என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்ரீகாந்தி"

    • அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கும், என்ன மாற்றங்கள் வேண்டுமானாலும் நடக்கும்.
    • அன்புமணி அறிவித்த கூட்டணி செல்லாது.

    விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * 2 நாட்களில் மூத்த தலைவர்களுடன் கலந்தாலோசித்து யாருடன் கூட்டணி என்பது குறித்து அறிவிக்கப்படும்.

    * அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கும், என்ன மாற்றங்கள் வேண்டுமானாலும் நடக்கும்.

    * அ.தி.மு.க. தரப்பில் இருந்து இதுவரை கூட்டணி குறித்து யாரும் பேசவில்லை என்று கூறினார்.

    இதைத்தொடர்ந்து பா.ம.க. செயல் தலைவர் ஸ்ரீ காந்தி கூறியதாவது:

    * அன்புமணி அறிவித்த கூட்டணி செல்லாது.

    * ராமதாஸ் அறிவிக்கும் கூட்டணிதான் வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த 2025-ம் ஆண்டு நமக்கு சோதனைகள் நிறைந்த ஆண்டாக இருந்தது.
    • நாம் பெரிதும் நம்பியவர்களின் துரோகங்களையும், ஏமாற்றங்களையும் எதிர்கொண்டோம்.

    பா.ம.க. செயல் தலைவர் ஸ்ரீகாந்தி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2025-ம் ஆண்டு நமக்கு சோதனைகள் நிறைந்த ஆண்டாக இருந்தது. நாம் பெரிதும் நம்பியவர்களின் துரோகங்களையும், ஏமாற்றங்களையும் எதிர்கொண்டோம். ஆனால், என் தாயார் அடிக்கடி சொல்வது போல, நடந்தவை யாவும் நன்மைக்கே எடுத்துக்கொண்டு நாம் முன்னேறுகிறோம். துரோகங்கள் நம்மை உடைக்கவில்லை. மாறாக நம்மை இன்னும் கூர்மையாக்கி அசைக்க முடியாத சக்தியாக மாற்றியிருக்கிறது.

    தர்மம் தாமதிக்கலாம். ஆனால் தவறாமல் ஜெயிக்கவும் செய்யும் என்ற வாக்கிற்கு இணங்க, வஞ்சகத்தின் மேகங்கள் விலகி, நீதியின் ஒளி விரைவில் பிறக்கும். 2026- ஆண்டு, துரோகத்திற்கு எதிரான உண்மையின் வெற்றியாகவும், அச்சுறுத்தலுக்கு எதிரான நம்பிக்கையின் வெற்றியாகவும் அமையும்.

    நேற்றிரவு எனது தாயார் என்னிடம் ஒரு தீர்க்கமான நம்பிக்கையை பகிர்ந்துகொண்டார். 2026 சட்டமன்றத் தேர்தலில், பாட்டாளி மக்கள் கட்சி 26 தொகுதிகளில் மகத்தான வெற்றி பெறும்' என்பதே அந்த நம்பிக்கை.

    இந்த இயக்கம் பதவி ஆசைக் கொண்டவர்களால் கட்டப்பட்டது அல்ல. ரத்தமும் வியர்வையும் சிந்தி உழைத்த உண்மையான தொண்டர்களாலும், மக்களாலும் கட்டப்பட்டது. உங்கள் அன்பும், விசுவாசமுமே எங்களின் மிகப்பெரிய பலம்.

    இந்த புத்தாண்டு தமிழகத்தின் ஒவ்வொரு இல்லத்திலும் மகிழ்ச்சியையும், நல்ல ஆரோக்கியத்தையும், செழிப்பையும் கொண்டு வரட்டும் மருத்துவர் அய்யா அவர்களின் வழிகாட்டுதலோடும். சேவை மனப்பான்மையோடும் 2016-ஐ பாமக-வின் பொற்காலமாக மாற்ற நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம்.

    தமிழக மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்.

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    இவ்வாறு ஸ்ரீகாந்தி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    • வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு விரைவில் கிடைக்கும்.
    • சில்லறை பசங்களை வைத்துக்கொண்டு என்னை தினமும் காயப்படுத்துகிறார்கள்.

    சேலத்தில் இன்று டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடந்த பொதுக்குழுவில் பா.ம.க. தலைவர் அன்புமணிக்கு கண்டனம் தெரிவித்தும் விமர்சித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை தொடந்து நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்ணீர் மல்க தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    * செயற்குழுவும், பொதுக்குழுவும் நேற்று முதலே களைகட்டத் தொடங்கி விட்டது.

    * பொதுக்குழுவில் 27 தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கிறோம்.

