என் மலர்
தலைப்புச்செய்திகள்
- அமைதிக்கான நோபல் பரிசுக்குக்கு வெனிசுலா நாட்டின் மரியா கொரினா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- அமைதிக்கான நோபல் பரிசை மரியா டிரம்புக்கு அர்ப்பணித்தார்
உலகின் உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகியவற்றுக்காக வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 2025-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த வருடத்திற்கான அமைதிக்கான நோபல் பரிசுக்குக்கு வெனிசுலா நாட்டின் மரியா கொரினா மச்சாடோ (Maria Corina Machado) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது வெனிசுலா நாட்டு அரசியல்வாதியான இவர் அந்நாட்டின் எதிர்கட்சித் தலைவராக உள்ளார்.
தனக்கு வழங்கிய அமைதிக்கான நோபல் பரிசை ட்ரம்புக்கும் அர்ப்பணிக்கிறேன் என நோபல் பரிசு வென்ற வெனிசுலா எதிர்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ தெரிவித்தார்.
இந்நிலையில், நார்வேயில் உள்ள தூதரகத்தை மூடுவதாக வெனிசுலா அறிவித்துள்ளது. நார்வே அரசின் தன்னாட்சி அமைப்பான நோபல் கமிட்டி வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினாவுக்கு பரிசு அறிவித்ததற்கு அந்நாட்டு அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
- இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்.
- சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள முக்கிய தலைவர்கள், பிரபலங்கள், நிறுவனங்களுக்கு தினந்தோறும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. போலீசார் மெயில் ஐ.டி.யை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்துள்ளது.
- புதிய ஸ்மார்ட்வாட்ச் ஒரே கிளிக்கில் குயிக் ரிலீஸ் ஸ்டிராப் மெக்கானிசம் கொண்டிருக்கிறது.
- ப்ளூடூத் மட்டும், பயன்படுத்தும் போது இந்த வாட்ச் 33 நாட்கள் வரை பேக்கப் வழங்கும்.
விவோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட X300 சீரிஸ் ஸ்மார்ட்போனுடன் முற்றிலும் புதிய ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய விவோ ஸ்மார்ட்வாட்ச் அலுமினிய அலாய் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இந்த வாட்ச் GT2 என அழைக்கப்படுகிறது.
அம்சங்களை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் 2.5D வளைந்த 2.07-இன்ச் AMOLED ஸ்கிரீன் மற்றும் சதுரங்க டயல் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது 2400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் ப்ளூடூத், இசிம் (eSIM) ஆப்ஷன்களில் வருகிறது.
விவோ வாட்ச் GT2 மாடல் ப்ளூ ஓஎஸ் 3.0 மூலம் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் தொழில்முறை பயிற்சியாளர்கள் மற்றும் படிப்புகளுடன் 100 க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட்களை ஆதரிக்கிறது. இந்த வாட்ச் பல்வேறு வண்ணங்களில் வருகிறது. இத்துடன் பொருந்தக்கூடிய வாட்ச் டயல்கள் உள்ளன.
மேலும் புதிய ஸ்மார்ட்வாட்ச் ஒரே கிளிக்கில் குயிக் ரிலீஸ் ஸ்டிராப் மெக்கானிசம் கொண்டிருக்கிறது. இசிம் பயன்படுத்தும் பட்சத்தில், இது 8 நாட்கள் வரை பேட்டரி பேக்கப் வழங்குகிறது. மேலும் ப்ளூடூத் மட்டும், பயன்படுத்தும் போது இந்த வாட்ச் 33 நாட்கள் வரை பேக்கப் வழங்கும்.
விலை விவரங்கள்:
புதிய விவோ வாட்ச் GT2 புளூ, ஸ்பேஸ் வைட், பிளாக் மற்றும் பின்க் வண்ணங்களில் வருகிறது. இதன் ப்ளூடூத் வேரியண்ட் விலை CNY 499 (இந்திய மதிப்பில் ரூ. 6,220) ஆகவும், இசிம் வேரியண்ட் விலை CNY 699 (இந்திய மதிப்பில் ரூ. 8,710) ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- மழைக்காலம் முடிந்ததும் அடுத்தாண்டு ஜனவரி முதல் பணிகளை மேற்கொள்ள மெட்ரோ நிறுவனத்திற்கு அறிவுறுத்தினார்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மெட்ரோ ரெயில் செயல்பட்டு வருகிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து மீனம்பாக்கம் வரையில் ஒரு வழித்தடமும், விம்கோ நகரில் இருந்து மீனம்பாக்கம் வரையில் மற்றொரு வழித்தடமும் செயல்பட்டு வருகிறது. இதில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர்.
