என் மலர்
தலைப்புச்செய்திகள்
- தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
- சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
- இது சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 99 -வது திரைப்படமாகும்.
- இப்படம் கப்பல் மற்றும் துறைமுகத்தை சார்ந்து உருவாக்கப்பட்ட கதைக்களமாகும்.
ஈட்டி மற்றும் ஐங்கரன் படங்களை இயக்கிய ரவி அரசு, விஷாலின் 35-வது திரைப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் இசையை ஜி.வி பிரகாஷ் குமார் மேற்கொள்கிறார். மார்க் ஆண்டனி படத்திற்கு பிறகு விஷால் திரைப்படத்திற்கு ஜிவி இசையமைக்கிறார்
படத்தை ஆர் பி சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம் தயாரிக்கிறது. இது சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 99 -வது திரைப்படமாகும். படத்தின் நாயகியாக துஷாரா விஜயன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அஞ்சலியும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து படப்பிடிப்பு பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு 'மகுடம்' என தலைப்பு வைத்துள்ளனர். இப்படம் கப்பல் மற்றும் துறைமுகத்தை சார்ந்து உருவாக்கப்பட்ட கதைக்களமாகும்.
இந்த நிலையில், 'மகுடம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் தெரிவித்து வெளியாகி உள்ள ஃபர்ஸ்ட் லுக்கில் விஷால் 3 விதமான கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பது உறுதியாகி உள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
- ரஷியாவிடம் கச்சா எண்ணெய், ராணுவ சாதனங்கள் ஆகியவை வாங்குவதற்கு அபராதமாக இந்தியாவுக்கு கூடுதலாக 25 சதவீத வரி அறிவித்தார்.
- கடந்த ஆண்டு வர்த்தக மதிப்புப்படி, அமெரிக்காவுக்கு 4 ஆயிரத்து 820 கோடி டாலர் மதிப்புள்ள இந்திய பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு, பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் பொருட்கள் மீது சரமாரியாக வரியை உயர்த்தி வருகிறார்.
அதன்படி அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் இந்திய பொருட்கள் மீது டிரம்ப், முதலில் 25 சதவீத வரி விதித்தார். இந்த வரிவிதிப்பு கடந்த 7-ந் தேதி அமலுக்கு வந்தது.
அத்துடன், ரஷியாவிடம் கச்சா எண்ணெய், ராணுவ சாதனங்கள் ஆகியவை வாங்குவதற்கு அபராதமாக இந்தியாவுக்கு கூடுதலாக 25 சதவீத வரி அறிவித்தார். இந்த கூடுதல் வரிவிதிப்பு இன்று முதல் அமலுக்கு வந்தது. எனவே, இந்திய பொருட்கள் மீதான வரிவிதிப்பு இன்று முதல் 50 சதவீதமாக உயருகிறது.
இதையொட்டி, அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை ஒரு வரைவு ஆணை வெளியிட்டுள்ளது. அந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஆகஸ்டு 27-ந் தேதி (அதாவது இன்று) அதிகாலையில் இருந்து விற்பனைக்காக அமெரிக்காவில் நுழையும் மற்றும் அமெரிக்காவில் உள்ள சேமிப்பு கிடங்கில் இருந்து விற்பனைக்காக வெளியேறும் இந்திய பொருட்கள் மீது 25 சதவீத கூடுதல் வரிவிதிப்பு பொருந்தும்.
அதே சமயத்தில், 27-ந் தேதி அதிகாலைக்கு முன்பு கப்பலில் ஏற்றப்பட்ட இந்திய பொருட்கள், நடுவழியில் கப்பலில் வந்து கொண்டிருக்கும் பொருட்கள் ஆகியவற்றுக்கு 25 சதவீத கூடுதல் வரி பொருந்தாது. இருப்பினும், செப்டம்பர் 17-ந் தேதிக்கு முன்பு அமெரிக்காவில் பயன்படுத்த அவற்றுக்கு ஒப்புதல் பெறுவதுடன், அமெரிக்க சுங்கத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரிவிதிப்பால், ஜவுளி, ஆயத்த ஆடைகள், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், இறால், தோல், காலணி, விலங்கு பொருட்கள், ரசாயனங்கள், மின்சார எந்திர சாதனங்கள் ஆகிய துறைகள் பாதிக்கப்படும்.
