என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
    • சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினர்.

    சென்னை:

    ஐபிஎல் 2025 சீசனின் 3-வது போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் களமிறங்கியது. தொடக்கத்தில் ரோகித் சர்மா டக் அவுட் ஆனார். தொடர்நது ரிக்கல்டன் 13 ரன்களில் வெளியேறினார். வில் ஜேக்ஸ் 11 ரன்களில் வெளியேறினார். பின்னர் சூர்யகுமார் யாதவ் , திலக் வர்மா இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினர்.

    சூர்யகுமார் யாதவ் 29 ரன்களும், திலக் வர்மா 31 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து வந்த வீரர்கள் சென்னை பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

    இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு மும்பை அணி 155 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து 155 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்கள் ராகுல் திரிபாதி 2 ரன்களில் அவுட் ஆனார். ருதுராஜ் கெய்க்வாட் 53 ரன்களில் வெறியேறினார். சிவம் துபே 9 ரன்களும், தீபக் ஹூடா 3 ரன்களும், சாம் கர்ரன் 4 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ரவீந்திர ஜடேஜா 17 ரன்களில் வெறியேறினார். ராசின் ரவீந்திரா 65 ரன்கள் சேர்த்து கடைசி வரை களத்தில் நின்றார்.

    இறுதியில் சென்னை அணி 19.1 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு இழந்து 158 ரன்கள் எடுத்தது.

    இதனால் சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது.

    • துபாயில் நடந்த கார் பந்தய போட்டியில் அவரது அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது.
    • சிறந்த பங்களிப்புக்காக அஜித்குமாருக்கு, மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவித்தது.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், கார் பந்தய வீரருமான அஜித் குமார், சினிமாவை தொடர்ந்து கார் பந்தயத்திலும் கலக்கி வருகிறார்.

    அதன்படி இந்த ஆண்டு தொடக்கத்தில் துபாயில் நடந்த கார் பந்தய போட்டியில் அவரது அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது.

    அதேவேளை கலைத்துறையில் ஆற்றி வரும் சிறந்த பங்களிப்புக்காக அஜித்குமாருக்கு, மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவித்தது.

    இந்நிலையில், இத்தாலியில் நடைபெற்ற 12வது மிச்செலின் முகெல்லோ கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் அணிக்கு 3வது இடம் கிடைத்துள்ளது.

    • சமூக நல்லிணக்கத்தை சேதப்படுத்தும் பாஜகவின் தொடர்ச்சியான முயற்சிகளில் இதுவும் ஒன்று.
    • சிறுபான்மையினரை அரக்கர்களாக சித்தரிக்க பாஜக முயற்சி.

    வக்பு வாரிய திருத்த மசோதாவை அரசியலமைப்பின் மீதான தாக்குதல் என்று காங்கிரஸ் கடுமையாக சாட்டியுள்ளது. சிறுபான்மை சமூகங்களை அரக்கர்களாக சித்தரிக்கும் பாஜகவின் முயற்சிகளின் ஒரு பகுதி தான் இது என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

    இன்று டெல்லியில் காங்கிரஸ் மாநிலங்களவை எம்பியும் தேசிய செய்திதொடர்பாளருமான ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது பேசிய அவர், 2024 இல் பாஜக கொண்டு வந்த வக்பு திருத்த மசோதா, தீவிரமான குறைபாடுகளை உடையது. இந்த மசோதா, மதங்களைக் கடந்து அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் அரசியலமைப்பு விதிகளை நீர்த்துப்போகச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

    தவறான பிரச்சாரத்தைப் பரப்புவதன் மூலமும், பாரபட்சங்களை உருவாக்குவதன் மூலமும் சிறுபான்மை சமூகங்களை அரக்கத்தனமாக சித்தரிக்க முயற்சிக்கும் பாஜவின் உத்தியின் ஒரு பகுதியாகும்.

