என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வீட்டில் இருக்கும்போது, என்னைச் சுற்றி என் பேத்திகள் இருப்பது போல் உணர முடியவில்லை.
    • குடும்பத்தின் மரபை தொடரும் வகையில் இந்த முறையாவது ராம் சரணுக்கு ஆண் குழந்தை கிடைக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

    தெலுங்கில் அப்பா சிரஞ்சீவியை தொடர்ந்து கதாநாயகனாக களமிறங்கி கலக்கி கொண்டிருப்பவர் மகன் ராம் சரண். ராஜமௌலி இயக்கத்தில் இவர் நடித்த 'RRR' திரைப்படம், ராம் சரணை பான் இந்தியா ஸ்டாராக மாற்றிய நிலையில், உலக அளவில் இவருக்கான ரசிகர்கள் பட்டாளம் உருவானது.

    கடந்த 2012-ம் ஆண்டு, நடிகர் ராம் சரண் அப்பல்லோ மருத்துவமனை நிறுவனர் டாக்டர் பிரதாப் ரெட்டியின் பேத்தியான உபாசனா காமினேனியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் சுமார் 10 ஆண்டுகள், குழந்தை பெற்றுக்கொள்ளும் திட்டத்தை இருவருமே தள்ளி போட்டனர். அதே நேரம் உப்பாசனா மருத்துவ துறையில் இருப்பதால், தன்னுடைய கருமுட்டையை சேமித்து வைத்தார். இதை வைத்தே சுமார் 10- ஆண்டுகளுக்கு பின்னர் இவர் கருத்தரித்து க்ளின் காரா என்கிற மகளை பெற்றெடுத்தார்.

    இந்த நிலையில், 'பிரம்மானந்தம்' என்ற திரைப்பட வெளியீட்டு விழா ஐதராபாத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிரஞ்சீவி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    "என் மகன் ராம்சரணுக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்துவிடுமோ என பயமாக உள்ளது. நான் வீட்டில் இருக்கும்போது, என்னைச் சுற்றி என் பேத்திகள் இருப்பது போல் உணர முடியவில்லை. ஏதோ லேடீஸ் ஹாஸ்டலில் வார்டனாக இருப்பது போல உணர்கிறேன். குடும்பத்தின் மரபை தொடரும் வகையில் இந்த முறையாவது ராம் சரணுக்கு ஆண் குழந்தை கிடைக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

    சிரஞ்சீவியின் இந்த பேச்சுக்கு சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 1,862 கோடி ரூபாய் மதிப்பிலான அத்திக்கடவு-அவினாசித் திட்டத்திற்கு நிதி உதவி கோரும் பொருளும் இடம் பெற்றிருந்தது.
    • ஜெயலலிதா, அத்திக்கடவு அவினாசித் திட்டம் நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதியை அப்பகுதி மக்களுக்கு வழங்கினார்கள்.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    அத்திக்கடவு அவினாசி திட்டம் என்பது பில்லூர் அருகில் பவானி ஆற்றிலிருந்து 2,000 கன அடி வெள்ள உபரி நீரை எடுத்து கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களிலுள்ள பொதுப் பணித்துறை ஏரிகள், ஊராட்சி ஒன்றிய குளங்கள் மற்றும் ஏனைய நீர்நிலைகளில் நிரப்பும் திட்டமாகும்.

    இந்தத் திட்டத்திற்கு தி.மு.க. அங்கம் வகித்த அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒப்புதல் அளிக்காத நிலையில், நீர்ப்பாசனம், நிலத்தடி நீர் செறிவூட்டுதல் மற்றும் குடிநீர் வழங்கல் திட்டமாக செயல்படுத்திட ஆணையிட்டவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா.

    இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமென்பதற்கான குரல் 1957 ஆம் ஆண்டு முதல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தாலும், இந்தத் திட்டத்திற்கு விதை போட்ட பெருமை ஜெயலலிதா அவர்களையே சாகும். மத்திய அரசு நிதி ஒதுக்கினாலும், ஒதுக்காவிட்டாலும் அத்திக்கடவு அவினாசித் திட்டம் நிறைவேற்றப்படும் என்று அப்பகுதி மக்களுக்கு உறுதியளித்தவர் ஜெயலலிதா.

    மேலும், 07-08-2015 அன்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்தபோது. தமிழ்நாடு தொடர்பான திட்டங்கள் குறித்த அறிக்கையினை பாரதப் பிரதமரிடம் வழங்கினார்கள்.

