search icon
என் மலர்tooltip icon

    பைக்

    6-வது ஆனிவர்சரி.. 150கிமீ ரேன்ஜ் வழங்கும் ரெவோல்ட் RV400 ஸ்டெல்த் பிளாக் எடிஷன் அறிமுகம்..!
    X

    6-வது ஆனிவர்சரி.. 150கிமீ ரேன்ஜ் வழங்கும் ரெவோல்ட் RV400 ஸ்டெல்த் பிளாக் எடிஷன் அறிமுகம்..!

    • ரெவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆறாவது ஆண்டு விழாவை ஒட்டி இந்த மாடல் அறிமுகம்.
    • ஸ்டெல்த் பிளாக் லிமிடெட் எடிஷன் மாடலில் காஸ்மடிக் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    ரெவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் முற்றிலும் புதிய RV400 ஸ்டெல்த் பிளாக் லிமிடெட் எடிஷன் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. புதிய ஸ்டெல்த் பிளாக் எடிஷன் மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ரெவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆறாவது ஆண்டு விழாவை ஒட்டி இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    இதன் விலை அதன் ஸ்டான்டர்டு எடிஷன் மாடலை விட ரூ. 5 ஆயிரம் அதிகம் ஆகும். இதில் கருப்பு நிறத்தால் ஆன காஸ்மெடிக் மாற்றங்கள், சஸ்பென்ஷனுக்கு புதிய நிறங்கள் மற்றும் கூடுதல் அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன. இந்த மோட்டார்சைக்கிள் குறைந்த எண்ணிக்கையில் தான் வழங்கப்படும் என்றும் வினியோகம் அக்டோபர் மாதம் துவங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ஸ்டெல்த் பிளாக் லிமிடெட் எடிஷன் மாடலில் காஸ்மடிக் மாற்றங்கள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. ஸ்டான்டர்டு காஸ்மிக் பிளாக் எடிஷனுடன் ஒப்பிடும் போது, ஸ்டெல்த் பிளாக் எடிஷனில் ரியர் ஸ்விங் ஆர்ம், ரியர் கிராப் ஹேன்டில் மற்றும் ஃபிரேமின் சில பாகங்கள் பிளாக்டு-அவுட் செய்யப்பட்டு உள்ளன.

    அந்த வகையில், இந்த மோட்டார்சைக்கிள் மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் ஸ்டான்டர்டு RV400 மாடலில் உள்ளதை போன்றே இந்த மாடலிலும் 3.24 கிலோவாட் ஹவர் பேட்டரி மற்றும் 3 கிலோவாட் மிட்-டிரைவ் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ரெவோல்ட் RV400 மாடல் ரைடிங் மோட்களுக்கு ஏற்ப முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 150 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய அதிகபட்சம் 4.5 மணி நேரம் வரை ஆகும்.

    Next Story
    ×