search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெக் டிப்ஸ்"

    ஃபேஸ்புக் தளத்தில் மூன்று கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டு இருப்பது உறுதியாகி இருக்கும் நிலையில், உங்களின் விவரம் பறிபோனதா என்பதை அறிந்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என பார்ப்போம். #FacebookHack



    ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் கடுமையான பாதுகாப்பையும் மீறி மூன்று கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டதாக கடந்த மாதம் (செப்டம்பர்) அறிவிக்கப்பட்டது.

    அதில் யாருடைய தகவல்கள் திருடப்பட்டுள்ளது என உறுதி செய்ய முடியவில்லை. இது மோசமான நடவடிக்கை என ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்து இருந்தது. சமீபத்தில் 3 கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டிருப்பதை அந்நிறுவனம் உறுதி செய்தது. அவற்றில் 2 கோடியே 90 லட்சம் பேரின் பெயர் மற்றும் தகவல் தொடர்புகள் திருடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

    மேலும் 1 கோடியே 15 லட்சம் பேரின் பெயர் மற்றும் தகவல் தொடர்களான டெலிபோன் நம்பர், இமெயில் முகவரிகள் திருடப்பட்டன. 

    இவை தவிர 1 கோடியே 40 லட்சம் பேரின் பெயர், பாலினம், மொழி, உறவு முறை, மதம், சொந்த ஊர், தற்போது குடியிருக்கும் நகரம், பிறந்த தேதி, கல்வி, வேலை உள்ளிட்ட அனைத்து தகவல்களும் திருடப்பட்டு இருக்கின்றன.



    இவ்வாறு உங்களது தகவலும் திருடப்பட்டு இருப்பின், அதை எவ்வாறு கண்டறிய ஃபேஸ்புக் உதவி பக்கத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம். இந்த பக்கத்தின் கீழ் உங்களது அக்கவுன்ட் ஹேக் செய்யப்பட்டிருக்கிறதா என்று அறிந்து கொள்ள முடியும். உங்களது விவரங்கள் திருடப்பட்டது உண்மையெனில் அதை அறிந்து கொள்ளலாம். மேலும் திருடப்படவில்லை எனில், அந்த விவரமும் அறிந்து கொள்ளலாம்.

    வல்லுநர்களின் படி தகவல் பறிகொடுத்த பயனர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். ஹேக்கர்கள் திருடியிருக்கும் தகவல் கொண்டு போலி அடையாளச் சான்றாக பயன்படுத்த முடியும் என்பதால், பயனரின் அக்கவுன்ட் விவரங்களை இயக்க முடியும்.

    ஹேக்கர்கள் திருடிய தகவல்களின் விவரங்களை ஃபேஸ்புக் பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு குறுந்தகவல் மூலம் தெரியப்படுத்தும். 

    மேற்கண்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து பயனர் விவரங்களை பாதுகாக்கும் நோக்கில், ஃபேஸ்புக் அக்சஸ் டொக்கன்களை ரீசெட் செய்து இருப்பதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து அமெரிக்க உளவுத்துறையின் விசாரணை நடைபெற்று வருகிறது. அதற்கு நாங்கள் ஒத்துழைப்பு அளிக்கிறோம் என ‘ஃபேஸ்புக்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
    ட்விட்டர் சமூக வலைதளத்தில் நீங்கள் பதிவிட்ட பழைய ட்விட்களை ஒரே சமயத்தில் அழிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம். #Twitter #socialmedia



    ட்விட்டர் துவங்கப்பட்ட காலத்தில், இந்த வலைதளம் பிரபலங்கள் மட்டும் பயன்படுத்தும் தளமாக இருக்கும் போல என்ற கருத்து பரவலாக பரவியிருந்தது. 

    பின் படிப்படியாக ட்விட்டர் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பயனர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், ட்விட்டர் பயன்பாடுகளில் அந்நிறறுவனம் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது.

    ட்விட்டர் பயன்படுத்த துவங்கிய காலக்கட்டத்தில் ஒரே சமயத்தில் தொடர்ந்து அதிகப்படியான ட்விட்களை பதிவிட்டு, தற்சமயம் அவை அர்த்தமற்றதாக உணர்கிறீர்களா?

    ட்விட்டரில் நீங்கள் பதிவிட்ட ட்விட்களை ஒரே சமயத்தில் அழிப்பது சிரமமான காரியமாக தெரிகிறதா, கவலை வேண்டாம். நீங்கள் பதிவிட்ட ட்விட்களை இனியும் மற்றவர்கள் பார்க்க வேண்டாம் என முடிவு செய்துள்ளீர்களா?

