என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிலிண்டர் லாரி"

    • இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிர்வாகத்தினர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    • உடன்பாடு ஏற்பட்டதால் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற ஒப்புக்கொண்டனர்.

    சேலம்:

    எல்.பி.ஜி. சிலிண்டர்கள் ஏற்றும் லாரிகளுக்கு ஒவ்வொரு பிளாண்ட்டுகளிலும் ஒப்பந்தப்படி போதிய லோடு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்.பி.ஜி. சிலிண்டர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்தனர்.

    இந்த நிலையில் நேற்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிர்வாகத்தினர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற ஒப்புக்கொண்டனர். இதனால் எல்.பி.ஜி. வினியோகம் தடையின்றி சீராக தொடரும் என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தலைமை பொது மேலாளர் வெற்றி செல்வகுமார் தெரிவித்தார்.

    • சிலிண்டர் ஏற்றிக்கொண்டு வந்த லாரியை எட்டயபுரத்தை சேர்ந்த கணேசன் என்பவர் ஒட்டி வந்தார்.
    • விபத்தில் 2 லாரி டிரைவர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    வள்ளியூர்:

    தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து நெல்லை மாவட்டம் கூடங்குளத்திற்கு பாரத் பெட்ரோலியம் நிறுவனத்திற்கு சொந்தமான கியாஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது. லாரியை எட்டயபுரத்தை சேர்ந்த கணேசன் என்பவர் ஒட்டி வந்தார்.

    அந்த லாரியின் பின்னால் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு மற்றொறு லாரி வந்துள்ளது. இதனை மேலசேவலை சேர்ந்த நீலகண்டன் என்பவர் ஓட்டி வந்தார்.

    வள்ளியூர் கோவனேரி நான்கு வழி சாலை அருகே வந்த பொழுது முன்னால் சென்ற சிலிண்டர் ஏற்றி சென்ற லாரி மீது பின்னால் வந்த சிமெண்ட் ஏற்றி வந்த லாரி அதி வேகமாக மோதியது.

    இதில் லாரியில் இருந்த சிலிண்டர்கள் அனைத்தும் சாலையில் விழுந்து சிதறியது. தகவல் அறிந்த வள்ளியூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சிதறிய சிலிண்டர்களை அப்புறப்படுத்தி லாரியையும் அங்கிருந்து அகற்றினர்.

    இந்த விபத்தில் 2 லாரி டிரைவர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விபத்து குறித்து வள்ளியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×