    இந்த அறிக்கையில், 1,862 கோடி ரூபாய் மதிப்பிலான அத்திக்கடவு-அவினாசித் திட்டத்திற்கு நிதி உதவி கோரும் பொருளும் இடம் பெற்றிருந்தது.

    இதனைத் தொடர்ந்து 16-02-2016 அன்று சமர்ப்பிக்கப்பட்ட 2016-2017 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தில், அத்திக்கடவு அவினாசித் திட்டம் இடம்பெற்றிருந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையின்படி, மத்திய அரசிற்கு திருத்திய கருத்துரு உடனடியாக அனுப்பப்படும் என்றும், அதே சமயத்தில் இத்திட்டத்திற்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கப்படும் என்றும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவற்றை, நிதி அமைச்சர் என்ற முறையில் பேரவையில் வாசிக்கும் பாக்கியத்தை எனக்கு அளித்தவர் ஜெயலலிதா.

    இதனைத் தொடர்ந்து, 18-02-2016 நாளிட்ட பொதுப் பணித் துறை அரசாணை எண் 66 மூலம் அத்திக்கடவு அவினாசி திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் வகையில், மூன்று கோடியே 27 இலட்சம் ரூபாய் நிதியை அனுமதித்து அரசாணை வெளியிடப்பட்டது.

    இதன் பின்னர், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலையொட்டி சூறாவளிப் பிரசாரத்தை மேற்கொண்ட ஜெயலலிதா, அத்திக்கடவு அவினாசித் திட்டம் நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதியை அப்பகுதி மக்களுக்கு வழங்கினார்கள்.

    ஜெயலலிதா அவர்களின் சூறாவளி தேர்தல் சுற்றுப்பயணம், ஆளுமை, பன்மொழித் திறன் காரணமாக, மீண்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டாவது முறையாக, ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் ஜெயலலிதா அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு நம்மையெல்லாம் விட்டு பிரிந்து சென்றுவிட்டார்கள்.

    இதனைத் தொடர்ந்து, ஜெயலலிதா பாதையில் நடைபெற்ற ஆட்சி, அவர்களின் கனவுத் திட்டமான அத்திக்கடவு அவினாசித் திட்டத்தை நிறைவேற்றியது. ஜெயலலிதா நம்மை விட்டு பிரிந்த நிலையில், 2017 முதல் 2021 வரை நடைபெற்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி என்பது ஜெயலலிதா அவர்களின் ஆட்சி. ஜெயலலிதாவின் கனவு நனவாக்கப்பட்டது அவ்வளவுதான், இன்றைக்கு. அத்திக்கடவு அவினாசித் திட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது என்றால் அதற்கு முழு முதற்காரணம் ஜெயலலிதா தான். இதற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது என்பதை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புதிய வருமான வரி மசோதா தாக்கல் செய்யப்பட்டு பின்னர் அது பாராளுமன்றத்தின் நிதி நிலைக்குழுவிற்கு அனுப்பப்படும்.
    • வரிச் சுமையை குறைப்பதுடன், விதிகள் எளிமையான வாக்கியங்களில் இருக்கும்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையில் கடந்த 1-ந்தேதி மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்தாா். புதிய வருமான வரி மசோதா தாக்கல் செய்யப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை புதிய வருமான வரி மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

    இந்த நிலையில் புதிய எளிமைப்படுத்தப்பட்ட வருமான வரி மசோதா மக்களவையில் நாளை (13-ந்தேதி) தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 622 பக்கங்களை கொண்டதாக இந்த மசோதா இருக்கும் என்று தெரிகிறது.

    புதிய வருமான வரி மசோதா தாக்கல் செய்யப்பட்டு பின்னர் அது பாராளுமன்றத்தின் நிதி நிலைக்குழுவிற்கு அனுப்பப்படும். குழு தனது பரிந்துரைகளை வழங்கிய பின்னர், அவற்றில் திருத்தங்கள் நிறைவேற்றப்பட வேண்டுமா என்பது குறித்து மீண்டும் மந்திரிசபை முடிவு எடுக்கும்.

    மொழி எளிமைப்படுத்தல் சட்டத்தை சுருக்கமாகவும், தெளிவாகவும், புரிந்து கொள்ள எளிதாகவும் மாற்றும் என்றும், இது சர்ச்சைகள், வழக்குகளைக் குறைக்கும் என்றும், வரி செலுத்துவோருக்கு அதிக வரி உறுதிப்பாட்டை வழங்கும் எனக் கூறப்படுகிறது. இந்த புதிய மசோதா நேரடி வரி சட்டங்களை புரிந்து கொள்வதை எளிதாக்கும். வரிச் சுமையை குறைப்பதுடன், விதிகள் எளிமையான வாக்கியங்களில் இருக்கும்.

    • மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் இன்று மதியம் தொடங்கவுள்ளது.
    • இப்போட்டியில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்யவுள்ளது.

    இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் கதொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

    இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டு ஒருநாள்போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    இந்நிலையில், இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று மதியம் தொடங்கவுள்ளது.

    இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் இந்திய அணி பேட்டிங் செய்யவுள்ளது. 

    இப்போட்டியில் சமிக்கு பதிலாக அர்ஸ்தீப் சிங்கும் வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தரும் ஜடேஜாவிற்கு பதிலாக குல்தீப் யாதவும் இடம்பெற்றுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாணவர்களின் நலன் கருதி தேவையான நிதியை வாங்கி கொடுத்து விட்டு அந்த பெருமையை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.
    • போதிய நிதி வராததால் 40 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று அளித்த பேட்டி வருமாறு:-

    ஒவ்வொரு மாநிலத்துக்கும் மத்திய அரசு ஒதுக்கி உள்ள நிதி பட்டியலைத்தான் நான் வெளியிட்டுள்ளேன். இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் ஒன்றிய அரசிடம் சென்று நிதியை வாங்கி வரவேண்டியது தானே. அதை விட்டு விட்டு உங்கள் கட்சி செய்யும் தவறுகளை நியாயப்படுத்தலாமா? மாணவர்களின் நலன் கருதி தேவையான நிதியை வாங்கி கொடுத்து விட்டு அந்த பெருமையை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.

    ரூ.2155 கோடி பணத்தை கொண்டு வந்து கொடுங்கள். போதிய நிதி வராததால் 40 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு செயற்கை நிதி நெருக்கடி செயலை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிரான்ஸ் புறப்பட்டு செல்வதற்கு முன்பு பிரதமர் மோடி விமானத்துக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.
    • பிரதமர் மோடி வெளிநாட்டுக்கு பயணம் செல்லும்போது அவரது விமானத்தை பயங்கரவாதிகள் தாக்கலாம் என்று மிரட்டல் விடுக்கப்பட்டது.

    மும்பை:

    பிரதமர் நரேந்திரமோடி பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக அவர் கடந்த 11-ந்தேதி டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார்.

    இந்த நிலையில் பிரான்ஸ் புறப்பட்டு செல்வதற்கு முன்பு பிரதமர் மோடி விமானத்துக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு இந்த மிரட்டல் அழைப்பு வந்தது. விமானத்தை பயங்கரவாதிகள் தாக்கக்கூடும் என்று அந்த மிரட்டலில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக மும்பை போலீசார் விசாரணை நடத்தி செம்பூர் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை கைது செய்தனர். இதுகுறித்து மும்பை போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 11-ந்தேதி மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு அழைப்பு வந்தது. பிரதமர் மோடி வெளிநாட்டுக்கு பயணம் செல்லும்போது அவரது விமானத்தை பயங்கரவாதிகள் தாக்கலாம் என்று மிரட்டல் விடுக்கப்பட்டது. இதன் தீவிர தன்மையை கருத்தில் கொண்டு போலீசார் மற்ற விசாரணை நிறுவனங்களுக்கு தகவல் அளித்து விசாரணையை நடத்தியது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    விசாரணையில் பிடிபட்ட வாலிபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • யூத நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மாட்டோம் என்று மருத்துவ ஊழியர்கள் வீடியோ வெளியிட்டனர்.
    • இந்த வீடியோ வேதனையளிக்கும் விதமாக உள்ளது என்று ஆஸ்திரேலிய பிரதமர் தெரிவித்தார்.

    ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணிபுரியும் இரண்டு சுகாதார ஊழியர்கள் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த நோயாளிகளை கொலை செய்து விடுவதாக மிரட்டிய வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    மருத்துவ ஊழியர்கள் வெளியிட்ட டிக் டாக் வீடியோவில், இஸ்ரேல் நாட்டை சேர்ந்த யூத நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மாட்டோம் என்றும் அவர்களை கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.