    நமது தனித்துவமான பல மத சமூகத்தில் பல நூற்றாண்டுகள் பழமையான சமூக நல்லிணக்கத்தை சேதப்படுத்தும் பாஜகவின் தொடர்ச்சியான முயற்சிகளில் இதுவும் ஒன்று.

    தேர்தல் ஆதாயங்களுக்காக நமது சமூகத்தை நிரந்தர பிளவு நிலையில் வைத்திருக்க சிறுபான்மை சமூகங்களின் மரபுகள் மற்றும் நிறுவனங்களை சீர்குலைக்கும் முயற்சி இது.

    வக்பு சொத்துக்களை நிர்வகிப்பதற்காக முந்தைய சட்டங்களால் உருவாக்கப்பட்ட அனைத்து நிறுவனங்கள், அமைப்பு, அந்தஸ்து மற்றும் அதிகாரம் குறைக்கப்பட்டு, சமூகம் அதன் சொந்த மத மரபுகள் மற்றும் விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமை வேண்டுமென்றே இந்த மசோதா மூலம் பறிக்கப்படுகிறது.

    வக்பு நிர்வாகத்தை பலவீனப்படுத்துவதற்காகவே தற்போதுள்ள சட்டத்தில் உள்ள விதிகள் எந்த காரணமும் இல்லாமல் நீக்கப்படுகின்றன. வக்பு நிலங்களை ஆக்கிரமித்தவர்களைப் பாதுகாக்க சட்டத்தில் இப்போது அதிக பாதுகாப்புகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

    அடிப்படையில், வக்பு திருத்த மசோதா இந்திய அரசியலமைப்பின் மீதான தாக்குதல் என்று தெரிவித்துள்ளார். நடப்பு பாரளுமன்ற கூட்டத்தொடரில் வக்பு திருத்த மசோதா நிறைவேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் சூழல் காங்கிரஸ் இந்த விமர்சனத்தை  முன்வைத்துள்ளது.

    • தெலுங்கில் ராபின்ஹுட் படத்தில் நிதின் மற்றும் ஸ்ரீ லீலா நடித்துள்ளனர்.
    • இந்த படம் மார்ச் 28-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

    தெலுங்கில் ராபின்ஹுட் படத்தில் நிதின் மற்றும் ஸ்ரீ லீலா நடித்துள்ளனர். இந்த படத்தை வெங்கி குடுமுலா இயக்குகிறார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படம் மார்ச் 28-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

    இந்நிலையில் இந்த இப்படத்தில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் நடித்துள்ளதாக படக்குழு அண்மையில் போஸ்டர் வெளியிட்டு அதிகாரபூர்வமாக .

    அதன்படி டேவிட் வார்னர் நடித்துள்ள திரைப்படம் குறித்து அறிவிப்பு வெளியாகி இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. டிரெய்லர் காட்சிகள் மிகவும் நகைச்சுவையாகவும் கலர்ஃபுல்லாகவும் அமைந்துள்ளது. படத்தை குறித்து ரசிகர்களுக்கு எதிர்ப்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

    • அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.
    • ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 'வீர தீர சூரன்' படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது. திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது.

    டிரெய்லர் காட்சிகள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் திரைப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது மேலும் படத்தின் கால அவகாசம் 2.30 மணி நேரமாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

    படத்தின் ப்ரோமோ பாடலான அய்லா அலேலா பாடலின் வீடியோவை நாளை படக்குழு வெளியிட இருப்பதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    • தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.
    • நயன்தாரா மீண்டும் நிவின் பாலியுடன் இணைந்து 'டியர் ஸ்டூடண்ட்ஸ்' நடித்துள்ளார்.

    2023 ஆம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த ஜவான் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திருப்பார் நயன்தாரா. அவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.

    2019 ஆம் ஆண்டு தியான் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் நிவின் பாலி மற்றும் நயன்தாரா இணைந்து நடித்த படம் 'லவ் ஆக்ஷன் டிராமா'. ஷான் ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். படம் வெளியாகிய போது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    தற்பொழுது நயன்தாரா மீண்டும் நிவின் பாலியுடன் இணைந்து 'டியர் ஸ்டூடண்ட்ஸ்' நடித்துள்ளார். அறிமுக இயக்குனரான சந்தீப் குமார் மற்றும் ஜார்ஜ் பிலிப் இயக்கியுள்ளனர்.