    * என்னிடத்தில் உள்ள ஆதங்கத்தை கொட்டித் தீர்க்க ஒரு மணி நேரம் தேவை.

    * நான் வளர்த்த பிள்ளைகள் தான் என்னை தூற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.

    * 2026 சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி, நல்ல முடிவு எடுப்பேன்.

    * வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு விரைவில் கிடைக்கும்.

    * தனது கனவில் தாய் வந்ததை நினைத்து மனம் உடைந்து கண்ணீர் சிந்தினார். அப்போது தொண்டர்கள் அழக் கூடாது ஐயா என கூறினர்.

    * பிள்ளையை நான் சரியாக வளர்க்கவில்லை என கனவில் தாயிடம் அழுதேன்.

    * என்னை 20- 30 துண்டுகளாக கூட வெட்டி வீசி இருக்கலாம், போய் சேர்ந்திருப்பேன்.

    * சில்லறை பசங்களை வைத்துக்கொண்டு என்னை தினமும் காயப்படுத்துகிறார்கள்.

    * 100-க்கு 95 சதவீத பாட்டாளி மக்கள் தன் பக்கம் தான் இருக்கிறார்கள்.

    * அன்புமணி தன்னை நெஞ்சிலும், முதுகிலும் ஈட்டியால் குத்திவிட்டதாக பேசினார். 

    • விமர்சனங்களை காந்திமதி இன்றோடு நிறுத்தி கொள்ள வேண்டும்.
    • இல்லாவிட்டால் பல விஷயங்களை நாங்களும் சொல்ல நேரிடும் என்று எச்சரிக்கிறோம்.

    சென்னை:

    சேலத்தில் இன்று டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடந்த பொதுக்குழுவில் பா.ம.க. தலைவர் அன்புமணிக்கு கண்டனம் தெரிவித்தும் விமர்சித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதற்கு அன்புமணி தரப்பு பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக வக்கீல் பாலு கூறியதாவது:-

    சேலத்தில் இன்று அவர்கள் எடுத்த முடிவுகள் எதுவும் எங்களை கட்டுப்படுத்தாது. இரண்டு கேலி கூத்தான தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கிறார்கள். அதாவது, பா.ம.க. தலைவராக டாக்டர் ராமதாசை தேர்வு செய்ததாக குறிப்பிட்டுள்ளார்கள். அப்படியானால், இதுவரை பேசியது பொய்யா? டாக்டர் ராமதாசை பொதுக்குழுவில் முறைப்படி தலைவராக தேர்வு செய்துவிட்டதாகவும், அதை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்து விட்டதாகவும் ஐகோர்ட்டு அங்கீகரித்துவிட்டதாகவும் கூறி வந்தார்கள். அப்படியானால் இப்போது தலைவரை தேர்வு செய்திருப்பதாக கூறுவது ஏன்?

    ஒரு கட்சியின் புதிய தலைவரை அந்த கட்சியின் தலைவராக இருப்பவர்தான் பொதுக்குழுவை கூட்டி தேர்வு செய்ய முடியும். அதன்படி, பா.ம.க. தலைவராக இருக்கும் அன்புமணிதான் பொதுக்குழுவை கூட்டி புதிய தலைவரை தேர்வு செய்ய முடியும்.

    இன்னொரு கேலி கூத்தான தீர்மானத்தையும் சொல்லி உள்ளார்கள். அதாவது, பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் பொறுப்பில் இருந்து சவுமியா அன்புமணியை நீக்கி இருப்பதாக கூறியிருக்கிறார்கள். சவுமியா அன்புமணி ஐ.நா. சபையால் அங்கீகரிக்கப்பட்ட பசுமைத் தாயகம் அமைப்பில் நீண்ட நாட்களாக தலைவராக இருக்கிறார். அவரை நீக்க வேண்டுமென்றால் அந்த அமைப்பின் பொதுக்குழுதான் கூடி முடிவெடுக்கும். இன்னொரு அமைப்பு அந்த முடிவை எடுப்பதற்கு என்ன உரிமை உள்ளது?

    காந்திமதி எங்கள் தலைவரை மிக மோசமாக தரக்குறைவாக விமர்சித்துள்ளார். அதை கடுமையாக கண்டிக்கிறோம். ஏற்றுக் கொள்ள மாட்டோம். அன்புமணி எங்கள் கட்சியை வழிநடத்தி வரும் தலைவர். அவரை யார் விமர்சனம் செய்தாலும் ஏற்க மாட்டோம். அது அக்காவாக இருந்தாலும் சரி, அக்கா-தம்பி சண்டை இருந்தால் வீட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.

