என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜம்மு காஷ்மீருக்கு தொடரும் கனமழை எச்சரிக்கை- நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக உயர்வு
    X

    ஜம்மு காஷ்மீருக்கு தொடரும் கனமழை எச்சரிக்கை- நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக உயர்வு

    • தோடா, கிஷ்த்வார் மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
    • மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் மீட்பு பணியில் ராணுவம் களமிறங்கியுள்ளது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. சில இடங்களில் மேகவெடிப்பு காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், நிலச்சரிவு ஏற்பட்டு கடுமையான பொருட்சேதத்தையும், உயிர்ச்சேதத்தையும் ஏற்படுத்தியது.

    மேலும், தோடா, கிஷ்த்வார் மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வைஷ்ணவி தேவி கோவிலுக்கான யாத்திரையும் நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில், வைஷ்ணவி தேவி கோவில் அருகே கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் மீட்பு பணியில் ராணுவம் களமிறங்கியுள்ளது.

    இதனிடையே, ஜம்மு காஷ்மீரின் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    Next Story
    ×