என் மலர்
நீங்கள் தேடியது "doctor arrested"
- உடலை சூட்கேசில் அடைத்து முதலில் தனது மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
- தன் மனைவி விபத்தில் இறந்துவிட்டதால் அவசரமாக தகனம் செய்வதற்கு செல்வதாக ஆம்புலன்ஸ் டிரைவரிடம் கூறியிருக்கிறார்
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி நகரைச் சேர்ந்தவர் டாக்டர் அபிஷேக். இவரது மனைவி வந்தனா அவாஸ்தி (வயது 28). இவர் ஆயுர்வேத மருத்துவர். இவர்கள் சீதாபூர் சாலையில் மருத்துவமனையை நிர்வகித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த மாதம் 27ம் தேதி தன் மனைவி வந்தனாவை காணவில்லை என டாக்டர் அபிஷேக், கோத்வாலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விலை உயர்ந்த சில பொருட்களை மனைவி எடுத்துச் சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளார்.
அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது தெரியவந்தது. இதனால் கணவன் அபிஷேக் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. அவரது நடவடிக்கைகளை கண்காணித்தனர். பின்னர் அவரிடம் தீவிரமாக நடத்தப்பட்ட விசாரணையில், மனைவியை நவம்பர் 26ம் தேதி அடித்துக் கொலை செய்து உடலை சுமார் 400 கிமீ தொலைவில் கொண்டுபோய் எரித்தது தெரியவந்தது. இந்த கொலைக்கு அவரது தந்தையும் உடந்தையாக இருந்துள்ளார். இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுபற்றி ஏஎஸ்பி அருண் குமார் சிங் கூறுகையில், "நவம்பர் 26ம் தேதி ஏற்பட்ட சண்டையின்போது வந்தனா அவாஸ்தியை கொலை செய்த அபிஷேக், காணாமல் போனதாக புகார் கொடுத்துள்ளார். பின்னர் உடலை சூட்கேசில் அடைத்து தனது மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு ஆம்புலன்சை வரவழைத்து சுமார் 400 கிமீ தொலைவில் உள்ள கார்ஹ் முக்தேஷ்வரில் வைத்து உடலை எரித்துள்ளார். ஆம்புலன்ஸ் டிரைவரிடம், தன் மனைவி விபத்தில் இறந்துவிட்டதால் அவசரமாக தகனம் செய்வதற்கு செல்வதாக கூறியிருக்கிறார்" என்றார்.
- பிரியங்காவின் சான்றிதழ்களை பெற்று அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.
- மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கனகராணி மங்கலம் போலீசில் புகார் அளித்தார்.
மங்கலம்:
திருப்பூர் மாவட்டம் மங்கலம் நால்ரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் கிளீனிக் உரிய அனுமதியின்றி செயல்படுவதாக கலெக்டருக்கு புகார் வந்தது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்துமாறு மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குனருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து இணை இயக்குனர் டாக்டர் கனகராணி தலைமையிலான சுகாதாரத்துறை அதிகாரிகள் மங்கலம் நால்ரோடு பகுதியில் செயல்பட்டு வந்த அந்த கிளீனிக்கில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அங்கு விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பிரியங்கா (வயது 30) என்பவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்தார். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் உக்ரைன் நாட்டில் மருத்துவப்படிப்பு படித்திருந்தது தெரியவந்தது.
ஆனால் அதன்பிறகு அவர் இந்திய மருத்துவ கழகத்தின் தேர்வை எழுதாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தது தெரியவந்தது.
மேலும் கிளீனிக் நடத்தவும் உரிய அனுமதி பெறவில்லை என்பதும் தெரியவந்தது. இதனால் அதிகாரிகள் அந்த தனியார் கிளீனிக்கிற்கு 'சீல்' வைத்தனர். இதைத்தொடர்ந்து பிரியங்காவின் சான்றிதழ்களை பெற்று அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கனகராணி மங்கலம் போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறையில் பதிவு செய்யாமல், உரிய அனுமதியின்றி சிகிச்சை அளித்த பிரியங்கா மீது இந்திய மெடிக்கல் கவுன்சில் சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரியங்காவை கைது செய்தனர். பின்னர் அவரை கோவை சிறையில் அடைத்தனர்.
- கழிவறையை சுத்தப்படுத்தும் பிரஸ்சில் கேமரா மறைத்து வைக்கப்பட்டு இருந்தது.
- செல்போனை போலீசார் ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் பயன்படுத்தும் கழிப்பறைகள் தனித்தனியாக உள்ளன.
நேற்று கழிவறைக்கு சென்ற பெண்நர்சுகள், கழிவறையில் கேமரா வைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கழிவறையை சுத்தப்படுத்த பயன்படுத்தப்படும் பிரஸ்சில் பேனா காமிரா ஒன்று மறைத்து வைக்கப்பட்டு இருந்தது.