ஆனால் மருந்து பொருட்கள், எரிசக்தி பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், பெட்ரோலிய பொருட்கள் ஆகியவற்றுக்கு 50 சதவீத வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
கடந்த ஆண்டு வர்த்தக மதிப்புப்படி, அமெரிக்காவுக்கு 4 ஆயிரத்து 820 கோடி டாலர் மதிப்புள்ள இந்திய பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. எனவே, அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பால், 4 ஆயிரத்து 820 கோடி டாலர் மதிப்புள்ள இந்திய பொருட்கள் ஏற்றுமதி பாதிக்கப்படும் என்று மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவை தவிர, பிரேசில் மட்டுமே 50 சதவீத வரியை சந்திக்கிறது. சீனா 30 சதவீத வரியையும், மியான்மர் 40 சதவீத வரியையும் சந்தித்து வருகின்றன.
இந்திய பொருட்களுக்கு வரி உயர்வு அமலுக்கு வரும் வேளையில், சீனாவுக்கும் 200 சதவீத வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
அதாவது கடந்த ஏப்ரல் மாதம், சீன பொருட்கள் மீதான வரியை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தாறுமாறாக உயர்த்தினார். ஒருகட்டத்தில் 150 சதவீத வரி அளவுக்கு உயர்த்தினார். அதேபோல் சீனாவும் பதிலுக்கு அமெரிக்க பொருட்கள் மீதான வரியை அதே அளவுக்கு உயர்த்தியது.
இருதரப்பிலும் வர்த்தக போர் வெடிக்கும் சூழ்நிலை உருவானது. இரு நாடுகளுக்கும் இடையே தற்காலிக வர்த்தக போர் நிறுத்தம் ஏற்பட்டது.
சீனாவின் அரியவகை புவி காந்தங்கள் ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தவும், அமெரிக்க தொழில்நுட்ப கட்டுப்பாடுகளை வாபஸ் பெறவும் ஒப்பந்தம் ஏற்பட்டது. இதனால், அமெரிக்க பொருட்கள் மீதான வரியை 55 சதவீதமாக சீனா குறைத்தது. சீன பொருட்கள் மீதான வரியை 32 சதவீதமாக அமெரிக்கா குறைத்தது. இந்த தற்காலிக வர்த்தக போர் நிறுத்தம், நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது.
இந்த தற்காலிக வர்த்தக போர் நிறுத்தத்தை சீர்குலைக்கும் வகையில், சீனாவுக்கு இந்த பகிரங்க மிரட்டலை தற்போது டிரம்ப் விடுத்துள்ளார்.
- கிரகண நேரத்திற்கு 6 மணி நேரங்களுக்கு முன்பே கோவில் கதவுகள் மூடப்படுவது வழக்கம்.
- அதிகாலை 3 மணிக்கு சுப்ரபாதம் மூலம் கோவில் கதவுகள் திறந்து கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்படும்.
திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கிரகண காலங்களில் மூடப்படுவது வழக்கம். அதன்படி அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9.50 மணிக்கு சந்திர கிரகணம் ஆரம்பித்து, மறுநாள் (திங்கட்கிழமை) அதிகாலை 1.31 மணிக்கு நிறைவடைகிறது.
கிரகண நேரத்திற்கு 6 மணி நேரங்களுக்கு முன்பே கோவில் கதவுகள் மூடப்படுவது வழக்கம். அதன்படி திருப்பதி ஏழுமலையான் கோவில் வருகிற 7-ந்தேதி மாலை 3 மணி முதல் மறுநாள் அதிகாலை 3 மணி வரை சுமார் 12 மணி நேரம் மூடப்படும். பின்னர் 8-ந்தேதி அதிகாலை 3 மணிக்கு சுப்ரபாதம் மூலம் கோவில் கதவுகள் திறந்து கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்படும். பின்னர் புண்யாஹாவசனம் நடத்தப்படும். தொடர்ந்து தோமாலை சேவை, பஞ்சாங்க ஸ்ரவணம், அர்ச்சனை சேவை ஆகியவை ஏகாந்தமாக நடைபெறும். காலை 6 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த தகவலை திருமலை- திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
- பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
- தெருக்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி என்பது விநாயகரின் முக்கியமான விழாவாகும். ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது.
