என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொதுச்செயலாளர் என்ற பதவியை எடப்பாடி பழனிசாமி பயன்படுத்தக் கூடாது.
    • அவினாசி - அத்திக்கடவு திட்டத்துக்காக பாராட்டு விழா நடத்திய நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இல்லை.

    எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்கு தொடர்ந்த வா.புகழேந்தி கூறியதாவது:-

    அ.தி.மு.க. உள்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு எல்லா உரிமைகளும் உண்டு. தேர்தல் ஆணையம் விசாரிக்க முடியும் என்று ஒரு அருமையான தீர்ப்பை சென்னை ஐகோர்ட்டு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. தேர்தல் ஆணையம் விசாரிப்பதற்கான தடையாணை நீக்கப்பட்டுள்ளது. நாங்கள் அனைவரும் தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

    இனி என்ன செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் முடிவு செய்யும். எனவே பொதுச்செயலாளர் என்ற பதவியை எடப்பாடி பழனிசாமி பயன்படுத்தக் கூடாது. கட்சி பெயரை பயன்படுத்தக் கூடாது. சிவில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அதிகாரமும் இல்லை. இனி அவர் ஊர் உலகத்தை ஏமாற்ற வேண்டாம்.

    இனி இந்த விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிக்கும். நாங்கள் தேர்தல் ஆணையத்தை நோக்கி செல்வோம். எனது நோக்கம் எம்.ஜி.ஆர். கொடுத்த இரட்டை இலையை முடக்க வேண்டும் என்பது அல்ல. அது எடப்பாடி பழனிசாமியிடம் இருக்கக்கூடாது என்பது

    தான். ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆகி இருக்க முடியாது.

    அவினாசி - அத்திக்கடவு திட்டத்துக்காக பாராட்டு விழா நடத்திய நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இல்லை. இது கண்டிக்கத்தக்கது. இந்த பாராட்டு விழாவுக்கு எடப்பாடி பழனிசாமி சென்றிருக்கிறார். எடப்பாடி பழனிசாமியை ஆதரிப்பவர்கள், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களை வீட்டிலிருந்து வெளியே எறிந்து விடுங்கள். ஜெயலலிதாவின் புகழை மறைக்க நினைப்பவர்களுக்கு பாடம் புகட்டாமல் விட மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரோகித் சர்மாவை 2-வது இடத்தில் இருந்து பின்னுக்குத் தள்ளியுள்ளார் சுப்மன் கில்.
    • விராட் கோலி 4 இடத்தில் இருந்து 6-வது இடத்திற்கு பின் தங்கியுள்ளார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

    நாக்பூர் (87) மற்றும் கட்டாக் (60) போட்டிகளில் சுப்மன் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் ரோகித் சர்மாவை பின்னுக்குத் தள்ளி 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    சுப்மன் கில் 781 புள்ளிகளுடன் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ள நிலையில், 786 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கும் பாபர் அசாமை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடிக்க 5 புள்ளிகள்தான் தேவை.

    இன்று நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 3-வது போட்டி மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக விளையாடினால் முதல் இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது.

    அதேபோல் பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு போட்டியில் பாகிஸ்தான் இன்று தென்ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது. இந்த போட்டியில் பாபர் அசாம் சிறப்பான விளையாடினால் முதல் இடத்தில நீடிக்க வாய்ப்புள்ளது.

    கட்டாக் போட்டியில் சதம் (119) விளாசினாலும் ரோகித் சர்மா 2-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு சரிந்துள்ளார். அவர் 773 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளார். நாக்பூர் போட்டியில் 2 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்திருந்தார்.

    அயர்லாந்து வீரர் ஹாரி டெக்டர் 2 இடங்கள் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் சொதப்பிய விராட் கோலி 2 இடங்கள் சரிந்து 6-வது இடத்தை பிடித்துள்ளார். ஷ்ரேயாஸ் அய்யர் ஒரு இடங்கள் முன்னனேறி 10-வது இடத்தை பிடித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்த நாட்டை சிறப்புற ஆட்சி செய்த என் முன்னோர்கள் எல்லாம் இப்படி வியூகம் வகுக்கவில்லை.
    • பிரசாத் கிஷோருக்கு தமிழ்நாட்டில் என்ன தெரியும்.

    திருவண்ணாமலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

    இது தொடர்பாக சீமான் கூறியதாவது.

    * விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்தித்துக்கொண்டார்கள் என்று உங்கள் செய்தியை பார்த்து தெரிந்துகொண்டேன்.