    பாலி ஜூனியர் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது என படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

    மேலும் நயன் தாரா , மாதவன் மற்றும் சித்தார்த் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்த டெஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஆங்கிலேயர்களை அகற்றுவது மட்டும் போதாது, சமூகத்தின் கட்டமைப்பு மாற வேண்டும் என்று பகத் சிங் கூறுவார்.
    • இது இரு கட்சிகளுக்கும் இடையே ஏதோ ஒரு கூட்டுச் சதி நடப்பதைக் காட்டுகிறது.

    கடந்த பிப்ரவரியில் டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜகவிடம் தோற்ற பின்னர் ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று முதல் முறையாக டெல்லியில் உரையாற்றினார்.

    இன்று பகத் சிங் நினைவு நாளை ஒட்டி டெல்லியில் ஆம் ஆத்மி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய கெஜ்ரிவால், பாஜக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

    நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, சுதந்திரப் போராட்ட வீரர்கள் மனதில் என்ன கனவுகள் வைத்திருந்தார்களோ, இன்று அவர்களின் ஒரு கனவு கூட நிறைவேறவில்லை. பகத் சிங் சிறையில் இருந்து எழுதிய கடிதங்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நிறைய இருந்தன. ஆனால் ஆங்கிலேயர்கள் அவற்றை தடை செய்யாமல் பகத் சிங்கின் தோழர்களுக்கு அனுப்பினர்.

    நான் சிறையில் இருந்தபோது, துணை நிலை ஆளுநருக்கு ஒரு கடிதம் எழுதினேன், எனக்கு பதிலாக அதிஷி கொடியை ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்று கேட்டிருந்தேன். இதில் எந்தத் தவறும் இல்லை. இந்த கடிதத்தை அனுப்பவேண்டி நான் சிறை கண்காணிப்பாளருக்கு கொடுத்தேன்.

    ஆனால் அந்தக் கடிதம் துணைநிலை ஆளுநரை அடையவில்லை. அத்தகைய கடிதத்தை எழுத எனக்கு எவ்வளவு தைரியம் என்று கேட்கும்விதமாக ஷோ-காஸ் நோட்டீஸ் தான் வந்தது. பகத் சிங்கிற்கு எந்தக் கடிதமும் எழுத சுதந்திரம் இருந்தது. ஆனால் என்னால் இரண்டு வரிகள் கொண்ட கடிதம் எழுத முடியவில்லை. நீங்கள் (பாஜக) பிரிட்டிஷாரை விட மோசமானவர்கள்.

    எங்கள் முன்மாதிரிகள் பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் பகத் சிங். ஆங்கிலேயர்களை அகற்றுவது மட்டும் போதாது, சமூகத்தின் கட்டமைப்பு மாற வேண்டும் என்று பகத் சிங் கூறுவார். இல்லையெனில், வெள்ளை நிற ஆட்சியாளருக்கு பதிலாக பழுப்பு நிற தோல் ஆட்சியாளர்கள் வருவார்கள். இதுதான் நடந்தது. இன்றைய ஆட்சியாளர்கள் ஆங்கிலேயர்களை விட மோசமானவர்கள்.

    பாஜக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த 48 மணி நேரத்திற்குள் பகத் சிங் மற்றும் அம்பேத்கரின் உருவப்படங்களை அரசு அலுவலகங்களில் இருந்து அகற்றப்பட்டன. பகத் சிங்கை விட நாட்டிற்காக தியாகம் செய்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று நான் அவர்களிடம் கேட்க விரும்புகிறேன்.

