என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலைநிறுத்தம் வாபஸ்"

    • ஒப்பந்தத்தை தற்காலிகமாக நீட்டிக்க எண்ணெய் நிறுவனங்கள் ஒப்புதல் அளித்ததால் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
    • இருதரப்பு இடையே சமரசம் ஏற்பட்டதால் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு தடைகோரிய வழக்கை ஐகோர்ட் முடித்து வைத்தது.

    நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தென்மண்டல எல்.பி.ஜி.கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 9-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த போராட்டம் இன்று 6-வது நாளாக நீடித்தது. இதன் காரணமாக கியாஸ் டேங்கர் லாரிகள் சாலை ஓரங்கள் மற்றும் பட்டறைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    கியாஸ் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சிலிண்டர்களில் கியாஸ் நிரப்பும் தொழிற்சாலைகளுக்கு கியாஸ் கொண்டு செல்லும் பணி முற்றுலுமாக முடங்கியுள்ளது. எனவே தமிழகம் உள்பட தென்மாநிலங்களில் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

    இந்நிலையில் இது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, எல்.பி.ஜி. கியாஸ் டேங்கர் லாரிகளுக்கான ஒப்பந்தத்தை தற்காலிகமாக 2026 மார்ச் வரை நீட்டிக்க எண்ணெய் நிறுவனங்கள் ஒப்புதல் அளித்தது.

    புதிய டெண்டர் பணிகள் நிறைவடையாததால் தற்போதைய ஒப்பந்தத்தை அடுத்தாண்டு மார்ச் வரை நீட்டிக்க எண்ணெய் நிறுவனங்கள் சம்மதம் தெரிவித்தன.

    ஒப்பந்தத்தை தற்காலிகமாக நீட்டிக்க எண்ணெய் நிறுவனங்கள் ஒப்புதல் அளித்ததால் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

    2026 மார்ச் மாதம் வரை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என டேங்கர் லாரிகள் சங்கத்திற்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

    இருதரப்பு இடையே சமரசம் ஏற்பட்டதால் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு தடைகோரிய வழக்கை ஐகோர்ட் முடித்து வைத்தது.

    இதையடுத்து 6 நாட்களாக நடைபெற்று வந்த எல்.பி.ஜி. கியாஸ் டேங்கர் லாரி வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.

    • இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிர்வாகத்தினர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    • உடன்பாடு ஏற்பட்டதால் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற ஒப்புக்கொண்டனர்.

    சேலம்:

    எல்.பி.ஜி. சிலிண்டர்கள் ஏற்றும் லாரிகளுக்கு ஒவ்வொரு பிளாண்ட்டுகளிலும் ஒப்பந்தப்படி போதிய லோடு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்.பி.ஜி. சிலிண்டர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்தனர்.

    இந்த நிலையில் நேற்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிர்வாகத்தினர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற ஒப்புக்கொண்டனர். இதனால் எல்.பி.ஜி. வினியோகம் தடையின்றி சீராக தொடரும் என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தலைமை பொது மேலாளர் வெற்றி செல்வகுமார் தெரிவித்தார்.

    • மீன் பிடிக்க செல்லாததால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
    • மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகளிடம் அனுமதி சீட்டு பெற்று அவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    ராமேசுவரம்:

    கடந்த 14-ந் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ராமேசுவரம் மீனவர்கள் 27 பேர் மற்றும் 5 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.

    படகுகளை பறிமுதல் செய்த அவர்கள் மீனவர்கள் மீது எல்லைதாண்டி மீன்பிடித்தாக வழக்குப்பதிவு செய்து மன்னார் மற்றும் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டு வவுனியா மற்றும் யாழ்பாணம் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இலங்கை கடற்படையினர் செயலை கண்டித்தும், மீனவர்கள் படகுகளை மீட்டு கொண்டு வர வலியுறுத்தியும் ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

    மீன் பிடிக்க செல்லாததால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. தினசரி ரூ.1 கோடி அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. கடன் வாங்கி செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 5 நாட்களுக்கு முன்பு சிறிய ரக விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட்டு கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். பெரிய விசைப்படகு மீனவர்கள் தொடர்ந்து போராட்டத்தை தொடர்ந்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று 12 மீனவர்களின் காவலை இலங்கை நீதிமன்றம் நீட்டித்தது. இதனால் அவர்கள் நவம்பர் 8-ந் தேதி வரை சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் முன்னேற்றம் ஏற்படாத நிலையிலும், மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்த நிலையிலும் வேலைநிறுத்த போராட்டத்தை திரும்ப பெற்று இன்று 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு புறப்பட்டு சென்றனர்.

    மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகளிடம் அனுமதி சீட்டு பெற்று அவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், இலங்கை கடற்படையினர் பிடித்து சென்ற மீனவர்களை இந்தியாவிற்கு அழைத்து வரவும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்டு தரவும் மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மீனவர்கள் அச்சமின்றி கடலில் மீன்பிடித்து வரும் சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறினர்.

    ×