    * வியூக வகுப்பில் எனக்கு உடன்பாடில்லை.

    * இந்த நாட்டை சிறப்புற ஆட்சி செய்த என் முன்னோர்கள் எல்லாம் இப்படி வியூகம் வகுக்கவில்லை. எங்க தாத்தா பெருந்தலைவர் காமராஜரோ, பேரறிஞர் அண்ணா போன்றோர்களே இதுபோல் வியூகம் வகுக்கவில்லை.

    * என் நாடு, என் மக்கள், என் நிலம், என் காடு, என் மலை எதை எப்படி செய்தால் சரியாக வரும் என்று தெரியாத நான் இந்த வேலைக்கு ஏன் வர வேண்டும்.

    * யாரை எங்கு நிறுத்தினால் வெல்லலாம் என்று இது கூட தெரியாமல் நான் எப்படி...

    * எனக்கு நிறைய மூளை இருக்கு. காசு தான் இல்லை. அதனால் எனக்கு அது தேவையில்லை. அதற்கு வியூகம் வகுத்து என்ன பயன்.

    * கத்தரிக்காய் என்று தாளில் எழுதி பயன் இல்லை. நிலத்தில் இறங்கி, விதை விதைத்து, செடியை வளர்த்து, உரம் வைத்து, வளர்த்து விளைய வைக்க வேண்டும். அப்போது தான் கத்தரிக்காய் கிடைக்கும்.

    * குறிப்பிட்ட காலமாய் இந்த நோய் வந்துவிட்டது.

    * பிரசாந்த் கிஷோருக்கு தமிழ்நாட்டில் என்ன தெரியும். எத்தனை ஆறு, ஏரி, குளம், சமூக மக்கள், என்ன பிரச்சனை என்று எப்படி தெரியும்.

    * பணக்கொழுப்பு அதிகமாக இருந்தால் இதெல்லாம் தேவைப்படும். நாம் இதையெல்லாம் பேசி காலத்தையும் நேரத்தையும் வீணடிக்க வேண்டாம் என்று தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வீட்டில் இருக்கும்போது, என்னைச் சுற்றி என் பேத்திகள் இருப்பது போல் உணர முடியவில்லை.
    • குடும்பத்தின் மரபை தொடரும் வகையில் இந்த முறையாவது ராம் சரணுக்கு ஆண் குழந்தை கிடைக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

    தெலுங்கில் அப்பா சிரஞ்சீவியை தொடர்ந்து கதாநாயகனாக களமிறங்கி கலக்கி கொண்டிருப்பவர் மகன் ராம் சரண். ராஜமௌலி இயக்கத்தில் இவர் நடித்த 'RRR' திரைப்படம், ராம் சரணை பான் இந்தியா ஸ்டாராக மாற்றிய நிலையில், உலக அளவில் இவருக்கான ரசிகர்கள் பட்டாளம் உருவானது.

    கடந்த 2012-ம் ஆண்டு, நடிகர் ராம் சரண் அப்பல்லோ மருத்துவமனை நிறுவனர் டாக்டர் பிரதாப் ரெட்டியின் பேத்தியான உபாசனா காமினேனியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் சுமார் 10 ஆண்டுகள், குழந்தை பெற்றுக்கொள்ளும் திட்டத்தை இருவருமே தள்ளி போட்டனர். அதே நேரம் உப்பாசனா மருத்துவ துறையில் இருப்பதால், தன்னுடைய கருமுட்டையை சேமித்து வைத்தார். இதை வைத்தே சுமார் 10- ஆண்டுகளுக்கு பின்னர் இவர் கருத்தரித்து க்ளின் காரா என்கிற மகளை பெற்றெடுத்தார்.

    இந்த நிலையில், 'பிரம்மானந்தம்' என்ற திரைப்பட வெளியீட்டு விழா ஐதராபாத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிரஞ்சீவி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    "என் மகன் ராம்சரணுக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்துவிடுமோ என பயமாக உள்ளது. நான் வீட்டில் இருக்கும்போது, என்னைச் சுற்றி என் பேத்திகள் இருப்பது போல் உணர முடியவில்லை. ஏதோ லேடீஸ் ஹாஸ்டலில் வார்டனாக இருப்பது போல உணர்கிறேன். குடும்பத்தின் மரபை தொடரும் வகையில் இந்த முறையாவது ராம் சரணுக்கு ஆண் குழந்தை கிடைக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

