search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜான் கௌம் வெளியேறினால் வாட்ஸ்அப்பில் இதான் நடக்கும்
    X

    ஜான் கௌம் வெளியேறினால் வாட்ஸ்அப்பில் இதான் நடக்கும்

    வாட்ஸ்அப் தலைமை செயல் அதிகாரி ஜான் கௌம் நிறுவனத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த நிலையில், வாட்ஸ்அப் செயலியில் ஏற்பட இருக்கும் மாற்றங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
    கலிஃபோர்னியா:

    வாட்ஸ்அப் தலைமை செயல் அதிகாரியான ஜான் கௌம் ஃபேஸ்புக் நிறுவனத்தை விட்டு வெளியேறுவதாக சில தினங்களுக்கு முன் அதிர்ச்சியளிக்கும் அறிவிப்பை வெளியிட்டார். இவரின் அறிவிப்புக்கு பின் வாட்ஸ்அப் செயலியில் ஏற்பட இருக்கும் மாற்றங்கள் என வெவ்வேறு தகவல்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருகி்ன்றன.

    அந்த வகையில் வாஷிங்டன் போஸ்ட் ஜான் கௌம் அறிவிப்புக்கு முன் கௌம் மற்றும் ஃபேஸ்புக் இடையே இருக்கும் வித்தியாசங்கள் சார்ந்த தகவல்களை வெளியிட்டது. இதில் வாடிக்கையாளரின் தனியுரிமை மற்றும் வாட்ஸ்அப் என்க்ரிப்ஷன் தன்மையை குறைப்பது உள்ளிட்ட விவகாரங்கள் இடம்பெற்றிருந்தது.

    தற்சமயம் வல்லுநர்கள் வெளியிட்டிருக்கும் தகவல்களில் ஜான் கௌம் வெளியேறியதும் வாட்ஸ்அப் தளத்தில் விளம்பரங்கள் இடம்பெறலாம் என தெரிவித்துள்ளனர். இதேபோன்று பார்கிளேஸ் வல்லுநர்கள் வெளியிட்டுள்ள தகவல்களில் ஜான் கௌம் வெளியேறியதும் விளம்பரங்கள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    வாட்ஸ்அப் நிறுவனர் குழு மற்றும் ஃபேஸ்புக் இடையே விளம்பர தளத்தில் மானிடைஸ் செய்வது குறித்து முரணான பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது. இவ்வாறு வாட்ஸ்அப் செயலியில் மானிடைஸ் செய்யும் போது ஃபேஸ்புக் நிறுவனத்தின் வருவாய் கனிசமான அளவு அதிகரிக்கும் என வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    ஃபேஸ்புக்-ஐ வெளியேறுவதாக அறிவித்த ஜான் கௌம், எவ்வித காரணத்தையும் தனது போஸ்ட்-இல் குறிப்பிடவில்லை. அவரது போஸ்ட்-இல், “நான் நினைப்பதை விட அதிகம்பேர், நான் கற்பனையிலும் நினைக்காத வழிகளில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் போது நான் விடைபெறுகிறேன். வாட்ஸ்அப் குழு இதுவரை இல்லாதளவு திறன்மிக்கதாக இருக்கிறது. தொடர்ந்து இந்த குழு அற்புத விடயங்களை மேற்கொள்ளும்.” என குறிப்பிட்டிருக்கிறார்.

    இவரது போஸ்ட்-க்கு ஃபேஸ்புக் பதிவிட்டிருந்த பதிலில் ஃபேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மார்க் சூக்கர்பர்க், “உங்களிடம் நெருங்கி பணியாற்றியதில் மகிழ்ச்சி. உலகை இணைக்க உங்களின் பங்கு மிகவும் மதிப்புமிக்கது. என்க்ரிப்ஷன் மற்றும் சென்ட்ரலைஸ்டு கம்ப்யூட்டர்களின் திறனை மக்களின் கையில் வழங்குவது நீங்கள் கற்பித்த அனைத்துக்கும் கடமைப்பட்டிருக்கிறேன். இவற்றின் மதிப்பு எப்போதும் வாட்ஸ்அப்-இல் இருக்கும்.” என குறிப்பிட்டிருக்கிறார்.
    Next Story
    ×