என் மலர்
செய்திகள்
- கடந்த ஆண்டு அன்புமணி பங்கேற்ற நிலையில் தற்போது இருவருக்கும் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக அன்புமணி பங்கேற்கவில்லை.
- பொங்கல் விழாவில் ஒயிலாட்டம், சிலம்பாட்டம் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவன டாக்டர் ராமதாஸ் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
கடந்த ஆண்டு அன்புமணி பங்கேற்ற நிலையில் தற்போது இருவருக்கும் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக அன்புமணி இன்று டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்கவில்லை.
டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடந்த பொங்கல் விழாவில் அவரது மனைவி சரஸ்வதி அம்மையார், மகள் ஸ்ரீகாந்தி, பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே. மணி, டாக்டர் ராமதாசின் பேரன் முகுந்தன் மற்றும் நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினர், மாவட்ட செயலாளர்கள் பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர். இந்த பொங்கல் விழாவில் ஒயிலாட்டம், சிலம்பாட்டம் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
- இரண்டாவது ஒரு நாள் போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெற உள்ளது
- இந்திய நட்சத்திர கூட்டணியான ரோ-கோ மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.
முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது ஒரு நாள் போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெற உள்ளது. போட்டி இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கவுள்ளது.
இந்த போட்டியில் காயம் காரணமாகி விலகிய வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக நிதிஷ்குமார் ரெட்டி இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
- பொங்கல் பரிசுத் தொகுப்பால் தமிழ் நாடெங்கும் பொங்கலை மிகச் சிறப்பாகக் கொண்டாட மக்கள் தயாராகி விட்டனர்.
- உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு என பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஆர்வத்துடன் ஆயத்தமாகியுள்ளேன்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-
உலகத் தமிழர் அனைவருக்கும் தமிழ்ப் பண்பாட்டுப் பெருநாள்-தைத்திருநாள்-உழவைப் போற்றும் அறுவடைத் திருநாளாம் பொங்கல் நல்வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
பச்சரிசி, சர்க்கரை, தித்திக்கும் செங்கரும்பு, புதிய வேட்டி சேலை, 3,000 ரூபாய் ரொக்கம் என நமது திராவிட மாடல் அரசு வழங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பால் தமிழ் நாடெங்கும் பொங்கலை மிகச் சிறப்பாகக் கொண்டாட மக்கள் தயாராகி விட்டனர்.
நானும், இன்று (ஜனவரி 14) சென்னை சங்கமம் கலைவிழா, ஜனவரி 17 அன்று உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு என பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஆர்வத்துடன் ஆயத்தமாகியுள்ளேன்.
அரசு ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம், கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகள், தூய்மைப் பணியாளர்கள்-செவிலியர்கள் எனப் பல்வேறு தரப்பினரின் நீண்டநாள் கோரிக்கைகள் நிறைவேற்றம் என இந்தப் பொங்கல் அனைவருக்கும் மகிழ்ச்சிப் பொங்கலாக அமையவேண்டும் என மக்களின் மனமறிந்து நமது அரசு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விடமாட்டோம், அனைவரும் வெல்வோம் ஒன்றாக என நாள்தோறும் நலத்திட்டங்கள் தொடர்கின்றன.
அடுத்த 5 ஆண்டுகள் செய்ய வேண்டிய பணிகளுக்கும் இப்போதே தயாராகும் வகையில், தமிழ் நாட்டு மக்களிடம் 'உங்க கனவ சொல்லுங்க' என அவர்களின் கோரிக்கைகள், தேவைகளைக் கேட்டறிந்து அவற்றை 2030-க்குள் நிறைவேற்ற உறுதிபூண்டுள்ளேன். கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அமைதி, மத நல்லிணக்கம், சமத்துவம் என ஆரோக்கிய அரசியலை முன்னெடுக்கும் இந்த நல்லாட்சி, திராவிட மாடல் 2.0 வடிவில் தொடர வேண்டும் என மக்களான நீங்களும் மனப்பூர்வமாக முடிவெடுத்துவிட்டீர்கள்.
பொங்கல் திருவிழாவிற்காக வெளியூர் சென்று திரும்புவோர் பாதுகாப்பாக பயணங்களை மேற்கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
உழவர் பெருங்குடி மக்களை வணங்கி, புத்தாடை, வண்ணக்கோலம், உறவினர்களைச் சந்தித்து மகிழும் உற்சாகம், விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் பண்பு ஆகியவற்றோடு தமிழ்நாடெங்கும் புதுப்பானையில் பொங்கும் பொங்கல் மகிழ்ச்சிப் பொங்கலாக அமைந்திட எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள். பொங்கலோ பொங்கல்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- எல்.முருகன், டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் பொங்கல் விழாவை கொண்டாடினார்.
