானி குழுமம் ரூ.2100 கோடி லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்தது.
- இந்த புகாரை அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனைகள் ஆணையம் விசாரித்து வருகிறது.
மத்திய அரசின் நிறுவனத்திடம் இருந்து சூரிய ஒளி மின்சாரத்தைத் தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தத்தை பெற தமிழ்நாடு உட்பட இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களின் மின் வாரிய அதிகாரிகளுக்கு ரூ.2100 கோடி லஞ்சம் கொடுத்து, அமெரிக்க முதலீட்டாளர்களை அதானி குழுமம் தவறாக வழிநடத்தி சுமார் 750 மில்லியன் டாலர்கள் நிதி திரட்டியதாக அமெரிக்காவின் FCPA சட்டத்தின் கீழ் நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.
இதனிடையே கெளதம் அதானிக்கு சொந்தமான அதானி க்ரீன் நிறுவனம், டெல்லியை தலைமையிடமாக கொண்ட அஷ்யூா் பவா் நிறுவனம் மீது அமெரிக்க பங்கு பரிவா்த்தனை பாதுகாப்பு அமைப்பு இரு வழக்குகளை தொடுத்துள்ளது.
இந்த வழக்கில் கெளதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி, வினீத் ஜெயின், ரஞ்சித் குப்தா, செளரவ் அகர்வால் உள்பட 7 பேரின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அமெரிக்க முதலீட்டாளர்களிடம் மோசடி செய்து அதானி குழுமம் நிதி திரட்டிய புகாரை விசாரித்து வரும் அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனைகள் ஆணையம், இந்திய அரசு இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என நியூயார்க் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.






