என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Revolt Motors"

    • தீபாவளி டபுள் தமாக்கா சலுகை வருகிற 21ஆம் தேதி வரை கிடைக்கும்.
    • ஒரு அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள தங்க வவுச்சரை வெல்லும் வாய்ப்பும் உள்ளது.

    தீபாவளி பண்டியையொட்டி ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் அதன் மாடல்களை வாங்குபவர்களுக்கு ரொக்க சலுகைகள் மற்றும் ரூ. 1 லட்சம் வரை மதிப்புள்ள பரிசுகளை வழங்குகிறது. ரிவோல்ட் அதன் மின்சார மோட்டார்சைக்கிள்களுக்கு ரூ.13,000 வரை தள்ளுபடியையும், ரூ. 7,000 வரை மதிப்புள்ள இலவச காப்பீட்டையும் வழங்குகிறது.

    அனைவரையும் ஆர்வமாக வைத்திருக்க, சலுகை காலம் முழுவதும் ஒவ்வொரு வாங்குபவருக்கும் உறுதியான பரிசுகள் கிடைக்கும் என்று நிறுவனம் உறுதிபட கூறியுள்ளது. இந்த பண்டிகை கால சலுகைகளில் தொலைக்காட்சிகள், மடிக்கணினிகள், ஸ்மார்ட்போன்கள், மைக்ரோவேவ்கள், ஸ்மார்ட்வாட்ச்கள், வெள்ளி நாணயங்கள் மற்றும் ரிவோல்ட் பொருட்கள் ஆகியவை அடங்கும். ஒரு அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள தங்க வவுச்சரை வெல்லும் வாய்ப்பும் உள்ளது.

    தீபாவளி டபுள் தமாக்கா சலுகை வருகிற 21ஆம் தேதி வரை கிடைக்கும். வாடிக்கையாளர்கள் தங்கள் மோட்டார்சைக்கிள்களை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் அல்லது அருகிலுள்ள ரிவோல்ட் ஹப்பைப் பார்வையிட்டு வாங்கலாம். பண்டிகைக் கால சலுகைகளைப் பெறலாம்.

    பண்டிகை காலம் முழுக்க மின்சார பைக்குகளை வாங்குபவர்களை பெரிய அளவிலான கொள்முதல்களை ஊக்குவிக்கும் என்பதால், நிறுவனம் அதன் மின்சார மோட்டார்சைக்கிள்களுக்கான விற்பனையை அதிகரிக்க முடியும்.

    • ரெவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் RV400 மாடலின் முன்பதிவு கட்டணம் ரூ. 2 ஆயிரத்து 499 ஆகும்.
    • ரெவோல்ட் RV400 மாடலில் 3 கிலோவாட் ஹவர் பேட்டரி, 5 கிலோவாட் பவர் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ரெவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் தனது RV400 எலெக்ட்ரிக் பைக் மாடலுக்கான முன்பதிவை மீண்டும் துவங்கியது. புதிய ரெவோல்ட் RV400 முன்பதிவு கட்டணம் ரூ. 2 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இந்த மாடலுக்கான வினியோகம் மார்ச் 31 ஆம் தேதிக்குள் வினியோகம் செய்யப்படுகிறது.

    சமீபத்தில் தான் ரெவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தை ரத்தன்இந்தியா எண்டர்பிரைசஸ் நிறுவனம் முழுமையாக விலைக்கு வாங்கியது. இந்த எலெக்ட்ரிக் பைக் ஹரியானா மாநிலத்தில் உள்ள ரெவோல்ட் உற்பத்தி ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.

     

    ரெவோல்ட் RV400 மாடலில் 3 கிலோவாட் ஹவர் பேட்டரி, 5 கிலோவாட் பீக் பவர் வெளிப்படுத்தும் மோட்டார் வழங்கப்படுகிறது. இது 54 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் மணிக்கு அதிகபட்சம் 85 கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது. இந்த எலெக்ட்ரிக் பைக் யுஎஸ்டி ஃபோர்க், மோனோஷாக் சஸ்பென்ஷன் கொண்டுள்ளது.

    இத்துடன் முன்புறம் மற்றும் பின்புறம் டிஸ்க் பிரேக் மற்றும் CDS வழங்கப்பட்டுள்ளது. ரெவோல்ட் RV400 மாடல் முழு சார்ஜ் செய்தால் 150 கிலோமீட்டர் வரை செல்கிறது. இதில் உள்ள பேட்டரியை 4.5 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும். ரெவோல்ட் RV400 மாடல்- ரெவோல்ட், ரிபெல், ரேஜ் மற்றும் ரோர் என நான்கு வித சத்தங்களை வெளிப்படுத்துகிறது.

    ரைடிங் மோட்களை பொருத்தவரை இகோ, ஸ்போர்ட் மற்றும் பவர் என மூன்று வித ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. மற்ற அம்சங்களாக எல்இடி ஹெட்லேம்ப்கள், டிஜிட்டல் கன்சோல், கீலெஸ் இக்னிஷன், மாற்றக்கூடிய பேட்டரி பேக் வழங்கப்படுகிறது. தற்போது ரெவோல்ட் RV400 விலை ரூ. 1 லட்சத்து 29 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • ரெவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆறாவது ஆண்டு விழாவை ஒட்டி இந்த மாடல் அறிமுகம்.
    • ஸ்டெல்த் பிளாக் லிமிடெட் எடிஷன் மாடலில் காஸ்மடிக் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    ரெவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் முற்றிலும் புதிய RV400 ஸ்டெல்த் பிளாக் லிமிடெட் எடிஷன் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. புதிய ஸ்டெல்த் பிளாக் எடிஷன் மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ரெவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆறாவது ஆண்டு விழாவை ஒட்டி இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    இதன் விலை அதன் ஸ்டான்டர்டு எடிஷன் மாடலை விட ரூ. 5 ஆயிரம் அதிகம் ஆகும். இதில் கருப்பு நிறத்தால் ஆன காஸ்மெடிக் மாற்றங்கள், சஸ்பென்ஷனுக்கு புதிய நிறங்கள் மற்றும் கூடுதல் அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன. இந்த மோட்டார்சைக்கிள் குறைந்த எண்ணிக்கையில் தான் வழங்கப்படும் என்றும் வினியோகம் அக்டோபர் மாதம் துவங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

     

    ஸ்டெல்த் பிளாக் லிமிடெட் எடிஷன் மாடலில் காஸ்மடிக் மாற்றங்கள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. ஸ்டான்டர்டு காஸ்மிக் பிளாக் எடிஷனுடன் ஒப்பிடும் போது, ஸ்டெல்த் பிளாக் எடிஷனில் ரியர் ஸ்விங் ஆர்ம், ரியர் கிராப் ஹேன்டில் மற்றும் ஃபிரேமின் சில பாகங்கள் பிளாக்டு-அவுட் செய்யப்பட்டு உள்ளன.

    அந்த வகையில், இந்த மோட்டார்சைக்கிள் மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் ஸ்டான்டர்டு RV400 மாடலில் உள்ளதை போன்றே இந்த மாடலிலும் 3.24 கிலோவாட் ஹவர் பேட்டரி மற்றும் 3 கிலோவாட் மிட்-டிரைவ் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ரெவோல்ட் RV400 மாடல் ரைடிங் மோட்களுக்கு ஏற்ப முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 150 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய அதிகபட்சம் 4.5 மணி நேரம் வரை ஆகும்.

    ×