இதனிடையே, மாதவரம்- சோழிங்கநல்லூர் வரையிலும், கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பல பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், நாளை முதல் மெட்ரோ ரெயில் பணிகளுக்கு தடை விதிப்பதாக சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மேயர் பிரியா கூறுகையில், சென்னையில் பண்டிகை கால கூட்ட நெரிசல் மற்றும் மழைக்காலத்தை கருத்தில் கொண்டு நாளை முதல் மெட்ரோ பணிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. மழைக்காலம் முடிந்ததும் அடுத்தாண்டு ஜனவரி முதல் பணிகளை மேற்கொள்ள மெட்ரோ நிறுவனத்திற்கு அறிவுறுத்தினார்.
- தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 101 இடங்களில் போட்டியிடுகிறது.
- ஐக்கிய ஜனதா தளம் 101 இடங்களிலும், சிராக் பஸ்வான் கட்சி 29 இடங்களிலும் பேட்டியிடுகிறது.
பீகார் மாநில சட்டசபை தேர்தல் நவம்பர் மாதம் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம், சிராக் பஸ்வானின் லோக் ஜன சக்தி உள்ளிட்ட கட்சிகள் இடம் பிடித்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன்னதாக தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவடைந்தது. பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளுக்கு தலா 101 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிராக் கட்சிக்கு 29 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் 101 இடங்களில் 71 இடங்ளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. துணை முதல்வர் சம்ராத் சவுத்ரி தாராபூரில் போட்டியிடுகிறார். அமைசசர் மங்கல் பாண்டே சிவான் தொகுதியில் போட்டியிடுகிறார்.
- அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட 'அ.தி.மு.க' வருகிற 17-ந்தேதி அன்று 54-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
- கழகத்தின் தொடக்க நாளை விழாக்கோலத்துடன் கொண்டாடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
சென்னை:
அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட ''அ.தி.மு.க.'' வருகிற 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று 54-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதைக் கொண்டாடும் வகையில் அன்று காலை 10 மணியளவில், சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலை, தலைமைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது உருவச் சிலைகளுக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி, கழகக் கொடியினை ஏற்றி வைத்து, இனிப்பு வழங்க உள்ளார்.
இந்த நிகழ்ச்சிகளில், பெருந்திரளாகக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
அதேபோல் கழகத்தின் 54-வது ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு ஆங்காங்கே கம்பீரமாக வீற்றிருக்கும் கழக கொடிக் கம்பங்களுக்கு புதுவர்ணம் பூசியும், கொடிக்கம்பங்கள் இல்லாத இடங்களில் புதிய கொடிக் கம்பங்களை அமைத்து கழகக் கொடியினை ஏற்றி வைத்தும், நம் இருபெரும் தெய்வங்களான புரட்சித் தலைவர் எம்.ஜி. ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கியும், ஏழை, எளியோருக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கியும் சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்வதோடு, கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பிற மாநிலங்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி, கழகத்தின் தொடக்க நாளை விழாக்கோலத்துடன் கொண்டாடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- புதிய டிஃபென்டர் சாண்ட்க்ளோ எல்லோ மற்றும் கெஸ்விக் கிரீன் வெளிப்புற ஷேட்களில் வருகிறது.
- 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஸ்டான்டர்டு 4-வீல் டிரைவ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
லேண்ட் ரோவர் இந்தியா நிறுவனம் அதன் டிஃபென்டர் காரின் 110 டிராபி மாடல் விலையை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய சந்தையில் புதிய டிஃபென்டர் 110 டிராபி மாடலின் விலை ரூ. 1.39 கோடி (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயித்துள்ளது.
இது ஸ்டான்டர்டு X-டைனமிக் HSE வேரியண்ட்டை விட ரூ. 4 லட்சம் அதிகமாக உள்ளது. டிராபி மாடல் முதன்முதலில் ஜூன் 2025-இல் வெளியிடப்பட்டது. இப்போது இந்த மாடல் சற்றே விலை உயர்ந்த ஸ்டைலிங் தொகுப்புடன் சந்தைக்கு வருகிறது.
டிஃபென்டர் 110 டிராபி மாடலில் புதியது என்ன?
