என் மலர்tooltip icon

    கார்

    டிஃபென்டர் காரின் புது மாடலை அறிமுகப்படுத்திய லேண்ட் ரோவர்... விலை எவ்வளவு தெரியுமா?
    X

    டிஃபென்டர் காரின் புது மாடலை அறிமுகப்படுத்திய லேண்ட் ரோவர்... விலை எவ்வளவு தெரியுமா?

    • புதிய டிஃபென்டர் சாண்ட்க்ளோ எல்லோ மற்றும் கெஸ்விக் கிரீன் வெளிப்புற ஷேட்களில் வருகிறது.
    • 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஸ்டான்டர்டு 4-வீல் டிரைவ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

    லேண்ட் ரோவர் இந்தியா நிறுவனம் அதன் டிஃபென்டர் காரின் 110 டிராபி மாடல் விலையை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய சந்தையில் புதிய டிஃபென்டர் 110 டிராபி மாடலின் விலை ரூ. 1.39 கோடி (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயித்துள்ளது.

    இது ஸ்டான்டர்டு X-டைனமிக் HSE வேரியண்ட்டை விட ரூ. 4 லட்சம் அதிகமாக உள்ளது. டிராபி மாடல் முதன்முதலில் ஜூன் 2025-இல் வெளியிடப்பட்டது. இப்போது இந்த மாடல் சற்றே விலை உயர்ந்த ஸ்டைலிங் தொகுப்புடன் சந்தைக்கு வருகிறது.

    டிஃபென்டர் 110 டிராபி மாடலில் புதியது என்ன?

    புதிய டிஃபென்டர் சாண்ட்க்ளோ எல்லோ மற்றும் கெஸ்விக் கிரீன் வெளிப்புற ஷேட்களில் வருகிறது. இது டிராபி எடிஷன் டெக்கல்கள், பிளாக்டு-அவுட் கிளாடிங், கிளாஸ் பிளாக் கிரில் மற்றும் டார்க் கிரே ஃபினிஷ் செய்யப்பட்ட 20 இன்ச் அலாய் வீல்களை கொண்டுள்ளது. உள்புறம், பிரீமியம் பொருட்கள், எம்போஸ்டு பிராண்டிங் மற்றும் பிரத்யேக நிலையை பிரதிபலிக்கும் வகையில் தீம் மூலம் கேபின் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.



    பவர்டிரெய்ன் மற்றும் செயல்திறன்

    இயந்திர ரீதியாக, டிராபி மாடலில் 3.0-லிட்டர், இன்லைன்-6 டீசல் எஞ்சின் (மைல்ட்-ஹைப்ரிட் அசிஸ்ட்) மூலம் இயக்கப்படுகிறது. இது 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஸ்டான்டர்டு 4-வீல் டிரைவ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 345bhp பவர் /700Nm டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 6.4 நொடிகளில் எட்டிவிடும்.

    Next Story
    ×