என் மலர்
தலைப்புச்செய்திகள்
- மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்தி பங்கேற்க இருந்தார்.
- ராமதாஸ் ஆதரவாளர் ம.க.ஸ்டாலினை கொல்ல முயற்சி நடந்துள்ளது.
பா.ம.க. ராமதாஸ் அணியின் நிர்வாக குழு உறுப்பினர் ஸ்ரீகாந்தி கும்பகோணத்தில் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.
கும்பகோணத்தில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்தி பங்கேற்க இருந்தார்.
ராமதாஸ் ஆதரவாளர் ம.க.ஸ்டாலினை கொல்ல முயற்சி நடந்ததை அடுத்து ஸ்ரீகாந்தியின் கும்பகோணம் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
- சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
- நேற்று சவரனுக்கு 70 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.78,920-க்கு விற்பனை செய்யப்பட்டது.
- கடந்த 3 நாட்களில் சவரன் ரூ.3080 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை:
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது. இதனிடையே கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது. இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு 680 ரூபாயும், நேற்றுமுன்தினம் சவரனுக்கு 160 ரூபாயும், நேற்று சவரனுக்கு 640 ரூபாயும் உயர்ந்து ஒரு சவரன் ரூ.78,440-க்கு விற்பனையானது. இதனை தொடர்ந்து நேற்று சவரனுக்கு 70 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.78,920-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று வரலாற்றில் இதுவரை இல்லாத உச்சமாக தங்கம் விலை தொட்டுள்ளது. கிராமுக்கு140 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,005-க்கும் சவரனுக்கு 1,120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.80,040-க்கும் விற்பனையாகிறது. கடந்த 3 நாட்களில் சவரன் ரூ.3080 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 138 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் உயர்ந்து பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 38ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
05-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.78,920
04-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.78,360
03-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.78,440
02-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.77,800
01-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.77,640
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
05-09-2025- ஒரு கிராம் ரூ.136
04-09-2025- ஒரு கிராம் ரூ.137
03-09-2025- ஒரு கிராம் ரூ.137
02-09-2025- ஒரு கிராம் ரூ.137
01-09-2025- ஒரு கிராம் ரூ.136
- பிரசார சுற்றுப்பயணத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி திண்டுக்கலில் தனியார் ஓட்டலில் தங்கி உள்ளார்.
- எஸ்.பி.வேலுமணி, முனுசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துவதாக கூறப்படுகிறது.
அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்துள்ளார்.
செங்கோட்டையன் விதித்த கெடுவை அடுத்து எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரசார சுற்றுப்பயணத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி திண்டுக்கலில் தனியார் ஓட்டலில் தங்கியிருக்கும் நிலையில், எஸ்.பி.வேலுமணி, முனுசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துவதாக கூறப்படுகிறது.
- இந்த ஆண்டு கூடுதலாக ரூ.50 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.
- உத்திராட நாளில் (அதாவது ஓணம் பண்டிகைக்கு முந்தைய நாள்) மட்டும் ரூ.137 கோடிக்கு மது விற்பனையானது.
கொச்சி:
கேரளாவில் ஓணம் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடந்த 10 நாட்கள் ஓணம் விழா நடந்தது. மாநிலத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கடந்த 10 நாட்களில் ரூ.826 கோடிக்கு மது விற்பனை ஆனது. கடந்த ஆண்டு ரூ.776 கோடிக்கு மது விற்பனை நடந்தது. இதை ஒப்பிடும் போது, இந்த ஆண்டு கூடுதலாக ரூ.50 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.
உத்திராட நாளில் (அதாவது ஓணம் பண்டிகைக்கு முந்தைய நாள்) மட்டும் ரூ.137 கோடிக்கு மது விற்பனையானது. கடந்த ஆண்டு அதே நாளில் ரூ.126 கோடிக்கு மது விற்பனையாகி இருந்தது. இதை ஒப்பிடும் போது, இந்த ஆண்டு கூடுதலாக ரூ.11 கோடி மது விற்பனையானது குறிப்பிடத்தக்கது. நேற்று முன்தினம் 6 மதுபான சில்லறை விற்பனை கடைகளில் ரூ.1 கோடி மற்றும் அதற்கு கூடுதலாக மதுபானங்கள் விற்பனையானது. இதில் 3 சில்லறை விற்பனை கடைகள் கொல்லம் மாவட்டத்தில் உள்ளது.
