search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீது வரும் 12ம் தேதி தீர்ப்பு
    X

    அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீது வரும் 12ம் தேதி தீர்ப்பு

    • ஜாமின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு ஏற்க மறுத்தது, கீழ் கோர்ட்டை நாட செந்தில்பாலாஜி தரப்புக்கு உத்தரவிட்டது.
    • செந்தில் பாலாஜி ஜாமின் கோரி 3-வது முறையாக முதன்மை செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    சென்னை:

    சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆகஸ்ட் 12-ந்தேதி சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் சுமார் 3 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கையை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

    இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமின் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கனவே இரண்டு முறை தாக்கல் செய்த மனுக்களையும் சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    இதனையடுத்து, ஐகோர்ட்டும் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது.

    இதையடுத்து உடல் நிலையை கருத்தில் கொண்டு ஜாமின் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு ஏற்க மறுத்தது, கீழ் கோர்ட்டை நாட செந்தில்பாலாஜி தரப்புக்கு உத்தரவிட்டது.

    இதன்படி, செந்தில் பாலாஜி ஜாமின் கோரி 3-வது முறையாக முதன்மை செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    இந்நிலையில் இவ்வழக்கில் இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு வருகிற 12-ந்தேதி வழங்கப்படும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

    Next Story
    ×