search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தருமபுரி அருகே நாட்டு மாடுகள் வளர்ப்பதில் ஆர்வம் காட்டும் கிராம மக்கள்

    தர்மபுரி மாவட்டத்தில் விவசாய சார்ந்த தொழில்களான ஆடு, மாடு. கோழி உள்பட கால்நடை வளர்ப்பு தொழில்கள் நிறைந்து காணப்படுகிறது. இதைத்தொடர்ந்து அங்குள்ள கிராம மக்கள வெளிநாட்டு கறவை மாடுகளை தவிர்த்து தற்போது நாட்டு மாட்டுகளை வாங்கி வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    பாப்பிரெட்டிப்பட்டி:

    தருமபுரி மாவட்டம் பால் உற்பத்தியில் மாநிலத்திலேயே முன்னிலை வகித்து வருகிறது.

    மாவட்டம் முழுவதும் சுமார் 1.50 லட்சம் வெளிநாட்டு கறவை மாடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது, வருவாய் குறைவாக தந்தாலும் பரம்பரையாக தங்கள் வளர்த்து வந்த மலைமாடுகள் வளர்பதில் இன்னமும் மனம் தளராமல் பரம்பரை பரம்பரையாக நாட்டு மாடு வளர்ப்பதில் ஆர்வமுடன் கிராம மக்கள் ஈடுபட்டு வருகின்றனர் .

    தருமபுரி அருகே வத்தல்மலை அடிவாரம். நல்லம்பள்ளி அடுத்த நார்த்தம்பட்டி, கருங்கல்லூர், பாகல்பட்டி, முத்தம்பட்டி போன்ற ஊர்களிலும், பென்னாகரம் அடுத்த பாப்பாரப்பட்டி, ஒகேனக்கல்,  வனப்பகுதியை ஒட்டிய மலை கிராமங்களில் நாட்டு மாடு இனமான மலை மாடுகள் அதிக அளவில் வளர்க்கப்பட்டு வருகின்றனர்,

    இந்த மாடு வளர்ப்பில் அதிக அளவில் வருமானம் இல்லை என்றாலும் மூன்று தலைமுறைகளாக இந்த மலை மாடுகளை வளர்த்து வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து நார்த்தம் பட்டியை சேர்ந்த முருகன் என்பவர் கூறியதாவது:-

    மலை மாடு வளர்ப்பு தொழிலை மூன்று தலைமுறைகளாக மலை மாடுகள் வளர்த்து வருகின்றோம். என்னிடம் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாடுகள் உள்ளன. வருமான நோக்கத்தில் பார்க்க வேண்டுமென்றால் நாங்கள் அதிக அளவில் பால் தரும் வெளி நாட்டு மாடுகளை வளர்க்க வேண்டும். 

     ஆனால் நாட்டு மலை மாடுகள் வளர்ப்பதிலேயே நாங்கள் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றோம், எங்கள் ஊர் பகுதியை ஒட்டிய மலைப்பகுதியில் இந்த மாடுகளை மேய்த்து வருகின்றோம், மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு கூட கட்டுவதில்லை.

    மலைப்பகுதியில் காலையில் அவிழ்த்து விட்டு மேய்த்து விட்டு மீண்டும் மாலை அப்படியே தோட்டத்தில் உள்ள பட்டியில் கால்களைக் கட்டி நிறுத்தி விடுகிறோம். மாடுகளுக்கு எந்த சத்துமாவுகளும் உணவுப் பொருட்களும் தருவதில்லை.

    இந்த மாடுகளில் சிறந்த காளையாக பாய்ச்சல், முட்டல், மோதல், சுறுசுறுப்பு, அதிகம் காட்டும் காளைகளுக்கு நல்ல விலை கிடைக்கும்.

    அதுபோன்ற காளைகள் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை விற்பனையாகும், மீதியுள்ள மாடுகளை நாங்கள் விவசாயத்திற்கு உழவு பணிக்கு பயன்படுத்தி வருகிறோம், ஆண்டுக்கு ஒருமுறை மாடுகளை விற்பனை செய்து அதில் வருவாய் ஈட்டி கொள்வோம்,  

    இவ்வாறு அவர் கூறினார்.

    வருவாய்க்காக அதிக அளவில் பால் தரும் வெளிநாட்டு மாடுகள் வளர்ப்பதில் விவசாயிகள் அதிக ஆர்வம் செலுத்தி வரும் நிலையில் பாரம்பரியமான விவசாயிகளின் நண்பனான நாட்டு மாடுகளை வளர்ப்பதில் இப்பகுதி கிராம மக்கள் ஆர்வத்துடன் இருந்து வருவதை சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.
    Next Story
    ×