    இதைப் பார்த்து நான் மிகவும் வருத்தப்பட்டேன், இதையெல்லாம் பாஜக செய்தபோது, காங்கிரஸ் அதைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இது இரு கட்சிகளுக்கும் இடையே ஏதோ ஒரு கூட்டுச் சதி நடப்பதைக் காட்டுகிறது என்று தெரிவித்தார். மேலும் மகளிருக்கு பாஜக அளித்த ரூ.2500 உதவித்தொகை வாக்குறுதி உள்ளிட்டவற்றை இன்னும் நிறைவேற்றவில்லை என கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார்.  

    • சென்னை அணி கேப்டன் ருதுராஜ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.
    • மும்பை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கைள எடுத்தது.

    ஐபிஎல் 2025 சீசனின் 3-வது போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியுள்ளன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. சென்னை அணி கேப்டன் ருதுராஜ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி, மும்பை இந்தியன் அணி முதலில் களமிறங்கியது. இதில், மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கைள எடுத்தது.

    இதற்கிடையே, ஆட்டத்தின் தொடக்கத்தில் முதலாவதாக களமிறங்கிய ரோகித் சர்மா முதல் ஓவரின் 4வது பந்தில் டக் அவுட்டானார்.

    இந்நிலையில் ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான வீரர் என்ற மோசமான வரலாற்று சாதனையை மும்பை வீரர் ரோகித் சர்மா சமன் செய்தார்.

    அதன்படி, மேக்ஸ்வெல் மற்றும் தினேஷ் கார்த்திக் உடன் ரோகித் சர்மா மோசமான இடத்தை சமன் செய்துள்ளார்.

    • டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் தேர்வு செய்தது.
    • அதன்படி முதலில் ஆடிய மும்பை 20 ஓவரில் ரன்கள் எடுத்தது.

    சென்னை:

    ஐபிஎல் 2025 சீசனின் 3-வது போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் களமிறங்கியது. முதல் ஓவரின் 4வது பந்தில் ரோகித் சர்மா டக் அவுட்டானார். ரியான் ரிக்கல்டன் 13 ரன்னும், வில் ஜாக்ஸ் 11 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். மும்பை அணி 36 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்களை இழந்து தத்தளித்தது.

    4-வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ்-திலக் வர்மா ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடி 51 ரன் சேர்த்தது. சூர்யகுமார் 29 ரன்னில் அவுட்டானார். திலக் வர்மா 31 ரன்னில் வெளியேறினார். இருவரையும் நூர் அகமது அவுட்டாக்கினார். அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    கடைசி கட்டத்தில் தீபக் சஹர் 28 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்தது.

    சென்னை அணி சார்பில் நூர் அகமது 4 விக்கெட்டும், கலீல் அகமது 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • மலையாள திரை உலகில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் மம்மூட்டி.
    • அவரது வீடு விருந்தினர்கள் தங்குமிடமாக மாற்றப்பட்டுள்ளது.

    மலையாள திரை உலகில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் மம்மூட்டி. மலையாள சினிமா மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் பல படங்களில் நடித்துள்ளார். பழம்பெரும் நடிகரான மம்மூட்டி கேரள மாநிலம் பனம்பில்லி நகரில் உள்ள வீட்டில் கடந்த 2008 முதல் 2020 வரை குடும்பத்துடன் வசித்து வந்தார்.

    பின்னர் அம்பேலி பாதம் சாலையில் உள்ள வீட்டிற்கு குடிபெயர்ந்தார். இந்நிலையில் பனம்பில்லி நகரில் உள்ள வீட்டிற்கு 'மம்மூட்டி ஹவுஸ்' என பெயரிடப்பட்டு, அவரது வீடு விருந்தினர்கள் தங்குமிடமாக மாற்றப்பட்டுள்ளது.

     

    4 படுக்கை அறைகள். ஒரு ஹோம் தியேட்டர் வசதி கொண்ட இந்த வீட்டில் தங்குவதற்கு 1 நாளைக்கு ரூ.75 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வருகிற ஏப்ரல் 2-ந்தேதி முதல் இதற்கான முன்பதிவு தொடங்க இருக்கிறது.