- இந்த விழாவில் பிரதமர் மோடி முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார்.
மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் துறை இணை மந்திரி எல்.முருகன், டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் விழாவை விமரிசையாக கொண்டாடி வருகிறார். இதில் பிரதமர் மோடி மற்றும் பல பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். இதுபோல இந்த ஆண்டும் பொங்கல் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில் பொங்கல் விழா இன்று காலை கோலாகலமாக தொடங்கியது. இந்த விழாவில் பிரதமர் மோடி முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார். அவரது முன்னிலையில் பொங்கலிடப்பட்டது.
இந்த விழாவில் நீதிபதிகள், பல உயரதிகாரிகள், பல்வேறு துறை வல்லுனர்கள், திரை பிரபலங்கள், பத்திரிகைத்துறையினர் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
பொங்கல் விழாவில் பராசக்தி படக்குழுவினர் பங்கேற்று இருந்தனர். தோழி கெனிஷாவுடன் நடிகர் ரவி மோகன் கலந்து கொண்டார். நடிகர் சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிலையில், இந்த பொங்கல் விழாவில் பராசக்தி படக்குழுவினர் பங்கேற்றது குறித்து காமகிரஷ் எம்.பி. மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், "சங்கிகுழு பொங்கலில் பராசக்தி குழு... ஆனா ஜன நாயகன் blocked" என்று தெரிவித்துள்ளார்.
- சென்னை தலைமைச் செயலகத்தில் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
- பொங்கல் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பொங்கல் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். தலைமைச் செயலக ஊழியர்களுடன் சமத்துவப் பொங்கல் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டாடினார்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தமிழ்நாடெங்கும் பொங்கிடும் சமத்துவப் பொங்கலை, தலைமைச் செயலகத்திலும் கொண்டாடினோம்! #பொங்கல்2026 என்று தெரிவித்துள்ளார்.
- எம்.எஸ்.தோனியை மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் சந்தித்து பேசியுள்ளார்.
- எம்.எஸ்.தோனியுடன் எடுத்த புகைப்படத்தை சு. வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
விமான நிலையத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியை மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் சந்தித்து பேசியுள்ளார்.
எம்.எஸ்.தோனியுடன் எடுத்த புகைப்படத்தை சு. வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "ஜல்லிக்கட்டு மைதானத்திற்குள் காளை புகும் கணமும் , கிரிக்கெட் மைதானத்திற்குள் தோனி புகும் கணமும் ஆர்ப்பரிக்கும் …மதுரை ஜல்லிக்கட்டுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. மதுரை வரும் பயணத்தின் போது விமானநிலைய ஓய்வறையில்!" என்று பதிவிட்டுள்ளார்.
- வழக்கமாக பொங்கல் பண்டிகை அன்று பங்கு சந்தை செயல்படும்
- நாளை எவ்வித பங்கு வர்த்தகமும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதே நாளில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மாநகராட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், நாளை மும்பை மாநகராட்சியில் தேர்தல் நடைபெற உள்ளதால் மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை எவ்வித பங்கு வர்த்தகமும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக பொங்கல் பண்டிகை அன்று செயல்படும் பங்கு சந்தைக்கு இந்தாண்டு உள்ளாட்சி தேர்தலால் விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- சென்னை மெட்ரோ ரெயில் சேவைகள் வழக்கம்போல காலை 5:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை இயக்கப்படும்.
- நண்பகல் 12:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, ஒவ்வொரு 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.
சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2026 ஜனவரி 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் சென்னை மெட்ரோ ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணையின்படி இயக்கப்படும்.
மெட்ரோ ரெயில் சேவை விவரங்கள்:
1. சென்னை மெட்ரோ ரெயில் சேவைகள் வழக்கம்போல காலை 5:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை இயக்கப்படும்.
2. காலை 5:00 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை மற்றும் இரவு 8:00 மணி முதல் 10:00 மணி வரை, ஒவ்வொரு 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.
3. நண்பகல் 12:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, ஒவ்வொரு 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.