    அப்படியெனில் இந்த தொகுப்பு உங்களுக்கானது தான். சமூக வலைதளங்களில் இருந்து சற்று தள்ளியிருக்கவோ அல்லது சில காலம் தனிமைப்படுத்திக் கொள்ள நினைக்கிறீர்களா. அப்படியெனில் உங்களது ட்விட்களை ஒரே சமயத்தில் அழிக்க பல்வேறு சேவைகள் இருக்கின்றன.

    ட்விட்டர் டைம்லைனில் 3200 ட்விட்கள் மட்டுமே தெரியும் என்றாலும், உங்களது பழைய ட்விட்களை சர்ச் கன்சோலில் இருந்து தேடினால் அவை கிடைக்கும். 



    பழைய ட்விட்களை பேக்கப் செய்வது

    உங்களது அனைத்து ட்விட்களையும் அழிக்க நினைக்கும் பட்சத்தில், அவற்றை டவுன்லோடு செய்து பேக்கப் எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு நீங்கள் டவுன்லோடு செய்யும் சிப் ஃபைல் அனைத்து ட்விட்கள் மற்றும் ரீட்விட்களையும் கொண்டிருக்கும்.

    உங்களின் ட்விட்டர் ஆர்ச்சிவ் ஃபைலை டவுன்லோடு செய்ய பின்வரும் வழிமுறைகளை பின்பற்றலாம்:

    1) முதலில் ப்ரோஃபைல் படத்தை கிளிக் செய்து செட்டிங்ஸ் மற்றும் பிரைவசி ஆப்ஷன்களை இயக்க வேண்டும்

    2) கீழ் புறம் ஸ்கிரால் செய்து பக்கத்தின் கீழ் பகுதியில் இருக்கும் Request your archive ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்

    3) இனி உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வரும், அதில் உங்களது விவரங்கள் இருக்கும் டவுன்லோடு செய்யக்கூடிய ஃபைலாக இடம்பெற்றிருக்கும்



    ட்விட்டெலீட் (TweetDelete) சேவையை கொண்டு உங்களின் அனைத்து ட்விட்களையும் அழிக்க முடியும். மேலும் எதிர்காலத்தில் நீங்கள் பதிவிடும் ட்விட்களை குறிப்பிட்ட காலத்திற்கு பின் தானாக அழிந்து போக செய்ய முடியும். எனினும் மூன்றாம் தரப்பு சேவை என்பதால் சமீபத்தில் பதிவிட்ட 3200 ட்விட்களை மட்டுமே அழிக்க முடியும். 

    உங்களது எதிர்கால ட்விட்களை அழிக்க குறைந்த பட்சம்: ஒரு வாரம், இரண்டு வாரங்கள், ஒரு மாதம், இரண்டு மாதங்கள், மூன்று மாதங்கள், ஆறு மாதங்கள், ஒரு வருடம் போன்ற ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ட்விட்டெலீட் உங்களின் அக்கவுன்ட்டை ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கும் ஒருமுறை சரிபார்க்கும். ட்விட்டர் செட்டிங்ஸ் மற்றும் பிரைவசி ஆப்ஷன்கள் சென்று இதற்கான அனுமதியை மாற்றியமைக்கலாம்.



    ட்விட்டர்இரேசர் (TwitterEraser) கொண்டு உங்களது 3200 ட்விட்களையும் அழிக்க முடியும். எனினும் 6.99 டாலர்கள் செலுத்தி அப்கிரேடு செய்யும் போது அதிகப்படியான ட்விட்களை அழிக்கலாம்.

    உங்களது அனைத்து ட்விட்டர் ஆர்ச்சிவ்களையும் ட்விட்டெலீட்டில் அப்லோடு செய்ய வேண்டும். பின் சர்ச் ஃபில்ட்டர் மூலம் ட்விட்களை தேதி, ஹேஷ்டேக் மற்றும் குறியீட்டு சொல் கொண்டு தேடலாம். 

    பல்வேறு ட்விட்களை அழிக்கும் போது, அந்த மாற்றங்கள் உடனடியாக செயல்படுத்தப்பட மாட்டாது. ட்விட்டரில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ட்விட்களை மட்டுமே கோரிக்கை விடுக்க முடியும், இந்த எண்ணி்க்கை ஆயிரங்களை கடக்கும் பட்சத்தில் அதற்கான நேரம் அதிகமாகும். 

