search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்: பேட்டரி டிப்ஸ்
    X

    ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்: பேட்டரி டிப்ஸ்

    ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் எப்போதும் தீராத பிரச்சனையாக இருக்கும் பேட்டரி பேக்கப் நேரத்தை அதிகரிக்க நீங்கள் என்ன செய்யலாம் என்பதை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் தீர்வு காண முடியாத பிரச்சனையாக அதன் பேட்டரி பேக்கப் இருக்கிறது. முந்தைய மொபைல் போன்களில் வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் என குறைந்த அம்சங்கள் இருந்ததால் பேட்டரி பேக்கப் குறைந்தபட்சம் இரண்டு நாட்களுக்கு நீடித்தது. ஆனால் இன்றைய ஸ்மார்ட்போன்களில் தகவல் பரிமாற்றம் மட்டுமின்றி பொழுதுபோக்கு, கேமிங் என பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன. 

    ஸ்மார்ட்போன்களில் அதிகப்படியான அம்சங்கள் நமக்குத் தேவையான பல்வேறு வசதிகளை வழங்கினாலும், சில மணி நேரங்களில் ஸ்மார்ட்போனை ஆஃப் செய்துவிடுகிறது. இதை எதிர்கொள்ள பேட்டரி திறனை அதிகரிப்பது, எந்நேரமும் கையில் வைத்திருக்க கூடிய பவர் பேங்க் உள்ளிட்ட சாதனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. எனினும் பேட்டரி பேக்கப் நேரத்தை அதிகரிக்கும் திறன் கொண்ட பேட்டரி இன்றளவும் கண்டறியப்படவில்லை. 

    ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோருக்கு எந்நேரமும் அச்சுறுத்தலாக இருக்கும் பேட்டரி பேக்கப் நேரத்தை அதிகரிக்க ஸ்மார்ட்போன்களில் செய்ய வேண்டியவற்றை பற்றி தொடர்ந்து பார்ப்போம். 



    பேட்டரி பேக்கப்:

    ஸ்மார்ட்போன் பேட்டரி நீண்ட நேரம் நீடிக்க அதன் பேட்டரி சேவர் மோடினை ஆன் செய்யலாம். இதை செய்ய ஸ்மார்ட்போனின் செட்டிங்ஸ் -- பேட்டரி -- மெனுவில் உள்ள பேட்டரி சேவர் மோடினை ஆன் செய்ய வேண்டும். 

    பேட்டரி சேவர் மோடினை ஆன் செய்ததும் ஸ்மார்ட்போன் திரையின் மேல் மற்றும் கீழ் பகுதிகளின் நிறம் இளஞ்சிவப்பு நிறத்தில் மாறியிருப்பதை காணலாம். 

    ஸ்மார்ட்போன் பேட்டரி நிறைவுறும் போது பேட்டரி சேவர் மோடினை தானாக இயக்கச் செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதை இயக்க "Turn on automatically" ஆப்ஷனில் பேட்டரி சதவிகிதத்தை குறித்து ஆக்டிவேட் செய்யலாம். இவ்வாறு செய்ததும் நீங்கள் ஆக்டிவேட் செய்திருந்த அளவில் பேட்டரி வரும் போது தானாக பேட்டரி சேவர் மோட் இயக்கப்பட்டு விடும். 

    வேகமாக சார்ஜ் செய்வது எப்படி?

    ஸ்மார்ட்போனினை வேகமாக சார்ஜ் செய்ய ஸ்மார்ட்போனினை சார்ஜரில் வைத்து, ஸ்மார்ட்போன் செட்டிங்ஸ் -- பேட்டரி செட்டிங்ஸ் -- ரேபிட் சார்ஜிங் வசதியை இயக்க வேண்டும். இவ்வாறு செய்ததும் ஸ்மார்ட்போனில் வேகமாக சார்ஜ் ஏற்றப்படும். 



    ஸ்மார்ட்போன் பிரைட்னஸ்:

    ஸ்மார்ட்போனின் செட்டிங்ஸ் -- டிவைஸ் -- டிஸ்ப்ளே ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இனி அடாப்டிவ் பிரைட்னஸ் (Adaptive brightness) ஆப்ஷனை கிளிக் செய்து ஆன் செய்ய வேண்டும். இந்த ஆப்ஷன் ஸ்மார்ட்போன் திரை பிரைட்னஸ் அளவை பேட்டரி பேக்கப் நேரத்திற்கு ஏற்ப தானாகவே மாற்றியமைக்கும்.  
     
    இதுதவிர ஸ்மார்ட்போன் பேட்டரியை மேம்படுத்த தேவையற்ற நேரங்களில் மொபைல் டேட்டா மற்றும் வைபை, ஜி.பி.எஸ்., ஸ்மார்ட்போன் லொகேஷனை உள்ளிட்டவற்றை ஆஃப் செய்து வைக்கலாம். ஸ்மார்ட்போன் திரையில் கருப்பு நிற வால்பேப்பர்களை வைப்பது அதன் பேட்டரி பேக்கப் நேரத்தை அதிகரிக்கும்.
    Next Story
    ×