என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    உலகக் கோப்பைக்கு இரண்டரை ஆண்டுகள் உள்ளன.. ரோகித்- விராட் குறித்து ட்விஸ்ட் வைத்த கம்பீர்
    X

    உலகக் கோப்பைக்கு இரண்டரை ஆண்டுகள் உள்ளன.. ரோகித்- விராட் குறித்து ட்விஸ்ட் வைத்த கம்பீர்

    • உலகக் கோப்பைக்கு இரண்டரை ஆண்டுகள் உள்ளன.
    • ஆஸ்திரேலிய தொடருக்கு ரோகித், விராட் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளனர்.

    இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி. இருவரும் 20 ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டனர். ஒருநாள் ஆட்டத்தில் மட்டுமே விளையாட உள்ளனர்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வருகிற 19- ந் தேதி தொடங்கும் 3 போட்டிக்கொண்ட ஒரு நாள் தொடரில் ரோகித் சர்மாவும், விராட் கோலியியும் தேர்வு பெற்றுள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் சர்வதேச போட்டியில் ஆட இருக்கிறார்கள்.

    இதனால் இந்த தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் வெற்றிகரமாக அமையும் என்று நம்புகிறேன் என இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    உலகக் கோப்பைக்கு இரண்டரை ஆண்டுகள் உள்ளன. நாம் இப்போதைக்கு எது முக்கியம் என்பதை யோசிக்க வேண்டும். இந்த விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் வெற்றிகரமாக அமையும் என்று நம்புகிறேன்.

    என கம்பீர் கூறினார்.

    Next Story
    ×