    ட்விட்களை அழிக்கும் போது அவற்றை பொது மக்கள் தேடும் போது கிடைக்காமல் போகும். எனினும் நீங்கள் அழிக்கும் ட்விட்களை ட்விட்டர் சர்வெர்களில் இருக்கும். சட்ட ரீதியிலான தேவைகளுக்காக அவை தேவைப்படலாம் என்ற காரணத்திற்காக ட்விட்டர் உங்களது ட்விட்களை பேக்கப் வைத்திருக்கும். #Twitter #socialmedia
    ஸ்மார்ட்போன்களில் நெட்வொர்க் சிக்னல் கிடைக்கச் செய்ய நீங்கள் பின்பற்ற வேண்டியவற்றை தொடர்ந்து பார்ப்போம். #techtips


    ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் அடிக்கடி சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் சிக்னல் கோளாறு. இதனால் கால் டிராப், இண்டர்நெட் வேகம், அழைப்புகளின் போது ஆடியோ தரம் குறைவது போன்ற பல்வேறு பிரச்சனைகள் எழுகிறது. அடிக்கடி ஏற்படும் சிக்னல் கோளாறு நம் பணிகளை வெகுவாக பாதிக்கும்.

    இதுபோன்ற பிரச்சனைகளால் நீங்களும் அவதிப்படுகிறீர்களா? இதனை எவ்வாறு எதிர்கொள்வது மற்றும் ஸ்மார்ட்போன் சிக்னல் அளவை பூஸ்ட் செய்வது எப்படி என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

    ஸ்மார்ட்போனினை பாதுகாக்க நீங்கள் பயன்படுத்தும் கவர் / கேஸ் சில சமயங்களில் மொபைல் போன் சிக்னலை பாதிக்கலாம். இதுபோன்ற நிலை பெரும்பாலும் தடிமனான மற்றும் ரக்கட் வகை மொபைல் கேஸ்களில் அதிகம் ஏற்படும். இதனால் மொபைல் போனின் ஆன்டெனாவை மொபைல் கேஸ் மறைக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். 



    செல்போன் டவர் மற்றும் மொபைல் போன் இடையேயான இடையூறை எவ்வாறு சரி செய்வது. உங்களது மொபைல் போனில் எந்நேரமும் சிக்னல்கள் வந்து கொண்டிருக்கும், இவ்வாறான சூழல்களில் பெரும்பாலும் அவை பல்வேறு இடையூறுகளை கடந்தே நம் மொபைலை வந்தடையும். இதுபோன்ற இடையூறுகளை ஓரளவு அகற்ற என்ன செய்யலாம்? 

    • ஜன்னல் அல்லது சற்றே அதிக பரப்பளவு கொண்ட இடத்திற்கு செல்லலாம். 
    • இரும்பு அல்லது சிமென்ட் சுவர் அருகே நிற்காமல் விலக வேண்டும். 
    • இரும்பு பொருட்கள் மற்றும் மின்சாதன உபகரணங்கள் அருகில் இருந்து மொபைல் போனை அகற்ற வேண்டும்.


    பொதுவாக நம் மொபைலுக்கு தேவையான சிக்னலை தேடுவதிலேயே அவற்றின் சார்ஜ் குறைய ஆரம்பிக்கும். இதனால் பேட்டரி அளவு குறையும் போது சிக்னலை தேடுவது சிரமமான காரியமே. இதுபோன்ற சூழல்களில் ஆப்ஸ், ப்ளூடூத், வைபை மற்றும் இதர கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை ஆஃப் செய்ய வேண்டும். 

    சில இடங்களில் 4ஜி நெட்வொர்க் சீராக இருக்காது, இதனால் திடீரென மொபைல் போன் சிக்னல் குறையலாம். இதற்கு சிம் கார்டு டிரேயில் இருக்கும் தூசு அல்லது இதர சேதங்கள் காரணமாக இருக்கலாம். நாம் பயன்படுத்தும் சிம் கார்டு தரத்தை பொருத்தே நமக்கு கிடைக்கும் சிக்னல் தரம் அமையும். இதனால் மொபைலின் சிம் கார்டினை கழற்றி சுத்தம் செய்து மீண்டும் மொபைலில் போடலாம்.

    இவ்வாறு செய்யும் போது சிக்னல் தரம் சீராகும். ஒருவேளை சீராகாத பட்சத்தில் புதிய சிம் கார்டு பெறுவது நல்லது. பழைய சிம் கார்டுகள் சேதமடைந்திருந்தால் இவ்வாறு நடக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இதனால் புதிய சிம் பெறுவது பிரச்சனையை சரி செய்யலாம். #techtips
    ×