4. மேலும், இரவு 10:00 மணி முதல் 11:00 மணி வரை, ஒவ்வொரு 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நிவின் பாலி நடிப்பில் வெளியான சர்வம் மாயா படம் ரூ.100 கோடி வசூலை கடந்து சாதனை படைத்தது.
- நயன்தாராவுடன் டியர் ஸ்டூடெண்ட்ஸ் படத்திலும் நிவின் பாலி நடித்து முடித்துள்ளார்.
நிவின் பாலி, தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பல திரைப்படங்களை லைனப்பில் வைத்துள்ளார். பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் பென்ஸ் திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
ராம் இயக்கிய ஏழு கடல் ஏழு மலை படத்தில் நடித்துள்ளார். மேலும் நயன் தாராவுடன் டியர் ஸ்டூடெண்ட்ஸ் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
அண்மையில் நிவின் பாலி நடிப்பில் வெளியான சர்வம் மாயா படம் ரூ.100 கோடி வசூலை கடந்து சாதனை படைத்தது.
இந்நிலையில், அருண் வர்மாஇயக்கத்தில் Baby Girl படத்தில் நிவின் பாலி நடித்து முடித்துள்ளார். இப்படத்தில், லிஜோ மோல் , சங்கீத் பிரதாப் மற்றும் அபிமன்யு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ள Baby Girl ஜனவரி 23 ஆம் தேதி திரைக்கு வரும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
- ஆசிரியர்கள் தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காக போராடி வருகின்றனர்.
- மத்திய அரசின் நிதி வந்தால் ஆசிரியர்கள் கேட்காமலே செய்திருப்போம்.
சமவேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முகாம் அலுவலகத்தில் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதையடுத்து அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
* ஆசிரியர்கள் தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காக போராடி வருகின்றனர்.
* பொங்கல் பண்டிகை தினத்தில் ஆசிரியர்கள் போராடுவது வேதனை அளிப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார்.
* பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ.12,500-ல் இருந்து ரூ.15,000 ஆக உயர்த்தப்படும்.
* பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாதம் ரூ.10,000 வழங்கப்படும்.
* கடந்த 12 ஆண்டுகளாக பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதம் ஊதியம் வழங்கப்படுவதில்லை.
* மத்திய அரசின் நிதி வந்தால் ஆசிரியர்கள் கேட்காமலே செய்திருப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- D54 படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜூ நடித்து உள்ளார்.
- 'D54' படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்தத்த்து.
நடிகர் தனுஷ்- விக்னேஷ் ராஜா கூட்டணியில் உருவாகி உள்ள படம் 'D54'. 'போர் தொழில்' பட இயக்குநரான விக்னேஷ் ராஜா இயக்கி உள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
ஐசரி கணேஷ் தயாரிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகி உள்ள இப்படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜூ நடித்து உள்ளார். மேலும் இப்படத்தில் கருணாஸ், கே.எஸ். ரவிக்குமார், பிருத்வி பாண்டியராஜன், குஷ்மிதா மற்றும் நிதின் சத்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
'D54' படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்தத்த்து. இந்நிலையில், 'D54' படத்தின் முக்கிய அப்டேட் பொங்கல் பண்டிகையை ஒட்டி நாளை காலை 10.50 மணிக்கு வெளியாகும் என்று பட தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
- மத்திய இணை மந்திரி எல்.முருகன், டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் விழாவை விமரிசையாக கொண்டாடி வருகிறார்.
- விழாவில் பிரதமர் மோடி முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார்.
மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் துறை இணை மந்திரி எல்.முருகன், டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் விழாவை விமரிசையாக கொண்டாடி வருகிறார். இதில் பிரதமர் மோடி மற்றும் பல பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். இதுபோல இந்த ஆண்டும் பொங்கல் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில் பொங்கல் விழா இன்று காலை கோலாகலமாக தொடங்கியது. இந்த விழாவில் பிரதமர் மோடி முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார். அவரது முன்னிலையில் பொங்கலிடப்பட்டது.
இந்த விழாவில் நீதிபதிகள், பல உயரதிகாரிகள், பல்வேறு துறை வல்லுனர்கள், திரை பிரபலங்கள், பத்திரிகைத்துறையினர் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
பொங்கல் விழாவில் பராசக்தி படக்குழுவினர் பங்கேற்று இருந்தனர். தோழி கெனிஷாவுடன் நடிகர் ரவி மோகன் கலந்து கொண்டார். நடிகர் சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.






