search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாக்டர் மதியழகன்
    X
    டாக்டர் மதியழகன்

    எஸ்.எஸ்.எல்.சி. மாணவி கற்பழிப்பு- டாக்டர் கைது

    கருமந்துறையில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவியை கற்பழித்ததாக டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
    பெத்தநாயக்கன்பாளையம்:

    சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள கருமந்துறையில் உமா கிளினிக் என்ற தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு டாக்டராக வெள்ளிமலை பகுதியை சேர்ந்த மதியழகன் (வயது 24) என்பவர் பணியாற்றி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த 16 வயதுடைய சிறுமி ஒருவர் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தார்.

    இந்த நிலையில் அந்த மாணவிக்கும், டாக்டர் மதியழகனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட டாக்டர், அந்த மாணவியிடம் திருமண ஆசைவார்த்தை கூறி, அடிக்கடி உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே அந்த டாக்டருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இதையறிந்த அந்த மாணவி அதிர்ச்சி அடைந்தார்.

    இதைத்தொடர்ந்து அந்த மாணவி கருமந்துறை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் 16 வயது மாணவியை கற்பழித்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் கருமந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து டாக்டர் மதியழகனை கைது செய்தனர். பின்னர் அவரை ஆத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கிளை சிறையில் அடைத்தனர்.

    போக்சோ சட்டத்தில் டாக்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×