அதன்படி, நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை முதல் விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, மக்கள், தங்கள் வீடுகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலையை அலங்கரித்து வைத்து பூஜைகள் செய்தனர். மேலும் பூஜைப்பொருட்களையும், விநாயகருக்கு மிகவும் பிடித்தமான கொழுக்கட்டை, சுண்டல் மற்றும் உணவு வகைகளை படைத்து நைவேத்தியம் செய்தனர். மேலும், தெருக்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
- நம்பிக்கையும் பக்தியும் நிறைந்த இந்த நாள் அனைவருக்கும் மங்களகரமானதாக அமையட்டும்.
- கஜானன் தனது பக்தர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் நல்ல ஆரோக்கியத்தை அருள பிரார்த்திக்கிறேன்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டு வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது:
உங்கள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள். நம்பிக்கையும் பக்தியும் நிறைந்த இந்த நாள் அனைவருக்கும் மங்களகரமானதாக அமையட்டும்.
கஜானன் தனது பக்தர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் நல்ல ஆரோக்கியத்தை அருள பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
- புதுப்பாக்கம், சிறுசேரி, அனுமன் நகர், காரனை கிராமம்.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (28.08.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
தாம்பரம்: சிடிஓ காலனி, சசிவரதன் நகர், FCI நகர், காசா கிராண்ட், குட்வில் நகர், மூகாம்பிகை நகர், பாரதி நகர், ராமகிருஷ்ணா நகர்.
ஈஞ்சம்பாக்கம்: விஜிபி லேஅவுட், சீத்தாராம் அவென்யூ, பெரியார் தெரு, பொதிகை தெரு, முனிசுவரன் கோவில் தெரு, கௌரிஅம்மன் கோவில் தெரு, பஜனை கோவில் தெரு, ஷாலிமார் கார்டன், எம்.கே.ராதா அவென்யூ, ரேடியன்ட் அவென்யூ, கங்கையம்மன் கோவில் தெரு, தேவி நகர், பெத்தல் நகர்.
ஐடி காரிடார் : புதுப்பாக்கம், சிறுசேரி, அனுமன் நகர், காரனை கிராமம், காசா கிராண்ட், ஒட்டியம்பாக்கம் சாலை, எல்&டி ஈடன் பார்க்.
ஆவடி: பத்மாவதி நகர், தென்றல் நகர், மூர்த்தி நகர், முல்லை நகர், வெங்கடேஸ்வரா பள்ளி தெரு, வள்ளலார் நகர்.
- படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள 10 பேரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
மும்பை அருகே பால்கர் மாவட்டத்தில் உள்ள விராரில் 4 மாடி கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். 9 பேர் காயமடைந்தனர்.
வசாய் தாலுகாவில் உள்ள நாரங்கி சாலையில் சாமுண்டா நகருக்கும் விஜய் நகருக்கும் இடையில் அமைந்துள்ள ரமாபாய் அடுக்குமாடி குடியிருப்பின் நான்கு மாடி கட்டிடத்தின் ஒரு பகுதி நள்ளிரவில் இடிந்து விழுந்துள்ளது. இந்த கட்டிடத்தில் 25 நபர்கள் வரை வசித்த நிலையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள 10 பேரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
- வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பீகாரில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
- தர்பங்காவில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் ராகுலுடன் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்ற உள்ளார்.
பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தின் மூலம் 65 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு இறுதியில் பீகாரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வுடன் இணைந்து சட்டசபை மற்றும் மக்களவை தேர்தலில் வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
'வாக்கு திருட்டு' தொடர்பாக வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் வரும் கடந்த 17-ந்தேதி முதல் 15 நாட்களுக்கு பீகாரில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் ராகுல் காந்தியின் நடைபயணத்தில் பங்கேற்க சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் பீகாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார். வாக்கு திருட்டுக்கு எதிராக பீகாரில் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள நடைபயணத்தில் முதலமைச்சர் பங்கேற்க உள்ளார்.
இதைத்தொடர்ந்து பீகார் மாநிலம் தர்பங்காவில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் ராகுலுடன் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்ற உள்ளார். சிறப்பு விமானத்தில் புறப்பட்ட முதல்வர் பீகார் மாநிலம் தர்பங்கா விமான நிலையம் சென்றடைகிறார். பின்னர் NH 57 பகுதியில் நடைபெறும் பேரணியில் காலை 10.30 மணி அளவில் பங்கேற்கிறார்.
- தோடா, கிஷ்த்வார் மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
- மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் மீட்பு பணியில் ராணுவம் களமிறங்கியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. சில இடங்களில் மேகவெடிப்பு காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், நிலச்சரிவு ஏற்பட்டு கடுமையான பொருட்சேதத்தையும், உயிர்ச்சேதத்தையும் ஏற்படுத்தியது.
