என் மலர்
தலைப்புச்செய்திகள்
- வைஷாலி (24) ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் தொடரை வென்று அசத்தியுள்ளார்.
- கேன்டிடேட்ஸ் செஸ் தொடருக்கு அவர் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி (24) ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் தொடரை வென்று அசத்தியுள்ளார்.
இறுதிப்போட்டியில் சீன வீராங்கனை டான் ஸோங்கி உடன் மோதிய வைஷாலி 11 சுற்றுகளில், 8 புள்ளிகளைப் பெற்று தொடரை வென்றார். வைஷாலி கிராண்ட் செஸ் தொடரை வெல்வது இது இரண்டாவது முறையாகும்.
இதன்மூலம், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கேன்டிடேட்ஸ் செஸ் தொடருக்கு அவர் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளார்.
மேலும் இந்த வெற்றியின் மூலம் கேன்டிடேட்ஸ் செஸ் தொடருக்குத் தேர்வாகியுள்ள மூன்றாவது இந்திய வீராங்கனையாகவும் வைஷாலி மாறியுள்ளார். முன்னதாக இந்திய வீராங்கனைகளான திவ்யா தேஷ்முக், கோனெரு ஹம்பி ஆகியோர் தேர்வாகினர்.
கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரின் மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வைஷாலிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரின் மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற நமது சென்னைப் பெண் வைஷாலிக்கு வாழ்த்துக்கள். இந்த வெற்றி வெறும் ஒரு தனிப்பட்ட மைல்கல் மட்டுமல்ல, சென்னைக்கும், தமிழ்நாட்டிற்கும், இப்போது உலக அரங்கில் தங்கள் கனவுகள் பிரதிபலிப்பதைக் காணும் எண்ணற்ற இளம் பெண்களுக்கும் ஒரு கொண்டாட்டமாகும்" என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், " வைஷாலி ரமேஷ்பாபுவுக்கு வாழ்த்துக்கள். இது ஒரு சிறப்பான சாதனை என்றும் அவரது ஆர்வமும், அர்ப்பணிப்பும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக உள்ளது. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.
- தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்களில் ஒரு கிராம் தங்கத்துக்கு ரூ.8 ஆயிரம் வீதம் கடன் வழங்கப்படுகிறது.
- கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில், ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.6,300 வரை கடன் வழங்கப்படுகிறது.
தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலோ அல்லது பாராளுமன்ற தேர்தலோ நெருங்கி வரும் நேரங்களில் அரசியல் கட்சியினர் பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அள்ளி வீசுவார்கள்.
அதில் முக்கியமான ஒன்றுதான் விவசாயக்கடன், நகைக்கடன் தள்ளுபடி. இது பலருக்கும் நன்மைதான் என்றாலும், தேர்தல் வரும்போதெல்லாம் அரசியல் கட்சியினர் விவசாய கடன் தள்ளுபடி வாக்குறுதி கொடுப்பார்களா? என எதிர்பார்க்கும் நிலைக்கு சென்றுவிட்டனர்.
பொதுவாக தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும், மாநில, மாவட்ட தலைமை கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு சங்கங்கள், நகர கூட்டுறவு சங்க வங்கிகள், மத்திய கூட்டுறவு வங்கிகள் போன்றவற்றில் தங்க நகை அடமானத்தின் பேரில் கடனுதவி வழங்கப்படுகிறது.
தற்போது ஒரு கிராம் தங்கம் ரூ.10,005-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தனியார் வங்கிகள், நிதிநிறுவனங்களில் ஒரு கிராம் தங்கத்துக்கு ரூ.8 ஆயிரம் வீதம் கடன் வழங்கப்படுகிறது.
கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில், ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.6,300 வரை கடன் வழங்கப்படுகிறது. அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருவதால் இந்த முறையும் அரசியல் கட்சியினர் விவசாயக்கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளது என மக்கள் உஷாராகிவிட்டனர்.
இதனால் நகைகளை எடுத்துக்கொண்டு கூட்டுறவு வங்கிகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதனால் கூட்டுறவு வங்கி, சங்கங்களில் கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான கால கட்டத்தில் மட்டும் சுமார் 25 லட்சம் பேருக்கு, ரூ.25 ஆயிரம் கோடி நகைக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வழங்கப்பட்ட நகை அடமானக் கடன் தொகையை விட அதிகமாகும்.