    சிரஞ்சீவியின் இந்த பேச்சுக்கு சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 1,862 கோடி ரூபாய் மதிப்பிலான அத்திக்கடவு-அவினாசித் திட்டத்திற்கு நிதி உதவி கோரும் பொருளும் இடம் பெற்றிருந்தது.
    • ஜெயலலிதா, அத்திக்கடவு அவினாசித் திட்டம் நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதியை அப்பகுதி மக்களுக்கு வழங்கினார்கள்.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    அத்திக்கடவு அவினாசி திட்டம் என்பது பில்லூர் அருகில் பவானி ஆற்றிலிருந்து 2,000 கன அடி வெள்ள உபரி நீரை எடுத்து கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களிலுள்ள பொதுப் பணித்துறை ஏரிகள், ஊராட்சி ஒன்றிய குளங்கள் மற்றும் ஏனைய நீர்நிலைகளில் நிரப்பும் திட்டமாகும்.

    இந்தத் திட்டத்திற்கு தி.மு.க. அங்கம் வகித்த அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒப்புதல் அளிக்காத நிலையில், நீர்ப்பாசனம், நிலத்தடி நீர் செறிவூட்டுதல் மற்றும் குடிநீர் வழங்கல் திட்டமாக செயல்படுத்திட ஆணையிட்டவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா.

    இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமென்பதற்கான குரல் 1957 ஆம் ஆண்டு முதல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தாலும், இந்தத் திட்டத்திற்கு விதை போட்ட பெருமை ஜெயலலிதா அவர்களையே சாகும். மத்திய அரசு நிதி ஒதுக்கினாலும், ஒதுக்காவிட்டாலும் அத்திக்கடவு அவினாசித் திட்டம் நிறைவேற்றப்படும் என்று அப்பகுதி மக்களுக்கு உறுதியளித்தவர் ஜெயலலிதா.

    மேலும், 07-08-2015 அன்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்தபோது. தமிழ்நாடு தொடர்பான திட்டங்கள் குறித்த அறிக்கையினை பாரதப் பிரதமரிடம் வழங்கினார்கள்.

    இந்த அறிக்கையில், 1,862 கோடி ரூபாய் மதிப்பிலான அத்திக்கடவு-அவினாசித் திட்டத்திற்கு நிதி உதவி கோரும் பொருளும் இடம் பெற்றிருந்தது.

    இதனைத் தொடர்ந்து 16-02-2016 அன்று சமர்ப்பிக்கப்பட்ட 2016-2017 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தில், அத்திக்கடவு அவினாசித் திட்டம் இடம்பெற்றிருந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையின்படி, மத்திய அரசிற்கு திருத்திய கருத்துரு உடனடியாக அனுப்பப்படும் என்றும், அதே சமயத்தில் இத்திட்டத்திற்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கப்படும் என்றும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவற்றை, நிதி அமைச்சர் என்ற முறையில் பேரவையில் வாசிக்கும் பாக்கியத்தை எனக்கு அளித்தவர் ஜெயலலிதா.

    இதனைத் தொடர்ந்து, 18-02-2016 நாளிட்ட பொதுப் பணித் துறை அரசாணை எண் 66 மூலம் அத்திக்கடவு அவினாசி திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் வகையில், மூன்று கோடியே 27 இலட்சம் ரூபாய் நிதியை அனுமதித்து அரசாணை வெளியிடப்பட்டது.

    இதன் பின்னர், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலையொட்டி சூறாவளிப் பிரசாரத்தை மேற்கொண்ட ஜெயலலிதா, அத்திக்கடவு அவினாசித் திட்டம் நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதியை அப்பகுதி மக்களுக்கு வழங்கினார்கள்.

    ஜெயலலிதா அவர்களின் சூறாவளி தேர்தல் சுற்றுப்பயணம், ஆளுமை, பன்மொழித் திறன் காரணமாக, மீண்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டாவது முறையாக, ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் ஜெயலலிதா அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு நம்மையெல்லாம் விட்டு பிரிந்து சென்றுவிட்டார்கள்.