கொல்லம் மாவட்டம் கருணாகப்பள்ளி பகுதியில் உள்ள அரசின் சில்லறை விற்பனை கடையில் ரூ.1.46 கோடிக்கு மதுபானம் விற்பனையானது. இது மாநிலத்திலேயே அதிக அளவு விற்பனையான கடை ஆகும். அதற்கு அடுத்தபடியாக கொல்லம் அருகே உள்ள காவநாடு சில்லறை விற்பனை கடையில் ரூ.1.24 கோடிக்கும், மலப்புரம் மாவட்டம் பெருந்தல்மன்னாவில் உள்ள எடப்பால் குற்றிப்பாலா சில்லறை மதுபான விற்பனை கடையில் ரூ.1.11 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
திருச்சூர் மாவட்டம் சாலக்குடி மதுபான சில்லறை விற்பனை கடையில் ரூ.1.07 கோடிக்கும், இரிஞ்சாலகுடா மதுபான கடையில் ரூ.1.03 கோடிக்கும், கொல்லம் மாவட்டம் குண்டராவில் உள்ள மதுபான கடையில் ரூ.1 கோடிக்கும் மது விற்பனையாகி உள்ளது என்று கேரள அரசின் மதுபான விற்பனை கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- டிவிஎஸ் நிறுவனம் இந்த ஸ்கூட்டரில் ஏராளமான உபகரணங்களை வழங்கியுள்ளது.
- இந்த ஸ்கூட்டர் மணிக்கு 104 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும் என்று டிவிஎஸ் கூறுகிறது.
டிவிஎஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட என்டார்க் 150 மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய என்டார்க் 150 மாடலின் விலை ரூ. 1.19 லட்சம், (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் டாப்-எண்ட் மாடலில் கலர் டிஎஃப்டி டிஸ்ப்ளே போன்ற சில சுவாரஸ்யமான அம்சங்கள் உள்ளன. அந்த வேரியண்ட் விலை ரூ. 1.29 லட்சம், எக்ஸ்-ஷோரூம் விலையில் உள்ளது.
இந்த ஸ்கூட்டர் டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டாலும், ஸ்டைலிங்கில் தொடங்கி, குறிப்பிடத்தக்க வகையில் புதியதாகவும் தனித்துவமாகவும் தெரிகிறது. இதில் எல்இடி டிஆர்எல்-கள் மற்றும் இன்டிகேட்டர்கள், குவாட் LED ப்ரொஜெக்டர் ஹெட்லைட்கள் மற்றும் ஆக்ரோஷமாக வடிவமைக்கப்பட்ட பாடி பேனல்கள் உள்ளன. டெயில் லைட்கள் கூட ஸ்கூட்டருக்கு ஒரு தனித்துவமான தோற்றத்தை சேர்க்கும் பிளவு அமைப்பைக் கொண்டுள்ளன.
பாடிவொர்க்கைப் பொறுத்தவரை, ஸ்கூட்டரில் என்டார்க் 125-இன் அதே சேசிஸ் உள்ளது. ஸ்கூட்டரின் இரு முனைகளிலும் 12 இன்ச் சக்கரங்கள் உள்ளன. இதற்கிடையில், பிரேக்கிங்கை முன்பக்கத்தில் டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் டிரம் யூனிட் வழங்கப்படுகிறது. இத்துடன் ஒற்றை-சேனல் ABS ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது.
இந்த ஸ்கூட்டரில் 149.7cc, ஏர்-கூல்டு, மூன்று-வால்வுகள் கொண்ட ஒற்றை-சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது. இந்த யூனிட் 13bhp பவர் மற்றும் 14.2Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இந்த எஞ்சின் CVT யூனிட் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு 104 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும் என்று டிவிஎஸ் கூறுகிறது.
