search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.2 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்- வியாபாரி கைது

    தக்கலை அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, வியாபாரியை கைது செய்தனர்.
    பத்மநாபபுரம்:

    தக்கலை சுற்றுவட்டார பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் (குட்கா) விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதைத்தொடர்ந்து போலீஸ் துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படை போலீசார் தக்கலை அருகே திக்கணங்கோடு, அம்மன் கோவில் சந்திப்பு பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள ஒரு மளிகை கடையில் சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் கடை உரிமையாளர் ராஜமூர்த்தியை (வயது 38) பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் கடையிலும், வீட்டிலும் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து மொத்தமாக விற்பனை செய்தது தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து ராஜமூர்த்தி வீட்டை சோதனையிட்ட போது, அங்கு மூட்டை, மூட்டையாக புகையிலை பொருட்கள் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த புகையிலை பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.

    இதுதொடர்பாக தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, வியாபாரி ராஜமூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×