search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓ பன்னீர்செல்வம்
    X
    ஓ பன்னீர்செல்வம்

    போஸ்டருக்கும் அதிமுகவுக்கும் சம்பந்தமில்லை- தேனி மாவட்ட செயலாளர் விளக்கம்

    அடுத்த முதல்வர் ஓபிஎஸ் என போடி முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதையடுத்து தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையதுகான் விளக்கம் அளித்துள்ளார்.
    தேனி:

    அடுத்த முதல்வர் ஓபிஎஸ் என அவரது தொகுதியான போடி முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆசி பெற்ற ஒரே முதல்வர் ஓ.பி.எஸ் என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

    தமிழகத்தின் நிரந்தர முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எனவும் போஸ்டரில் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

    நெல்லையில் பழனிசாமிக்கு ஆதரவாக நலத்திட்ட உதவி தரப்பட்ட நிலையில் தேனியில் ஓபிஎஸ்க்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

    இந்த சம்பவத்தையடுத்து தேனி மாவட்ட தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையதுகான் கூறியதாவது:

    ஓபிஎஸ்க்கு ஆதரவான ஒட்டப்பட்டுள்ள போஸ்டருக்கும் தேனி மாவட்ட நிர்வாகிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தனிப்பட்ட நபர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

    Next Story
    ×