டிவிஎஸ் நிறுவனம் இந்த ஸ்கூட்டரில் ஏராளமான உபகரணங்களை வழங்கியுள்ளது. ஃபுல் எல்இடி லைட்களைத் தவிர, இந்த ஸ்கூட்டரின் டாப்-வேரியண்டில் ஃபுல் TFT டிஸ்ப்ளே உள்ளது. இத்துடன் ப்ளூடூத் கனெக்டிவிட்டி, டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் ஸ்ட்ரீட், ரேஸ் என இரு ரைட் மோட்கள் உள்ளன.
டிவிஎஸ் என்டார்க் 150 இந்த பிரிவில் முதன்முறையாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய பிரேக் லீவர்களையும் கொண்டுள்ளது. புதிய டிவிஎஸ் என்டார்க் மாடலுக்கான முன்பதிவுகள் தொடங்கியுள்ளன, விரைவில் டெலிவரிகளும் தொடங்கும்.
- ஆசியாவிலேயே மிகப்பெரிய பள்ளிகொண்ட பெருமாள் உள்ள தலம் திருமயம்.
- திருச்சியில் இருந்து முசிறி செல்லும் சாலையில் உள்ளது, வேதநாராயணன் கோவில்.
திருப்பதி ஏழுமலைக்கு மேல் உள்ள நாராயணகிரியில், ஏழுமலையானின் பாதச்சுவடுகள் பதிந்திருப்பதாகக் கூறப்படுகிறது. 'ஸ்ரீவாரி பாதம்' என்று அழைக்கப்படும் அந்த இடத்தில், திருமலைவாசனின் பாதச்சுவடுகளே வழிபடப்படுகின்றன.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் உள்ள பெருமாளின் உற்சவத் திருமேனியில், மார்பில் சிவலிங்க அடையாளம் உள்ளது.
உடுப்பியில் உள்ள கிருஷ்ணருக்கு, நவராத்திரியின் ஒன்பது நாட்களும் புடவை சாத்தி வழிபாடு செய்கிறார்கள்.
ஆந்திர மாநிலம் பத்ராசலத்தில் உள்ள ராமர் கோவிலில் உள்ள ராமபிரான், தனது கையில் சங்கு மற்றும் சக்கரம் தாங்கி காட்சியளிக்கிறார்.
திருநெல்வேலிக்கு அருகில் உள்ள நாங்குநேரியில் வானமாமலை பெருமாள் கோவில் இருக்கிறது. இங்குள்ள பெருமாளுக்கு தினமும் மூன்று லிட்டர் எண்ணெய் சாத்தப்படுகிறது. பின்பு இது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
சென்னையை அடுத்துள்ள சிங்கப்பெருமாள் கோவிலில் சிவபெருமானைப் போலவே மூன்று கண்களைக் கொண்ட பெருமாளை வழிபாடு செய்யலாம். இங்குள்ள மூலவரான நரசிம்மருக்கு மூன்று கண்கள் உள்ளன.
திருக்கண்ணபுரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, பத்மினி, ஆண்டாள் என நான்கு தேவியருடன், பத்மாசனத்தில் அமர்ந்தபடி, கரங்களில் சங்கு, சக்கரம் தாங்கியபடி காட்சியளிக்கிறார், கண்ணபுரத்தான்.
ஆசியாவிலேயே மிகப்பெரிய பள்ளிகொண்ட பெருமாள் உள்ள தலம் திருமயம். ஒரே மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட சிவன் மற்றும் பெருமாள் கோவில் இது மட்டுமே.
திருச்சியில் இருந்து முசிறி செல்லும் சாலையில் உள்ளது, வேதநாராயணன் கோவில். இங்குள்ள பெருமாள் நான்கு வேதங்களையும் தலையணையாக வைத்துப் படுத்திருக்கிறார். இதனால் அவருக்கு 'வேதநாராயணன்' என்று பெயர்.
காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோவிலில் உள்ள அத்திவரதர், அனந்தசரஸ் என்ற திருக்குளத்தில் நீருக்கு அடியில் நிரந்தரமாக எழுந்தருளியுள்ளார். இவர் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே வந்து மக்களுக்கு காட்சி தருவார்.
கர்நாடகத்தில் உள்ள ஸ்ரீரங்கபட்டினத்தில் உள்ள ரங்கநாதர் ஆலயத்தில், ரங்கநாதருக்கு குடைபிடித்தபடி இருக்கும் ஆதிசேஷனுக்கு ஏழு தலைகள் இருக்கின்றன.
திருமலை, தான்தோன்றிமலை, உப்பிலியப்பன்கோவில், குணசீலம் ஆகிய நான்கு பெருமாள் கோவில்களிலும் தாயாருக்கு சன்னிதி இல்லை.

பொதுவாக பெருமாள், ஆதிசேஷன் மேல் சயனித்தபடி இருப்பார். ஆனால் ஸ்ரீவைகுண்டத்தில் ஆதிசேஷன் குடைபிடிக்க, நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
காஞ்சிபுரத்தில் உள்ள விளக்கொளிப் பெருமாள் கோவிலில், பெருமாள் ஜோதி வடிவில் இருப்பதாக ஐதீகம். இங்கு பெரிய கார்த்திகை அன்று பெருமாளுக்கு விளக்கேற்றி வழிபடுகிறார்கள்.
நெல்லை அருகே உள்ள கருங்குளத்தில் பெருமாளை மூன்று அடி உயரமுள்ள சந்தனக்கட்டை வடிவில் வைத்து அபிஷேக ஆராதனை செய்து பூஜித்து வருகிறார்கள். இதற்கு இரண்டு பக்கமும் சங்கு, சக்கரம் இருக்கிறது.
மாமல்லபுரம் தல சயனப் பெருமாள் கோவிலில் பெருமாள், ஒரு கரத்தை தலைக்கு வைத்துக் கொண்டு தரையில் சாய்வாகக் கால் நீட்டி சயனம் கொண்டிருக்கிறார். சங்கு, சக்கரம் இல்லை.
காஞ்சி உலகளந்தபெருமாள் திருக்கோவிலில் திருமழிசையாழ்வாராலும், திருமங்கை மன்னராலும் மங்களாசாசனம் செய்யப்பட்ட நான்கு திவ்ய தேசங்கள் உள்ளன.
- ஹூண்டாய் நிறுவனம் நைட் எடிஷன் அம்சங்களை i20 N லைன் மாடலுக்கும் நீட்டித்துள்ளது.
- இது 6-ஸ்பீடு மேனுவல் அல்லது DCT யூனிட் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் i20 நைட் எடிஷன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் அதன் நைட் எடிஷன் மாடல்கள் எண்ணிக்கையை விரிவுபடுத்தியுள்ளது. ரூ. 9.15 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் தொடங்கும் இந்த சிறப்பு மாடல், i20-யின் பிரபலத்தை அடிப்படையாகக் கொண்டு, இருண்ட, ஸ்போர்ட்டியர் தோற்றத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய i20 நைட் எடிஷன் ஸ்போர்ட்ஸ் (O) மற்றும் அஸ்டா (O) வேரியண்ட்களில் வழங்கப்படுகிறது. இந்த எடிஷனில் அலாய் வீல்கள், ரூஃப் ரெயில்கள், ஸ்கிட் பிளேட்டுகள், சைடு சில், வெளிப்புற கண்ணாடிகள், பின்புற ஸ்பாய்லர் மற்றும் மேட் பிளாக் நிறத்தில் ஹூண்டாய் லோகோ உள்ளிட்ட பல பிளாக்-அவுட் அம்சங்கள் சேர்க்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் சிவப்பு நிற பிரேக் காலிப்பர்கள், பிரத்யேக நைட் லோகோ மற்றும் ஸ்போர்ட் மெட்டல் பெடல்களை கொண்டுள்ளது. உள்புறம் கேபினில் பிரான்ஸ் இன்சர்ட்களுடன் ஃபுல் பிளாக் தீம் மற்றும் பிரான்ஸ் சிறப்பம்சங்களுடன் பிளாக் நிற இருக்கை மேற்கவர்கள் வழங்கப்படுகிறது.