மேலும், தோடா, கிஷ்த்வார் மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வைஷ்ணவி தேவி கோவிலுக்கான யாத்திரையும் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், வைஷ்ணவி தேவி கோவில் அருகே கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் மீட்பு பணியில் ராணுவம் களமிறங்கியுள்ளது.
இதனிடையே, ஜம்மு காஷ்மீரின் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
- நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேலும் நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 8 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், கோவை, நீலகிரி, மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
- தலைவரை பார்த்தவுடன் ஆர்வத்தில் நடைமேடையில் நான் ஏறினேன்.
- த.வெ.க. தலைவர் விஜயின் குண்டர்களால் தூக்கி வீசப்பட்டு மார்பக நெஞ்சுவலியால் தவித்து வருகிறேன்.
பெரம்பலூர்:
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் கடந்த 20-ந் தேதி நடந்தது. இந்த மாநாட்டில் கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய்யை பார்க்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் மதுரை வந்தனர்.
இந்த மாநாட்டின்போது ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் விஜய் 'ரேம்ப் வாக்' சென்றார். அப்போது விஜய்யின் பாதுகாப்பு கருதி, 'ரேம்ப் வாக்' மேடை அருகில் இருந்த தடுப்புகளில் கிரீஸ் தடவப்பட்டு இருந்தது.
அதையும் மீறி தொண்டர்கள் சிலர் 'ரேம்ப் வாக்' மேடையின் மீது ஏறியதால் விஜயின் பவுன்சர்கள் தொண்டர்களை அப்புறப்படுத்தினர். அந்த வகையில் தொண்டர்களை விஜயின் பவுன்சர்கள் மேடையில் இருந்து தூக்கி வீசும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்த மாநாட்டில் நடிகர் விஜயை அருகில் சென்று பார்க்க முயன்ற அக்கட்சியின் தொண்டர் பெரம்பலூர் மாவட்டம், பெரியம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த சரத்குமார் என்பவரை பவுன்சர்கள் குண்டுக்கட்டாக தூக்கி கீழே வீசினர்.
இந்த நிலையில் த.வெ.க. தொண்டர் சரத்குமார் மற்றும் அவரது தாயார் சந்தோசம் ஆகிய இருவரும் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கூடுதல் எஸ்.பி. பாலமுருகனிடம் புகார் அளித்தனர்.
குன்னம் போலீஸ் நிலையத்திலும் அவர்கள் புகார் செய்தனர். அதில், தலைவரை பார்த்தவுடன் ஆர்வத்தில் நடைமேடையில் நான் ஏறினேன்.
அப்போது என்னை நோக்கி தாக்கும் நோக்கத்தில் சுமார் 10 பவுன்சர்கள் சட்டவிரோதமாக ஒன்று கூடி ஓடி வந்தார்கள். அதில் ஒருவர் என்னை கீழே இறங்குமாரு அசிங்கமான வார்த்தையால் திட்டியும் மற்றொரு பவுன்சர் இடித்து தள்ளியும் தாக்கி கீழே வீசினார்.
தூக்கி கீழே வீசியதில் எனக்கு நெஞ்சு பகுதி மற்றும் உடலில் உள்காயம் ஏற்பட்டது. உடலில் எனக்கு இன்னும் வலி அதிகமாக உள்ளது. த.வெ.க பொறுப்பாளர்கள் என்னிடம் சமரசம் பேசினார்கள். ஆனால் முதல் உதவி சிகிச்சைக்கு கூட உதவி செய்ய யாரும் வரவில்லை. இது போன்று வேறு யாருக்கும் நடைபெற கூடாது என்பதால் குன்னம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறேன்.
த.வெ.க. தலைவர் விஜயின் குண்டர்களால் தூக்கி வீசப்பட்டு மார்பக நெஞ்சுவலியால் தவித்து வருகிறேன். எனவே தலைவர் விஜய் மீதும் அவர் பாதுகாப்பு பவுன்சர்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் என்று குறிப்பிட்டிருந்தனர்.
இதையடுத்து குன்னம் போலீசார் விஜய் மற்றும் பவுன்சர்கள் மீது 346/25 யு.எஸ். 189(2),296(b),115(2) பி.என்.எஸ். பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.