இது குறித்து ஓய்வு பெற்ற கூட்டுறவுதுறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''தேர்தலையொட்டி நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு இடம் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இதனால் கூட்டுறவு வங்கி, சங்கங்களில் இதுவரை நகை அடமானக்கடன் வாங்காதவர்களும் 3 பவுன் முதல் 5 பவுன் வரை நகையை அடமானமாக வைத்து கடன்பெற ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனால் கிராமப்புறங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் இலக்கை விட நகைக்கு அதிக தொகை வழங்கப்பட்டுள்ளது'' என்றார்.
இதேபோல் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்பதால் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் தங்க நகைகளை விவசாய கடன் என்று கூறி பொதுமக்கள் விவசாய நிலத்திற்கான படங்கள் மற்றும் உரிய ஆவணங்களுடன் அடமானம் வைத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மக்களின் நம்பிக்கை பலிக்குமா? அல்லது பாழாய் போகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
- சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
- ரஷிய அதிபர் புதினுடன் டிரம்ப் நேரடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
- உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் வழங்கக் கூடாது என்று ரஷியா தெரிவித்தது.
ரஷியா- உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இப்போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார்.
சமீபத்தில் ரஷிய அதிபர் புதினுடன் டிரம்ப் நேரடி பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் புதின் சில நிபந்தனைகளை விதித்தார். பிறகு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேசினார்.
இதற்கிடையே உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதங்களை அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் வழங்க வேண்டும் என்று ஜெலன்ஸ்கி வலியுறுத்தினார். இதில் போர் நிறுத்தப்பட்ட தருணத்தில் பாதுகாப்பை வழங்க உதவுவதற்காக உக்ரைனின் 26 நட்பு நாடுகள் நிலம், கடல் அல்லது வான் வழியாக துருப்புக்களை அனுப்ப உறுதியளித்துள்ளதாக பிரான்ஸ் அதிபர் மெக்ரான் தெரிவித்தார்.
இந்த நிலையில் வெளிநாட்டு ராணுவத்தால் உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் வழங்கக் கூடாது என்று ரஷியா தெரிவித்தது.
இதனையடுத்து உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவாா்த்தைகளை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக ரஷியா அறிவித்தது.
இந்நிலையில், உக்ரைனுக்கு உதவ பல பில்லியன் டாலர் மதிப்புள்ள முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்களை பயன்படுத்துவதற்கான வழிகளை ஐரோப்பிய ஒன்றியம் தேடிவருவதாக செய்திகள் வெளியானது.
இந்த தகவலால் கடுப்பான ரஷியா, தங்கள் சொத்துக்களை அபகரிக்கும் எந்த ஐரோப்பிய நாட்டையும் பழி தீர்ப்போம் என்று மிரட்டல் விடுத்துள்ளது. மேலும், தங்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வது திருட்டுக்கு சமம் என ரஷ்யா காட்டமான கருத்தை தெரிவித்துள்ளது.
- மாநில அரசு 55 சதவீதம் வரி விதிக்கிறது என்று சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது.
- மத்திய, மாநில அரசு சார்பில் தலா 2.5 சதவீத வரி மட்டுமே சமையல் கியாசுக்கு விதிக்கப்படுகிறது.
சென்னை:
தமிழ்நாட்டில் சமையல் கியாசுக்கு மத்திய அரசு 5 சதவீதம்தான் வரி விதிக்கிறது. ஆனால், மாநில அரசு 55 சதவீதம் வரி விதிக்கிறது என்று சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது. இது முற்றிலும் தவறான தகவல் என்று தமிழக அரசு சார்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்ட பதிவில், 'சமையல் கியாஸ் ஜி.எஸ்.டி. வரியின் கீழ் வருகிறது. மத்திய, மாநில அரசு சார்பில் தலா 2.5 சதவீத வரி மட்டுமே சமையல் கியாசுக்கு விதிக்கப்படுகிறது. எனவே வதந்திகளை பரப்ப வேண்டாம்' என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
- இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிராஜ் 23 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
- சிறந்த வீராங்கனைக்கான விருதை அயர்லாந்தின் ஓர்லா ப்ரெண்டர் காஸ்ட் வென்றுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மாதந்தோறும் சிறந்த வீரரை தேர்வு செய்து கவுரவிக்கிறது. அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் வென்றார்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்து வீசிய முகமது சிராஜ், ஐந்து போட்டிகளில் 23 விக்கெட்டுகள் வீழ்த்தினார். கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய முக்கிய காரணமாக இருந்தார்.