    இதனைத் தொடர்ந்து, ஜெயலலிதா பாதையில் நடைபெற்ற ஆட்சி, அவர்களின் கனவுத் திட்டமான அத்திக்கடவு அவினாசித் திட்டத்தை நிறைவேற்றியது. ஜெயலலிதா நம்மை விட்டு பிரிந்த நிலையில், 2017 முதல் 2021 வரை நடைபெற்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி என்பது ஜெயலலிதா அவர்களின் ஆட்சி. ஜெயலலிதாவின் கனவு நனவாக்கப்பட்டது அவ்வளவுதான், இன்றைக்கு. அத்திக்கடவு அவினாசித் திட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது என்றால் அதற்கு முழு முதற்காரணம் ஜெயலலிதா தான். இதற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது என்பதை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புதிய வருமான வரி மசோதா தாக்கல் செய்யப்பட்டு பின்னர் அது பாராளுமன்றத்தின் நிதி நிலைக்குழுவிற்கு அனுப்பப்படும்.
    • வரிச் சுமையை குறைப்பதுடன், விதிகள் எளிமையான வாக்கியங்களில் இருக்கும்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையில் கடந்த 1-ந்தேதி மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்தாா். புதிய வருமான வரி மசோதா தாக்கல் செய்யப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை புதிய வருமான வரி மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

    இந்த நிலையில் புதிய எளிமைப்படுத்தப்பட்ட வருமான வரி மசோதா மக்களவையில் நாளை (13-ந்தேதி) தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 622 பக்கங்களை கொண்டதாக இந்த மசோதா இருக்கும் என்று தெரிகிறது.

    புதிய வருமான வரி மசோதா தாக்கல் செய்யப்பட்டு பின்னர் அது பாராளுமன்றத்தின் நிதி நிலைக்குழுவிற்கு அனுப்பப்படும். குழு தனது பரிந்துரைகளை வழங்கிய பின்னர், அவற்றில் திருத்தங்கள் நிறைவேற்றப்பட வேண்டுமா என்பது குறித்து மீண்டும் மந்திரிசபை முடிவு எடுக்கும்.

    மொழி எளிமைப்படுத்தல் சட்டத்தை சுருக்கமாகவும், தெளிவாகவும், புரிந்து கொள்ள எளிதாகவும் மாற்றும் என்றும், இது சர்ச்சைகள், வழக்குகளைக் குறைக்கும் என்றும், வரி செலுத்துவோருக்கு அதிக வரி உறுதிப்பாட்டை வழங்கும் எனக் கூறப்படுகிறது. இந்த புதிய மசோதா நேரடி வரி சட்டங்களை புரிந்து கொள்வதை எளிதாக்கும். வரிச் சுமையை குறைப்பதுடன், விதிகள் எளிமையான வாக்கியங்களில் இருக்கும்.

    • மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் இன்று மதியம் தொடங்கவுள்ளது.
    • இப்போட்டியில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்யவுள்ளது.

    இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் கதொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

    இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டு ஒருநாள்போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    இந்நிலையில், இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று மதியம் தொடங்கவுள்ளது.

    இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் இந்திய அணி பேட்டிங் செய்யவுள்ளது. 

    இப்போட்டியில் சமிக்கு பதிலாக அர்ஸ்தீப் சிங்கும் வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தரும் ஜடேஜாவிற்கு பதிலாக குல்தீப் யாதவும் இடம்பெற்றுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாணவர்களின் நலன் கருதி தேவையான நிதியை வாங்கி கொடுத்து விட்டு அந்த பெருமையை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.
    • போதிய நிதி வராததால் 40 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று அளித்த பேட்டி வருமாறு:-

    ஒவ்வொரு மாநிலத்துக்கும் மத்திய அரசு ஒதுக்கி உள்ள நிதி பட்டியலைத்தான் நான் வெளியிட்டுள்ளேன். இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் ஒன்றிய அரசிடம் சென்று நிதியை வாங்கி வரவேண்டியது தானே. அதை விட்டு விட்டு உங்கள் கட்சி செய்யும் தவறுகளை நியாயப்படுத்தலாமா? மாணவர்களின் நலன் கருதி தேவையான நிதியை வாங்கி கொடுத்து விட்டு அந்த பெருமையை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.

    ரூ.2155 கோடி பணத்தை கொண்டு வந்து கொடுங்கள். போதிய நிதி வராததால் 40 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு செயற்கை நிதி நெருக்கடி செயலை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிரான்ஸ் புறப்பட்டு செல்வதற்கு முன்பு பிரதமர் மோடி விமானத்துக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.
    • பிரதமர் மோடி வெளிநாட்டுக்கு பயணம் செல்லும்போது அவரது விமானத்தை பயங்கரவாதிகள் தாக்கலாம் என்று மிரட்டல் விடுக்கப்பட்டது.