    மம்மூட்டி தற்பொழுது பசூக்கா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    • கடந்த 24 மணிநேரத்தில் பதிவான 41 உயிரிழப்புகளையும் சேர்த்து தற்போது மொத்த பலி எண்ணிக்கை 50,021 ஆக உள்ளது.
    • பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்ற ஐநாவின் அறிக்கை மேற்கொள் காட்டுகிறது.

    இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் கடந்த மார்ச் 1 ஆம் தேதி முடிவுக்கு வந்ததை அடுத்து மீண்டும் போர் தொடங்கியுள்ளது.

    கடந்த 5 நாட்களில் காசாவில் இஸ்ரேலிய தாக்குதல்களில் 600க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், லெபனானில் மீதும் இஸ்ரேலின் சமீபத்திய தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் கடந்த 2023 அக்டோபர் முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்ததாக காசா சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

    கடந்த 24 மணிநேரத்தில் பதிவான 41 உயிரிழப்புகளையும் சேர்த்து தற்போது மொத்த பலி எண்ணிக்கை 50,021 ஆக உள்ளது. மேலும் அதன் அறிக்கையில் இதுவரை 113,000 க்கும் மேற்பட்டோர் போரில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இறந்தவர்களின் எத்தனை பேர் ஹமாஸ் அமைப்பினர், எத்தனை பேர் பொதுமக்கள் என அமைச்சகம் தெளிவுபடுத்தவில்லை. ஆனால் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்ற ஐநாவின் அறிக்கை மேற்கொள் காட்டுகிறது.

     

    காசா மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏமனின் ஹவுதிகள் தொடர்ந்து இஸ்ரேல் மீது ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளைத் ஏவி தாக்கி வருகின்றனர்.

    இதில் ஈரானின் தொடர்பு இருப்பதாக இஸ்ரேல் சந்தேகிக்கிறது. இதன் காரணமாக, இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதே நேரத்தில், தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லாவினர் ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகள் ஏவி வருகின்றனர்.

    ஹமாஸ் அமைப்பும் ஏவுகணை தாக்குதலைகளை தொடங்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து காசா மற்றும் லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளது.

    கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட போர் நிறுத்தத்தின்படி பணய கைதிகள் பரிமாற்றம் நடந்தது. ஆனால் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளதால் காசாவில் நிலவிய தற்காலிக அமைதி தற்போது வெடிகுண்டுகளால் மீண்டும் முற்றாக சீர்குலைந்து வருகிறது.

     

    கடந்த 2023 அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் அமைப்பினர் அந்நாட்டின் மீது திடீர் தாக்குதல் நடத்தியதில் இருந்து இஸ்ரேல், காசா, ராஃபா உள்ளிட்ட நகரங்கள் மீது இடைவிடாது தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    இஸ்ரேல் பக்கம் 1200 பேர் வரை உயிரிழந்தனர். அதற்கு விலையாக காசாவில் தற்போது 50,021 உயிர்களை இஸ்ரேல் குடித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்திடம் அனுமதி பெற்றே தற்போதைய தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது. 

     

    • மும்பை இந்தியன் அணி முதலில் களமிறங்கி விளையாடி வருகிறது.
    • சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெளியே பிளாக்கில் டிக்கெட்டுகள் விற்பனை.

    ஐபிஎல் 2025 சீசனின் 3-வது போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியுள்ளன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. சென்னை அணி கேப்டன் ருதுராஜ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி, மும்பை இந்தியன் அணி முதலில் களமிறங்கி விளையாடி வருகிறது.

    இதற்கிடையே, சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டிக்கெட் பிளாக்கில் ரூ.10,000க்கு விற்பனை செய்யப்படுவதாக ரசிகர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

    அதுவும், போட்டி நடைபெற்று வரும் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெளியே பிளாக்கில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

    ரூ.4,000 டிக்கெட் பிளாக்கில் ரூ.10 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. பிளாக்கில் டிக்கெட்டை விற்பனை செய்த நபரின் வீடியோ வெளியானதால் ரிசகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    மேலும், பிளாக்கில் டிக்கெட் விற்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×