ஹூண்டாய் நிறுவனம் நைட் எடிஷன் அம்சங்களை i20 N லைன் மாடலுக்கும் நீட்டித்துள்ளது. அதன்படி N8 மற்றும் N10 வேரிண்ட்களில் கிடைக்கும், i20 N லைன் நைட் எடிஷனின் விலை ரூ. 11.43 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது.
தோற்றம் தவிர்த்து மெக்கானிக்கல் அம்சங்களில், இரண்டு மாடல்களும் மாறாமல் உள்ளன. i20 அதன் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது CVT உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, i20 N லைன் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினைப் பயன்படுத்துகிறது. இது 6-ஸ்பீடு மேனுவல் அல்லது DCT யூனிட் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஹூண்டாயின் ஹேட்ச்பேக் வரிசையில் உள்ள ஸ்டாண்டர்ட் மற்றும் N லைன் மாடல்களுடன் i20 நைட் மாடல் இடம்பெறும்.
- இரு குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
- மறுநாள் பஞ்சாயத்து வரை இந்த விஷயம் சென்றது.
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கு சமோசா என்றால் அலாதி பிரியம். எனவே தனது கணவரிடம் சமோசா வாங்கி வருமாறு கூறியுள்ளார். அவர் அதனை வாங்க மறந்து வீட்டுக்குச் சென்று விட்டார். ஆனால் அது இந்த அளவுக்கு போகும் என அவரே நினைத்திருக்க வாய்ப்பில்லை.
அதாவது அந்த பெண் உடனடியாக தனது பெற்றோரிடம் வீட்டுக்கு வருமாறு கூறியுள்ளார். அவர்கள் சென்றதும் இரு குடும்பத்தினருக்கும் இடையே இதுதொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் பெண்ணின் குடும்பத்தினர் அவரது கணவர், மாமனாரை சரமாரியாக தாக்கி உள்ளனர்.
இத்துடன் முடியாமல் மறுநாள் பஞ்சாயத்து வரை இந்த விஷயம் சென்றது. அப்போதும் பெண்ணின் குடும்பத்தினர் கணவன் வீட்டாரை தாக்கினர். இதனை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டனர். இந்த வீடியோ வைரலான நிலையில் சமோசாவுக்காக ஒரு குடும்பமே சண்டையிடுவதா? என நெட்டிசன்கள் பலரும் அந்த பெண்ணை வசைபாடி வருகின்றனர்.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம்
ஒளிமயமான எதிர்காலத்திற்கு உறுதுணைபுரியும் நாள். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழகிய சிலருக்காக கணிசமான தொகையைச் செலவிட நேரிடலாம். இடமாற்றம் செய்யலாமா? என்ற எண்ணம் உருவாகும்.
ரிஷபம்
சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. தொழிலில் ஒப்பந்தங்கள் வரலாம்.
மிதுனம்
பிறரை விமர்சிப்பதன் மூலம் பிரச்சனைகள் ஏற்படும் நாள். எடுத்த காரியத்தை முடிக்கப் பெரும் பிரயாசை எடுக்க நேரிடும். விலைமதிப்புள்ள பொருள்களைக் கையாள்வதில் கவனம் தேவை.
கடகம்
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. திடீர் விரயம் உண்டு. உறவினர்களால் பிரச்சனைகள் வீடு தேடி வரலாம்.
சிம்மம்
கல்யாண முயற்சி கைகூடும் நாள். வரவு திருப்தி தரும். தொழில் பங்குதாரர்கள் உங்கள் கருத்துக்களுக்கு ஒத்து வருவர். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் கூடுதல் பொறுப்புகளை வழங்குவர்.
கன்னி
கனவுகள் நனவாகும் நாள். நீண்ட நாட்களாகச் சந்திக்க நினைத்த ஒருவரின் சந்திப்பு கிடைத்து மகிழ்வீர்கள். ஆடை, ஆபரணப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கூடும்.