    மும்பை:

    பிரதமர் நரேந்திரமோடி பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக அவர் கடந்த 11-ந்தேதி டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார்.

    இந்த நிலையில் பிரான்ஸ் புறப்பட்டு செல்வதற்கு முன்பு பிரதமர் மோடி விமானத்துக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு இந்த மிரட்டல் அழைப்பு வந்தது. விமானத்தை பயங்கரவாதிகள் தாக்கக்கூடும் என்று அந்த மிரட்டலில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக மும்பை போலீசார் விசாரணை நடத்தி செம்பூர் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை கைது செய்தனர். இதுகுறித்து மும்பை போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 11-ந்தேதி மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு அழைப்பு வந்தது. பிரதமர் மோடி வெளிநாட்டுக்கு பயணம் செல்லும்போது அவரது விமானத்தை பயங்கரவாதிகள் தாக்கலாம் என்று மிரட்டல் விடுக்கப்பட்டது. இதன் தீவிர தன்மையை கருத்தில் கொண்டு போலீசார் மற்ற விசாரணை நிறுவனங்களுக்கு தகவல் அளித்து விசாரணையை நடத்தியது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    விசாரணையில் பிடிபட்ட வாலிபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • யூத நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மாட்டோம் என்று மருத்துவ ஊழியர்கள் வீடியோ வெளியிட்டனர்.
    • இந்த வீடியோ வேதனையளிக்கும் விதமாக உள்ளது என்று ஆஸ்திரேலிய பிரதமர் தெரிவித்தார்.

    ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணிபுரியும் இரண்டு சுகாதார ஊழியர்கள் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த நோயாளிகளை கொலை செய்து விடுவதாக மிரட்டிய வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    மருத்துவ ஊழியர்கள் வெளியிட்ட டிக் டாக் வீடியோவில், இஸ்ரேல் நாட்டை சேர்ந்த யூத நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மாட்டோம் என்றும் அவர்களை கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.

    இந்த வீடியோ வைரலாக நிலையில், சம்பந்தப்பட்ட மருத்துவ ஊழியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

    இது குறித்து பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், "இந்த வீடியோ வேதனையளிக்கும் விதமாகவும், அவமானகரமானதாகவும் உள்ளது" என்று தெரிவித்தார்.

    • குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான நடவடிக்கை குறித்து தலைமை செயலாளர் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
    • ஆலோசனையில் டிஜிபி சங்கர் ஜிவால், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு ஏடிஜிபி, பல்வேறு துறை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் குழந்தைகள், இளம்பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் பள்ளி, கல்லூரிகளில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் இது தொடர்பாக தலைமை செயலாளர் முருகானந்தம் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

    குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான நடவடிக்கை குறித்து தலைமை செயலாளர் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

    ஆலோசனையில் டிஜிபி சங்கர் ஜிவால், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு ஏடிஜிபி, பல்வேறு துறை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    • எனது வீட்டுக்கு தினமும் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் என்னை வந்து சந்தித்து பேசுவது வழக்கம் தான்.
    • நாளை அந்தியூரில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம், குப்பம் பாளையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்.எல்.ஏ இன்று மதியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:- நான் கோவை மாவட்டம் போரூரில் உள்ள பட்டேஸ்வரர் கோவிலுக்கு சென்று இருந்தேன். வேறு எங்கும் செல்லவில்லை. நான் எந்த ஆலோசனைக் கூட்டத்திலும் ஈடுபடவில்லை.

    யாரையும் ஆலோசனைக்கு அழைக்கவில்லை. எனது வீட்டுக்கு தினமும் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் என்னை வந்து சந்தித்து பேசுவது வழக்கம் தான். நாளை அந்தியூரில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

    இதற்காக அந்தியூரை சேர்ந்த நிர்வாகிகள் எனது வீட்டுக்கு திரண்டு வந்துள்ளனர். மற்றபடி வேறு ஒன்றுமில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோவிலுக்கு சென்றதற்கு ஆதாரமாக பிரசாத தட்டை நிருபர்களிடம் காண்பித்து, எல்லோருக்கும் பிரசாதம் வழங்கினார். பின்னர் அ.தி.மு.க நிர்வாகிகள் செங்கோட்டையனை சந்தித்து பேசி விட்டு அவர் வீட்டில் இருந்து கிளம்பி சென்றனர்.

    இதன் காரணமாக கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த பரபரப்பு விவாதத்திற்கு செங்கோட்டையன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

    ×