அதேபோல், சிறந்த வீராங்கனைக்கான விருதை அயர்லாந்தின் ஓர்லா ப்ரெண்டர் காஸ்ட் வென்றுள்ளார்.
- துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளார்.
- 17,18 ஆகிய தேதிகளுக்கான சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், சில நாட்களுக்கு முன் டெல்லிக்கு சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று அதிகாலை 5 மணிக்கு டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். அவருடன் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி ஆகியோரும் சென்றுள்ளனர்.
டெல்லி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளார். மேலும் மாலை 4 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பா.ஜ.க. முக்கிய தலைவர்களையும் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணத்தை ஒட்டி நாளை மற்றும் நாளை மறுநாளுக்கான சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- 21-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- சென்னையிலும் நள்ளிரவு முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 21-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதனால் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி, தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. சென்னையிலும் நள்ளிரவு முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, சேலம், திண்டுக்கல், கோவை, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். சுபகாரிய பேச்சுகள் முடிவாகலாம். தொழில் வளர்ச்சிக்கு முக்கிய புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுப்பீர்கள். பணத் தேவைகள் பூர்த்தியாகும்.
ரிஷபம்
வளர்ச்சி கூடும் நாள். வருமானம் இருமடங்காகும். பொருளாதார முன்னேற்றம் கருதி நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். விற்ற சொத்துகளை வாங்கும் யோகமுண்டு.
மிதுனம்
விருப்பங்கள் நிறைவேறும் நாள். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை வைப்பீர்கள். பணப்பற்றாக்குறை அகலும். இடமாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். உடல்நலம் சீராகும்.
கடகம்
சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். உத்தியோகத்தில் உயர்ந்த நிலை அடைய சந்தர்ப்பம் கைகூடி வரும். உங்கள் யோசனைகளை கேட்டு நடந்தவர்கள் பாராட்டுவர்.
சிம்மம்
வளர்ச்சி அதிகரிக்கும் நாள். ஆற்றல்மிக்கவர்களின் ஒத்துழைப்பால் தொழில் முன்னேற்றம் காண்பீர்கள். உடல்நலன் கருதி மருத்துவ செலவுகளைச் செய்ய நேரிடும்.
கன்னி
தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். கடின முயற்சிக்குப் பின்னால் காரியங்களில் வெற்றி கிடைக்கும். கொடுக்கல், வாங்கல்களை ஒழுங்கு செய்துகொள்ள முன்வருவீர்கள்.
துலாம்
புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள். புனிதப் பயணங்கள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறிகள் தோன்றும்.
விருச்சிகம்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பகையை வளர்த்துக்கொள்ள வேண்டாம். விரயங்கள் கூடும்.
தனுசு
சிந்தித்து செயல்படுவதன் மூலம் சிறப்புகள் வந்து சேரும் நாள். வரவை விடச் செலவு கூடும். சகோதர வழியில் பிரச்சனைகள் உருவாகும். பஞ்சாயத்துகள் முடிவடையாது.
மகரம்
பிள்ளைகள் வழியில் நல்ல காரியம் நடைபெறும் நாள். வாழ்க்கைத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும்.
கும்பம்
எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும் நாள். கடனாக கொடுத்த தொகை திரும்ப கிடைக்கலாம். அக்கம், பக்கத்தினரின் ஆதரவு உண்டு. சம்பள உயர்வுடன் கூடிய புதிய உத்தியோகம் வரலாம்.
மீனம்
வாரிசுகளின் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் நாள். பழுதாகிக் கிடந்த வாகனத்தைப் புதுப்பிக்கும் எண்ணம் ஏற்படும். அலைபேசி மூலம் சுபச் செய்திகள் வந்து சேரலாம்.
- வரி செலுத்துவோர் அவசர அவசரமாக கணக்குகளை தாக்கல் செய்ததால் இணையதளம் முடங்கியது.
- இதுவரை 7.30 கோடிக்கும் மேற்பட்டோர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.
2025-26 ஆண்டிற்கான வருமான வரி அறிக்கைகளை (ITR) தாக்கல் செய்வதற்கு மத்திய அரசு இன்று ஒருநாள் கூடுதல் அவகாசம் வழங்கியது.