இதுபற்றி நர்சுகள் ஆஸ்பத்திரி இருப்பிட மருத்துவ அலுவலர் மாரிமுத்துவிடம் புகார் செய்தனர். அவரும், டாக்டர்களும் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது பேனா காமிரா இருந்ததை உறுதி செய்தனர்.
பின்னர் அவர்கள் பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் செய்தனர். போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அங்கு பயிற்சி ஆர்த்தோ டாக்டராக பணியாற்றும் வெங்கடேஷ் (வயது 33) என்பவர் கழிவறையில் பேனா கேமரா பொருத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், பெண்களை தவறாக சித்தரித்தல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் வெங்கடேஷ் பொள்ளாச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை வருகிற 13-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து வெங்கடேஷ் கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
கைதான டாக்டர் வெங்கடேசன், கிருஷ்ணகிரி மாவ ட்டம் ஊத்தங்கரை தாலுகா கீழ்குப்பம் அருகே உள்ள பனமரத்துப்பட்டியைச் சேர்ந்தவர். இவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் கோவையில் வசித்து வருகிறார்.
கோவை அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வந்த இவர் பட்ட மேற்படிப்புக்காக கடந்த மாதம் 16-ந் தேதி பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார்.
அங்கு சபல புத்தியால் பெண்கள் பயன்படுத்தும் கழிவறையில் கேமரா பொருத்தி போலீசில் சிக்கிக் கொண்டார். கழிவறையில் காமிரா இருந்ததை நர்சுகள் பார்த்து முதலில் வெங்கடேசிடம் தான் தெரிவித்துள்ளனர்.
உடனே அவர் கேமராவில் இருந்த மெமரி கார்டை எடுத்துவிட்டு விசாரிப்பதாகக் கூறி இருக்கிறார். பிரச்சனை பெரிதானதும் வெங்கடேசும் அங்கு சென்று விசாரிப்பது போல் நடித்துள்ளார்.
ஆனால் போலீசார் ஆஸ்பத்திரியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில் வெங்கடேஷ் கழிவறைக்கு சென்று வந்த காட்சிகள் பதிவாகி இருந்தது. அதன் பேரிலேயே அவரை போலீசார் பிடித்தனர்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஆன்லைன் வாயிலாக பேனா கேமராவை வெங்கடேஷ் வாங்கியிருக்கிறார். அதனை யாருக்கும் தெரியாமல் கழிவறையில் மறைத்து வைத்துள்ளார்.
அந்த கேமராவில் பதிவான காட்சிகளை செல்போனில் பார்த்து ரசித்துள்ளார். ஆனால் கேமரா வைத்த சில நாட்களிலேயே சிக்கிக் கொண்டார்.
அவரிடம் இருந்து செல்போன் மற்றும் மெமரி கார்டு போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகிறார்கள். அவர் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் மட்டும் தான் இப்படி செய்தாரா அல்லது பணியாற்றிய வேறு இடங்களில் இடங்களிலும் இப்படி ஒழுங்கீனமாக நடந்து கொண்டாரா என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதற்காக அவரது செல்போனை போலீசார் ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் ஒருவர் இழிவான செயல், பெண் டாக்டர்கள், செவிலியர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
- பெண்ணுக்கு டாக்டர் ஜபருல்லாகான் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
- பாலியல் தொல்லை குறித்து பெண் ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் பட்டினங்காத்தான் சேதுபதி நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் டாக்டர் ஜபருல்லாகான் (வயது 71). இவர் ராமநாதபுரம் பாரதிநகர் மீன்மார்க்கெட் பகுதியில் கிளினிக் நடத்தி வருகிறார்.
இவரது கிளினிக்கிற்கு பட்டினங்காத்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் தினமும் சிகிச்சை பெற வந்து செல்வர். அதேபோல் கடந்த 2-ந் தேதி உடல் நலம் பாதித்திருந்த புதுவலசை பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் ஜபருல்லாகானின் கிளினிக்கிற்கு சிகிச்சை பெற வந்துள்ளார்.
அப்போது அந்த பெண்ணுக்கு டாக்டர் ஜபருல்லாகான் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண் ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஹெலன்ராணி மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.
அதில் இளம்பெண்ணுக்கு டாக்டர் ஜபருல்லா கான் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அவினாசி ரோடு அண்ணா சிலை சிக்னல் அருகில் உள்ள கிளீனிக் ஒன்றில் பிரபல சிறுநீரக சிகிச்சை பிரிவு டாக்டர் ராம லிங்கம்(65) சிகிச்சை அளித்து வருகிறார்.
சம்பவத்தன்று செல்வபுரத்தை சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவர், தன்னுடைய தாயை சிறுநீரக சிகிச்சைக்காக இங்கு அழைத்து வந்தார். தாய்க்கு சிறுநீரகத்தில் கல் இருப்பதாகவும், அந்த கல்லை அகற்ற வேண்டும் என்றும் டாக்டர் ராமலிங்கம் கூறி உள்ளார்.