புதிய டிஃபென்டர் சாண்ட்க்ளோ எல்லோ மற்றும் கெஸ்விக் கிரீன் வெளிப்புற ஷேட்களில் வருகிறது. இது டிராபி எடிஷன் டெக்கல்கள், பிளாக்டு-அவுட் கிளாடிங், கிளாஸ் பிளாக் கிரில் மற்றும் டார்க் கிரே ஃபினிஷ் செய்யப்பட்ட 20 இன்ச் அலாய் வீல்களை கொண்டுள்ளது. உள்புறம், பிரீமியம் பொருட்கள், எம்போஸ்டு பிராண்டிங் மற்றும் பிரத்யேக நிலையை பிரதிபலிக்கும் வகையில் தீம் மூலம் கேபின் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

பவர்டிரெய்ன் மற்றும் செயல்திறன்
இயந்திர ரீதியாக, டிராபி மாடலில் 3.0-லிட்டர், இன்லைன்-6 டீசல் எஞ்சின் (மைல்ட்-ஹைப்ரிட் அசிஸ்ட்) மூலம் இயக்கப்படுகிறது. இது 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஸ்டான்டர்டு 4-வீல் டிரைவ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 345bhp பவர் /700Nm டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 6.4 நொடிகளில் எட்டிவிடும்.
- நக்சலைட்கள், மாவோயிஸ்டுகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- இதனால் மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்து வருகின்றனர்.
மும்பை:
இந்தியாவில் அடுத்த ஆண்டுக்குள் நக்சல்கள், மாவோயிஸ்ட்கள் முற்றிலும் ஒழிக்கப்படுவார்கள் என உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்திருந்தார்.
நக்சலைட்கள், மாவோயிஸ்டுகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் மாவோயிஸ்டுகள் இயக்க தலைவர்கள் பலர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்து வருகின்றனர்.
சத்தீஸ்கர் உள்பட பல்வேறு மாநிலங்களில் ஏராளமான மாவோயிஸ்டுகள் அடுத்தடுத்து சரணடைந்தும் வருகின்றனர்.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள கட்ச்ரோலி மாவட்டத்தில் அந்த அமைப்பின் பொலிட்பீரோ உறுப்பினர் சோனு என்ற மல்லோஜூல வேணுகோபால ராவ் தலைமையில் 60 மாவோயிஸ்டுகள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்தனர்.
- ஒப்பந்தத்தை தற்காலிகமாக நீட்டிக்க எண்ணெய் நிறுவனங்கள் ஒப்புதல் அளித்ததால் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
- இருதரப்பு இடையே சமரசம் ஏற்பட்டதால் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு தடைகோரிய வழக்கை ஐகோர்ட் முடித்து வைத்தது.
நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தென்மண்டல எல்.பி.ஜி.கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 9-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த போராட்டம் இன்று 6-வது நாளாக நீடித்தது. இதன் காரணமாக கியாஸ் டேங்கர் லாரிகள் சாலை ஓரங்கள் மற்றும் பட்டறைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கியாஸ் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சிலிண்டர்களில் கியாஸ் நிரப்பும் தொழிற்சாலைகளுக்கு கியாஸ் கொண்டு செல்லும் பணி முற்றுலுமாக முடங்கியுள்ளது. எனவே தமிழகம் உள்பட தென்மாநிலங்களில் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
இந்நிலையில் இது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, எல்.பி.ஜி. கியாஸ் டேங்கர் லாரிகளுக்கான ஒப்பந்தத்தை தற்காலிகமாக 2026 மார்ச் வரை நீட்டிக்க எண்ணெய் நிறுவனங்கள் ஒப்புதல் அளித்தது.
புதிய டெண்டர் பணிகள் நிறைவடையாததால் தற்போதைய ஒப்பந்தத்தை அடுத்தாண்டு மார்ச் வரை நீட்டிக்க எண்ணெய் நிறுவனங்கள் சம்மதம் தெரிவித்தன.
ஒப்பந்தத்தை தற்காலிகமாக நீட்டிக்க எண்ணெய் நிறுவனங்கள் ஒப்புதல் அளித்ததால் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
2026 மார்ச் மாதம் வரை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என டேங்கர் லாரிகள் சங்கத்திற்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
இருதரப்பு இடையே சமரசம் ஏற்பட்டதால் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு தடைகோரிய வழக்கை ஐகோர்ட் முடித்து வைத்தது.
இதையடுத்து 6 நாட்களாக நடைபெற்று வந்த எல்.பி.ஜி. கியாஸ் டேங்கர் லாரி வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.
- பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை பார்த்து 'சரிதானே? என டிரம்ப் கேட்டார்.