    இந்த வீடியோ வைரலாக நிலையில், சம்பந்தப்பட்ட மருத்துவ ஊழியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

    இது குறித்து பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், "இந்த வீடியோ வேதனையளிக்கும் விதமாகவும், அவமானகரமானதாகவும் உள்ளது" என்று தெரிவித்தார்.

    • குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான நடவடிக்கை குறித்து தலைமை செயலாளர் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
    • ஆலோசனையில் டிஜிபி சங்கர் ஜிவால், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு ஏடிஜிபி, பல்வேறு துறை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் குழந்தைகள், இளம்பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் பள்ளி, கல்லூரிகளில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் இது தொடர்பாக தலைமை செயலாளர் முருகானந்தம் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

    குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான நடவடிக்கை குறித்து தலைமை செயலாளர் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

    ஆலோசனையில் டிஜிபி சங்கர் ஜிவால், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு ஏடிஜிபி, பல்வேறு துறை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    • எனது வீட்டுக்கு தினமும் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் என்னை வந்து சந்தித்து பேசுவது வழக்கம் தான்.
    • நாளை அந்தியூரில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம், குப்பம் பாளையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்.எல்.ஏ இன்று மதியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:- நான் கோவை மாவட்டம் போரூரில் உள்ள பட்டேஸ்வரர் கோவிலுக்கு சென்று இருந்தேன். வேறு எங்கும் செல்லவில்லை. நான் எந்த ஆலோசனைக் கூட்டத்திலும் ஈடுபடவில்லை.

    யாரையும் ஆலோசனைக்கு அழைக்கவில்லை. எனது வீட்டுக்கு தினமும் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் என்னை வந்து சந்தித்து பேசுவது வழக்கம் தான். நாளை அந்தியூரில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

    இதற்காக அந்தியூரை சேர்ந்த நிர்வாகிகள் எனது வீட்டுக்கு திரண்டு வந்துள்ளனர். மற்றபடி வேறு ஒன்றுமில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோவிலுக்கு சென்றதற்கு ஆதாரமாக பிரசாத தட்டை நிருபர்களிடம் காண்பித்து, எல்லோருக்கும் பிரசாதம் வழங்கினார். பின்னர் அ.தி.மு.க நிர்வாகிகள் செங்கோட்டையனை சந்தித்து பேசி விட்டு அவர் வீட்டில் இருந்து கிளம்பி சென்றனர்.

    இதன் காரணமாக கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த பரபரப்பு விவாதத்திற்கு செங்கோட்டையன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

    • அவல நிலைக்குக் காரணமான முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
    • வள்ளுவர் கோட்டம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் விடியா தி.மு.க. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாடல் அரசு பதவியேற்றதில் இருந்து, பள்ளி, கல்லூரி மாணவிகள், சிறுமிகளுக்கு எதிராக பல்வேறு பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அதே போல், கொலை, கொள்ளை, வழிப்பறி, ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோதச் செயல்களும் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர்கெட்டு உள்ளது.

    விடியா தி.மு.க. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாடல் ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக, பள்ளி, கல்லூரி முதல் பல்கலைக்கழகம் வரை, அனைத்து இடங்களிலும் மாணவிகளுக்கு எவ்வித அச்சமும் இன்றி சர்வ சாதாரணமாக பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக பெண் பிள்ளைகளின் பெற்றோர்கள் மிகுந்த அச்சமும், கவலையும் அடைந்து உள்ளனர். இந்த அவல நிலைக்குக் காரணமான முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகளை கட்டுப்படுத்தத் தவறிய விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும்; குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வலியுறுத்தியும், அ.தி.மு.க. மாணவர் அணியின் சார்பில் வருகிற 18-ந்தேதி (செவ்வாய்கிழமை) காலை 10.30 மணியளவில், சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக மகளிர் அணிச் செயலாளர் முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி தலைமையிலும்; கழக மாணவர் அணிச் செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் முன்னிலையிலும் நடைபெறும்.

    ஆர்ப்பாட்டத்தில், கழக மாணவர் அணி மாநில துணை நிர்வாகிகளும், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களிலும், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் மாணவர் அணியைச் சேர்ந்த நிர்வாகிகளும், கழக மாணவர் அணியினரும், பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • அங்கீகரிக்கப்பட்ட கட்சி, அமைப்பின் உட்கட்சி விவகாரங்களில் தலையிட தேர்தல் ஆணையத்திற்கு அனுமதி இல்லை.
    • அ.தி.மு.க. தங்களுடையது என யாரும் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கவில்லை.

