என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அடுத்த 5 ஆண்டுகளில் ஊழலை எதிர்த்து நமது போராட்டம் அமையும்
- என்னால் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள முடியவில்லை என்ற வருத்தம் இருக்கிறது.
- பாஜக, கூட்டணி வேட்பாளர்களை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.
சேலம்:
பா.ஜ.க.வின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியதாவது:
* தேசிய ஜனநாயக கூட்டணி நாட்டில் 2 பாதுகாப்பு வளாகத்தை உருவாக்குகிறது.
* 2 பாதுகாப்பு வளாகங்களில் ஒன்று தமிழ்நாட்டில் அமைகிறது.
* தமிழ்நாட்டில் ஒரு ஜவுளி பூங்கா உருவாக்கப்பட்டு வருகிறது.
* சேலம் பகுதியில் ரெயில்வே கட்டமைப்புக்கு ரூ.260 கோடி செலவிடப்பட்டுள்ளது.
* பாஜக கூட்டணியில் இணைந்திருக்கின்ற கூட்டணி தலைவர்களை நான் வணங்குகிறேன்.
* உங்கள் ஆதரவோடு தமிழகத்தை புதிய உயரத்திற்கு நாங்கள் எடுத்து செல்வோம்.
* இது எங்கள் அனைவரின் உத்தரவாதம்.
* தமிழ் மொழி இந்தியாவின் மிகவும் பழமையான மொழி.
* எந்த நாட்டில் உலகின் பழமையான மொழி இருக்கிறதோ அந்த நாடு பெருமையுடன் மார்தட்டி கொள்ளும்.
* என்னால் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள முடியவில்லை என்ற வருத்தம் இருக்கிறது.
* நமோ இன் தமிழ் செயலியை அனைவரும் பயன்படுத்துங்கள்.
* தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நான் தமிழில் பேச தொடங்கி உள்ளேன்.
* அடுத்த 5 ஆண்டுகளில் ஊழலை எதிர்த்து நமது போராட்டம் அமையும்.
* பாஜக, கூட்டணி வேட்பாளர்களை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கூறினார்.
#WATCH | Tamil Nadu: During his public rally in Salem, PM Modi says, "NDA government is making two defence corridors in the country. One of them is being built in Tamil Nadu..." pic.twitter.com/fj2scRaN88
— ANI (@ANI) March 19, 2024