- இந்தியா ஒரு சிறந்த நாடு, என்னுடைய நண்பர் அங்கே உச்சப் பதவியில் இருக்கிறார்
அமெரிக்க அதிபர் டொனாலடு டிரம்ப் தலைமையில் எகிப்தின் ஷர்ம் அல்-ஷேக்கில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி உச்சிமாநாட்டில் காசா போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் எகிப்து அதிபர் அப்துல் ஃபத்தா அல்-சிசி, துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் மற்றும் கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி ஆகியோர் கையெழுத்திட்டனர்.
காசா அமைதி ஒப்பந்தம் குறித்த மாநாட்டில் பேசிய டிரம்ப், "பாகிஸ்தானும் இந்தியாவும் ஒன்றாக வாழ்வார்கள் என நம்புகிறேன்" என கூறிவிட்டு, பின்புறம் இருந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை பார்த்து 'சரிதானே? என கேட்டார்.
இதனை தொடர்ந்து பேசிய டிரம்ப், "இந்தியா ஒரு சிறந்த நாடு, என்னுடைய நண்பர் அங்கே உச்சப் பதவியில் இருக்கிறார். அவர் அற்புதமான வேலைகளை செய்கிறார்" என்று தெரிவித்தார்.
- தீபாவளி டபுள் தமாக்கா சலுகை வருகிற 21ஆம் தேதி வரை கிடைக்கும்.
- ஒரு அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள தங்க வவுச்சரை வெல்லும் வாய்ப்பும் உள்ளது.
தீபாவளி பண்டியையொட்டி ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் அதன் மாடல்களை வாங்குபவர்களுக்கு ரொக்க சலுகைகள் மற்றும் ரூ. 1 லட்சம் வரை மதிப்புள்ள பரிசுகளை வழங்குகிறது. ரிவோல்ட் அதன் மின்சார மோட்டார்சைக்கிள்களுக்கு ரூ.13,000 வரை தள்ளுபடியையும், ரூ. 7,000 வரை மதிப்புள்ள இலவச காப்பீட்டையும் வழங்குகிறது.
அனைவரையும் ஆர்வமாக வைத்திருக்க, சலுகை காலம் முழுவதும் ஒவ்வொரு வாங்குபவருக்கும் உறுதியான பரிசுகள் கிடைக்கும் என்று நிறுவனம் உறுதிபட கூறியுள்ளது. இந்த பண்டிகை கால சலுகைகளில் தொலைக்காட்சிகள், மடிக்கணினிகள், ஸ்மார்ட்போன்கள், மைக்ரோவேவ்கள், ஸ்மார்ட்வாட்ச்கள், வெள்ளி நாணயங்கள் மற்றும் ரிவோல்ட் பொருட்கள் ஆகியவை அடங்கும். ஒரு அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள தங்க வவுச்சரை வெல்லும் வாய்ப்பும் உள்ளது.
தீபாவளி டபுள் தமாக்கா சலுகை வருகிற 21ஆம் தேதி வரை கிடைக்கும். வாடிக்கையாளர்கள் தங்கள் மோட்டார்சைக்கிள்களை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் அல்லது அருகிலுள்ள ரிவோல்ட் ஹப்பைப் பார்வையிட்டு வாங்கலாம். பண்டிகைக் கால சலுகைகளைப் பெறலாம்.
பண்டிகை காலம் முழுக்க மின்சார பைக்குகளை வாங்குபவர்களை பெரிய அளவிலான கொள்முதல்களை ஊக்குவிக்கும் என்பதால், நிறுவனம் அதன் மின்சார மோட்டார்சைக்கிள்களுக்கான விற்பனையை அதிகரிக்க முடியும்.
- உலகக் கோப்பைக்கு இரண்டரை ஆண்டுகள் உள்ளன.
- ஆஸ்திரேலிய தொடருக்கு ரோகித், விராட் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி. இருவரும் 20 ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டனர். ஒருநாள் ஆட்டத்தில் மட்டுமே விளையாட உள்ளனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வருகிற 19- ந் தேதி தொடங்கும் 3 போட்டிக்கொண்ட ஒரு நாள் தொடரில் ரோகித் சர்மாவும், விராட் கோலியியும் தேர்வு பெற்றுள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் சர்வதேச போட்டியில் ஆட இருக்கிறார்கள்.
இதனால் இந்த தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் வெற்றிகரமாக அமையும் என்று நம்புகிறேன் என இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
உலகக் கோப்பைக்கு இரண்டரை ஆண்டுகள் உள்ளன. நாம் இப்போதைக்கு எது முக்கியம் என்பதை யோசிக்க வேண்டும். இந்த விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் வெற்றிகரமாக அமையும் என்று நம்புகிறேன்.
என கம்பீர் கூறினார்.