    அ.தி.மு.க. உட்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்ட நிலையில் சி.வி.சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * அ.தி.மு.க. உறுப்பினர் என்ற போர்வையில் சிலர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    * தேர்தல் ஆணையத்தில் முறையிட்ட சூரியமூர்த்தி அ.தி.மு.க. உறுப்பினர் அல்ல என நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

    * இல்லாத அதிகாரம் இருப்பதாகக்கூறி தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

    * அங்கீகரிக்கப்பட்ட கட்சி, அமைப்பின் உட்கட்சி விவகாரங்களில் தலையிட தேர்தல் ஆணையத்திற்கு அனுமதி இல்லை.

    * அங்கீகரிக்கப்பட்ட கட்சியில் பிரச்சனை இருந்தால் அதனை தேர்தல் ஆணையத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே விதி

    * உட்கட்சியில் பிரச்சனை இருந்தால் அதில் தலையிட நீதிமன்றங்களக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.

    * கட்சி விதி திருத்தங்களை பதிவு செய்வது மட்டுமே தேர்தல் ஆணையத்தின் வேலை.

    * அ.தி.மு.க. உறுப்பினர் என்ற போர்வையில் சிலர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    * கட்சி விதி திருத்தங்கள் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரமில்லை.

    * மூல வழக்கில் வரும் தீர்ப்பை செயல்படுத்துவோம் என ஆணையமும் கூறி உள்ளது.

    * விதிகள் திருத்தம் மாற்றங்கள் குறித்த தகவல் தெரிவிக்க மட்டுமே செய்ய வேண்டும்.

    * ஓபிஎஸ்-ஆல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் தான் புகழேந்தி.

    * கட்சி எங்களுடையது என மனு அளித்தால் அதனை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம்.

    * அ.தி.மு.க. தங்களுடையது என யாரும் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கவில்லை.

    * தேர்தல் ஆணையத்தில் முறையிட்ட சூரியமூர்த்தி அ.தி.மு.க. உறுப்பினர் அல்ல என நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

    * கட்சியில் இல்லாதவர்கள், துரோகிகள் தாக்கல் செய்த மனுக்களை விசாரிக்கக்கூடாது என அ.தி.மு.க. வாதிட்டது.

    * உட்கட்சி விவகாரங்களை விசாரிக்க அதிகாரமில்லை என முன்னதாக தேர்தல் ஆணையம் ஒப்புக் கொண்டுள்ளது.

    * அ.தி.மு.க.வின் கோரிக்கைகளை வாதங்களை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

    * அதிகாரம் இருக்கிறதா? இல்லையா? என்பதை முடிவு செய்த பின்னரே தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் கூறி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை விதிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்து இருந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.
    • தேர்தல் ஆணைய சின்ன ஒதுக்கீடு விதிகளின்படி விசாரணை நடத்தப்பட வேண்டும்.

    அ.தி.மு.க. உள்கட்சி விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிப்பதற்கான தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை விதிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்து இருந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.

    அ.தி.மு.க. உள்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்டு இருந்த தடை நீக்கப்படுகிறது. அ.தி.மு.க. உள் கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தலாம். தேர்தல் ஆணைய சின்ன ஒதுக்கீடு விதிகளின்படி விசாரணை நடத்தப்பட வேண்டும். விசாரணை நடத்த அதிகாரம் இருக்கிறதா? இல்லையா? என்பது குறித்து திருப்தி அடைந்த பிறகு தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறினார்.

    இந்த நிலையில், தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும் என்பது இன்றைக்கு நிரூபணம் செய்யப்பட்டுள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, தேனி மாவட்டம் பெரியகுளத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், தேர்தல் ஆணையத்திற்கு விசாரிக்கின்ற உரிமை இருக்கிறது என்பதை தேர்தல் ஆணையம் மூலமாக ஏற்கனவே உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவின்படி, நீதிமன்றத்திற்கு எந்தெந்த அதிகாரங்கள் இருக்கிறதோ.. அந்த அதிகாரங்கள் தேர்தல் ஆணையத்திற்கும் இருக்கிறது என்பது அந்த மனுவில் தெளிவாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த அடிப்படையில் இன்று வழங்கப்பட்டு இருக்கின்ற தீர்ப்பு தேர்தல் ஆணையம் மனுவை விசாரிக்கலாம் என்ற தீர்ப்பின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி போட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும் என்பது இன்றைக்கு நிரூபணம் செய்யப்பட்டுள்ளது என்றார். 

    ×