    பா.ம.க. டாக்டர் ராமதாசின் குடும்ப சொத்தும் அல்ல. இந்த விமர்சனங்களை காந்திமதி இன்றோடு நிறுத்தி கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பல விஷயங்களை நாங்களும் சொல்ல நேரிடும் என்று எச்சரிக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அன்புமணிக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
    • ராமதாஸின் அனுமதியின்றி பா.ம.க. கொடியை சௌமியா அன்புமணி பயன்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டது.

    பா.ம.க.வில் தந்தை-மகனுக்கும் இடையே ஏற்பட்ட அதிகார மோதல் போக்கு அதிகரித்து தற்போது இருதரப்பினரும் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை நடத்தி வருகின்றனர்.

    அந்த வகையில், இன்று சேலத்தில் ராமதாஸ் தரப்பினர் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை நடத்தினர். இதில் அன்புமணிக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அதேபோல் ராமதாஸின் அனுமதியின்றி பா.ம.க. கொடியை சௌமியா அன்புமணி பயன்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து, பசுமை தாயகம் அமைப்பின் தலைவராக ராமதாஸின் மகள் ஸ்ரீகாந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அப்பொறுப்பில் இருந்த சௌமியா அன்புமணி நீக்குவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

    • ராமதாஸ் இல்லாத பா.ம.க. பிணத்துக்கு சமம்.
    • ராமதாஸ் தேர்தலுக்கு வியூகம் வகுத்து விட்டார்.

    சேலத்தில் ராமதாஸ் தலைமையில் பா.ம.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ராமதாஸ் தரப்பு பா.ம.க. செயல் தலைவர் ஸ்ரீகாந்தி பேசியதாவது:-

    அன்புமணி அணிந்திருக்கும் கோட் சூட் யார் கொடுத்தது? எம்.பி. பதவியும், அமைச்சர் பதவியும், உழைத்து வாங்கியதா? ராமதாஸ் இல்லாத பா.ம.க. பிணத்துக்கு சமம். தம்பி அன்புமணிக்கு அதிகாரம் வேண்டும் என்றால் புதிய கட்சியை தொடங்கிக் கொள்ளட்டும்.

    ராமதாஸுக்கு அன்புமணி செய்தது பச்சை துரோகம்!

    ராமதாஸ் தேர்தலுக்கு வியூகம் வகுத்து விட்டார். யாருடன் கூட்டணி? யாருக்கு சீட்டு? எப்படி ஜெயிக்க வேண்டும் என அவருக்கு தெரியும். இனிமே குறுக்க பேச யாருமே கிடையாது. காலை வாரி விடவும் யாரும் இல்லை என்றார். 

    • ராமதாஸ் கட்சியை முழுமையாக தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர நிர்வாகிகள் மாற்றம் உட்பட பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார்.
    • கட்சிக்கும் தனக்கும் ஸ்ரீகாந்தி பாதுகாப்பாக இருப்பார் என்று அவர் தெரிவித்தார்.

    பா.ம.க.வில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கட்சியில் தலைவர் பதவி, அதிகாரமும் யாருக்கு என்பதில் கடுமையான மோதல் நீடித்து வருகிறது.

    அன்புமணியின் செயல்பாட்டில் அதிருப்தியடைந்த ராமதாஸ், கட்சியை முழுமையாக தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர நிர்வாகிகள் மாற்றம் உட்பட பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார்.

    இந்நிலையில் தருமபுரியில் பா.ம.க. பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பா.ம.க. தலைவர் ராமதாஸ், பா.ம.க. செயல்தலைவராக ஸ்ரீகாந்தி செயல்படுவார் என அறிவித்தார்.

    கட்சிக்கும் தனக்கும் ஸ்ரீகாந்தி பாதுகாப்பாக இருப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.

    பா.ம..க செயல்தலைவர் பதவியில் இருந்து மகன் அன்புமணியை நீக்கிய ராமதாஸ் அந்த பதவியை மகள் ஸ்ரீகாந்திக்கு வழங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    • மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்தி பங்கேற்க இருந்தார்.
    • ராமதாஸ் ஆதரவாளர் ம.க.ஸ்டாலினை கொல்ல முயற்சி நடந்துள்ளது.

    பா.ம.க. ராமதாஸ் அணியின் நிர்வாக குழு உறுப்பினர் ஸ்ரீகாந்தி கும்பகோணத்தில் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.

    கும்பகோணத்தில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்தி பங்கேற்க இருந்தார்.

    ராமதாஸ் ஆதரவாளர் ம.க.ஸ்டாலினை கொல்ல முயற்சி நடந்ததை அடுத்து ஸ்ரீகாந்தியின் கும்பகோணம் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

    ×