search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    123 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்த முதலமைச்சர், துணை முதலமைச்சர்
    X
    123 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்த முதலமைச்சர், துணை முதலமைச்சர்

    123 ஜோடிகளுக்கு இலவச திருமணம்- எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் நடத்தி வைத்தனர்

    ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு இன்று 123 ஜோடிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திருமணம் நடத்தி வைத்தனர்.
    கோவை:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா வருகிற 24-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.

    இதை முன்னிட்டு கோவை புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் 123 ஏழை ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம் செய்து அவர்களுக்கு 73 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்படும் என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.

    அதன்படி கோவை சிறுவாணி மெயின் ரோட்டில் உள்ள பேரூர் செட்டிப்பாளையத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டது. அங்கு இன்று காலை 123 ஏழை ஜோடிகளுக்கும் திருமணம் செய்துவைக்கப்பட்டது.

    விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்ச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு மங்கல நாண் எடுத்து கொடுத்து 123 ஜோடிகளுக்கும் திருமணத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து மணமக்களை அட்சதை தூவி வாழ்த்தினர். திருமண ஜோடிகளுக்கு 73 வகையான சீர்வரிசை பொருட்களையும் வழங்கினர்.

    73 வகையான சீர்வரிசை பொருட்கள்

    முன்னதாக மேடையில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    விழாவில் பல்வேறு மதத்தைச் சேர்ந்த திருமண ஜோடிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு அவரவர் மத முறைப்படி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

    விழாவுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமை தாங்கினார். விழாவில் அமைச்சர்கள் தங்கமணி, செங்கோட்டையன், அன்பழகன், விஜயபாஸ்கர், திண்டுக்கல் சீனிவாசன், உடுமலை ராதாகிருஷ்ணன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், மற்றும் கே.பி.முனுசாமி, எம்.எல்.ஏ.க்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் திருமண ஜோடிகளின் உறவினர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    Next Story
    ×