துலாம்
சிந்திய வியர்வைக்கு சிறப்பான பலன் கிடைக்கும் நாள். திடீர் வரவு மகிழ்ச்சி தரும். புத்திசாலித்தனமான கடன் பாக்கிகளை நாசூக்காகப் பேசி வசூலிப்பீர்கள்.
விருச்சிகம்
செல்வ நிலை உயரும் நாள். நண்பர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியம் நடைபெறும். வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். இடம், பூமியால் எதிர்பார்த்த லாபம் உண்டு.
தனுசு
சகோதர ஒற்றுமை பலப்படும் நாள். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள். எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர்.
மகரம்
நட்பு வட்டம் விரிவடையும் நாள். பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள்.
கும்பம்
கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். தேங்கிய காரியங்களைத் துரிதமாகச் செய்து முடிப்பீர்கள். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும்.
மீனம்
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். சொந்த பந்தங்களின் சந்திப்பு கிடைக்கும். வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை. பணியாளர்களால் தொல்லைகள் ஏற்படும்.
- 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக 17,613 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளன.
- மின்சார வாகனத்துறையில், இங்கிலாந்தின் இந்துஜா குழுமம் ரூ.7,500 கோடி முதலீடு செய்ய உள்ளது.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
ஜெர்மனி, பிரிட்டன் பயணங்கள் மூலம் தமிழ்நாட்டுக்கு ரூ.15,516 கோடி மதிப்பில் முதலீடுகள் கிடைத்துள்ளன. 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக 17,613 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளன.
மின்சார வாகனத்துறையில், இங்கிலாந்தின் இந்துஜா குழுமம் ரூ.7,500 கோடி முதலீடு செய்ய உள்ளது. தமிழ்நாட்டில் இந்துஜா குழுமம் முதலீடு செய்வதன் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு உருவாகும்.
இவை வெறும் எண்ணிக்கை அல்ல, வாய்ப்புகள், எதிர்காலம் மற்றும் கனவுகள். இது தான் திராவிட மாடல் அரசின் உத்வேகம் என்று பதிவிட்டுள்ளார்.
- இந்த மாற்றங்கள் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.48,000 கோடி இழப்பை ஏற்படுத்தும் என்று மத்திய அரசு மதிப்பிட்டிருந்தது.
- சுமார் 295 அத்தியாவசியப் பொருட்களின் மீதான வரி விகிதத்தை 12% முதல் 5% அல்லது பூஜ்ஜிய சதவீதமாகக் குறைகிறது.
56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 5%, 12%, 18%, 28% என்ற நான்கு அடுக்கு வரி முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, 5% மற்றும் 18% என்ற இரண்டு அடுக்கு வரி முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் சிகரெட், பான்மசாலா, குளிர்பானங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு மட்டும் 40% வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.48,000 கோடி இழப்பை ஏற்படுத்தும் என்று மத்திய அரசு மதிப்பிட்டிருந்தது.
ஆனால் இந்த மாற்றங்களால் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.3,700 கோடி மட்டுமே இழப்பு ஏற்படும் என்று ஸ்டேட் வங்கி மதிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக எஸ்பிஐ வெளியிட்ட அறிக்கையில், இந்த சீர்திருத்தங்கள் நுகர்வு அதிகரிக்வும் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிக்கும் என்று கூறியுள்ளது.
சுமார் 295 அத்தியாவசியப் பொருட்களின் மீதான வரி விகிதத்தை 12% முதல் 5% அல்லது பூஜ்ஜிய சதவீதமாகக் குறைப்பது சில்லறை பணவீக்கத்தைக் கணிசமாகக் குறைக்கும் என்று அதில் குறிப்பிடடுள்ளது.
மேலும் வருடம் ரூ.3,700 கோடி இழப்பு என்பது மிகக் குறைவாக இருப்பதால், நிதிப் பற்றாக்குறையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