வருமான வரி அறிக்கைகளை (ITR) தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் என்பதால் வரி செலுத்துவோர் அவசர அவசரமாக கணக்குகளை தாக்கல் செய்ததால் இணையதளம் முடங்கியது. இதனால் இன்றுவரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 7.30 கோடிக்கும் மேற்பட்டோர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வருமான வரி அறிக்கைகளை (ITR) தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வழக்கமாக ஜூலை 31, 2025 அன்று முடிவடையும்.
ஐடிஆர் படிவங்களில் மேற்கொண்டுள்ள மாற்றங்கள் காரணமாக இந்த கால அவகாசம் செப்டம்பர் 15 வரை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
- அப்பாசாமி, சங்கர் நகர் மெயின் ரோடு, காந்தி மெயின் ரோடு.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (17.09.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
அடையாறு: வெங்கடேஸ்வரா நகர், எம்ஜிஆர் நகர், பைபாஸ் ரோடு, தேவி கருமாரியம்மன் நகர், சசி நகர், பத்மாவதி நகர், முருகன் நகர், விஜயா நகர், கங்கை நகர், புவனேஸ்வரி நகர், ராம் நகர், நேரு நகர், தண்டீஸ்வரம் நகர், வேளச்சேரி மெயின் ரோடு, 100 அடி ரோடு, ராஜலட்சுமி நகர், வி.ஜி.பி., தெரு, காந்திஅம்மாபுரம் செல்வா நகர், சீத்தாராமன் நகர், புவனேஸ்வரி நகர், வேளச்சேரி மெயின் ரோடு, தரமணி மற்றும் பேபி நகர்.
செம்பியம்: எம்.எச்.ரோடு, கொல்லம் தோட்டம், செயின்ட் மேரீஸ் சாலை, சொக்கலிங்கம் தெரு, சின்ன குளந்தை 1 முதல் 4வது தெரு, எஸ்எஸ்வி கோவில் 1 முதல் 3வது தெரு, என்எஸ்கே தெரு, மதியழகன் தெரு, சீதாராமன் நகர் 1 முதல் 6வது தெரு, நரசிம்மரெட்டி நகர், 1 முதல் 4வது தெரு, பள்ளி உயர் சாலை, மணலி.
பம்மல்: கிழக்கு மெயின் ரோடு, அப்பாசாமி, சங்கர் நகர் மெயின் ரோடு, காந்தி மெயின் ரோடு, சங்கர் நகர் 2வது குறுக்குத் தெரு, சங்கர் நகர் 17வது முதல் 27வது தெரு, பிள்ளையார் கோவில் தெரு, மற்றும் திருநீர்மலை மெயின் ரோடு.
தரமணி: காமராஜ் அவென்யூ 1வது, 2வது தெரு மற்றும் 3வது குறுக்குத் தெரு, கஸ்தூரிபாய் நகர், கால்வாய் வங்கி சாலை, ஜஸ்டிஸ் ராமசாமி தெரு, வெங்கடரத்தினம் நகர் மெயின் ரோடு, டீச்சர்ஸ் காலனி, 4வது முதல் 8வது மெயின் ரோடு, 6வது முதல் 15வது குறுக்குத் தெரு மற்றும் இந்திரா நகர்.
- மதுரை ஸ்ரீ நவநீத கிருஷ்ண சுவாமி சேஷ வாகனத்தில் உறியடிக் காட்சி.
- சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆவணி-31 (செவ்வாய்க்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : தசமி பின்னிரவு 3.26 மணி வரை பிறகு ஏகாதசி
நட்சத்திரம் : திருவாதிரை காலை 10.45 மணி வரை பிறகு புனர்பூசம்
யோகம் : மரண, சித்தயோகம்
ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம்
சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். மதுரை ஸ்ரீ நவநீத கிருஷ்ண சுவாமி சேஷ வாகனத்தில் உறியடிக் காட்சி. குரங்கணி ஸ்ரீமுத்துமாலையம்மன் புறப்பாடு. திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம். சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீசண்முகருக்கு சத்ரு, சம்கார அர்ச்சனை.
ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு காலை சிறப்பு அபிஷேகம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-சிந்தனை
ரிஷபம்-நன்மை
மிதுனம்-சிறப்பு
கடகம்-முயற்சி
சிம்மம்-பொறுமை
கன்னி-பொறுப்பு
துலாம்- உழைப்பு
விருச்சிகம்-வெற்றி
தனுசு- ஊக்கம்
மகரம்-உறுதி
கும்பம்-நிறைவு
மீனம்-நிம்மதி