தாயின் உடலை பரிசோதிக்க வேண்டிய டாக்டர் அவருடைய மகளின் உடல் பாகங்களை தொட்டு தாய்க்கு இந்த, இந்த இடங்களில் வலி இருக்கிறதா? என்று கேட்டு மகளிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து காந்திபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், பாதிக்கப்பட்ட இளம்பெண் புகார் செய்தார். அதன்பேரில் டாக்டர் ராமலிங்கம் மீது சட்டப்பிரிவு 354(ஏ)-பெண்ணின் உணர்ச்சிக்கு குந்தகம் விளைவித்தல் மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவு 4 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
பின்னர் அவரை ஜே.எம்.2 மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து டாக்டர் ராமலிங்கம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
போரூர்:
வளசரவாக்கம் சேனாதிபதி தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். குழந்தைகள் நல மருத்துவர். சாலிகிராமம் ஸ்டேட் பாங்க் காலனி 2-வது தெருவில் மருத்துவ மனையை நடத்தி வருகிறார்.
நேற்று இரவு 10 மணி அளவில் கார்த்திகேயன் மருத்துவமனையில் குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்தார்.
அப்போது 3 பேர் கொண்ட கும்பல் ஆஸ்பத்திரிக்குள் புகுந்து கத்தி முனையில் டாக்டர் கார்த்திகேயனை கடத்த முயன்றது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் திரண்டு வந்து 3 பேர் கும்பலை பிடிக்க முயன்றனர்.
இதில் ஒருவன் மட்டும் சிக்கினான். மற்ற 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்ட வாலிபரை விருகம்பாக்கம் போலீசில் ஒப்படைத்தனர். அந்த வாலிபர் புதுக்கோட்டை மாவட்த்தைச் சேர்ந்த லோக பிராமன் (21) என்பது தெரியவந்தது.
விசாரணையில் டாக்டர் கார்த்திகேயனிடம் கடந்த சில மாதங்களாக பெண் ஒருவர் சிகிச்சை பெற்று வந்ததும், ஆனால் அப்பெண்ணின் குழந்தை இறந்து விட்டதும் அதன் காரணமாக டாக்டரை கடத்தி செல்ல வந்ததாகவும் கூறினார். அவனிடமிருந்து இரண்டு கத்தி மற்றும் கயிறு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
லோக பிராமனின் கூட்டாளிகளான சென்னையைச் சேர்ந்த சத்யா மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த மணிகண்டன் ஆகிய இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். டாக்டரை கடத்த வந்த மூவரும் கூலிப்படையை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் பணம் பிரச்சனை காரணமாக டாக்டரை கடத்த வந்தார்களா என்கிற கோணத்திலும் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரள மாநிலம் இடிக்கி மாவட்டம் அங்கமாலியை சேர்ந்தவர் குரியா கோஸ். இவரது மனைவி அசாமோல் (வயது 30). இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகன் உள்ளார். கருத்துவேறுபாட்டால் கணவர் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று விட்டார். மகன் அங்குள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவ அதிகாரியாக உள்ளவர் ராதாகிருஷ்ணன் (33). இவருக்கும் அசாமோலுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனையடுத்து எர்ணாகுளம் காக்கநாட்டில் உள்ள டாக்டர் வீட்டில் வேலைக்காரி போல் சேர்ந்தார்.
தாயுடன் சென்று சிறுவனை டாக்டர் ராதாகிருஷ்ணன் கொடுமைபடுத்த தொடங்கினார். சிறுவனின் மர்ம உறுப்பில் சூடு வைப்பது, கிள்ளி துன்புறுத்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டார். உல்லாசத்துக்கு இடையூறாக இருப்பதால் இதனை தாய் கண்டு கொள்ளவில்லை. மர்ம உறுப்பில் சூடு வைக்கும்போது சிறுவன் அலறி சத்தம்போடுவான். அக்கம் பக்கத்தினர் கேட்டால் சிறுவனுக்கு சற்று மனநலம் சரியில்லை என்று கூறி தாயும், டாக்டரும் கூறி சமாளித்து விடுவார்கள்.
இந்நிலையில் சம்பவத்தன்று இரவு 11 மணி அளவில் சிறுவனின் மர்ம உறுப்பில் டாக்டர் சூடு வைத்தார். வலி தாங்க முடியாமல் சிறுவன் வெளியே தப்பி ஓடி வந்து அங்குள்ள பொதுமக்களிடம் இது குறித்து கூறி கதறி அழுதான்.
அக்கம் பக்கத்தினர் இது குறித்து திருக்காகரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சிறுவனை மீட்ட போலீசார் எர்ணாகுளம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து தெரியவந்ததும் கள்ளக்காதல் ஜோடி தலைமறைவானது. திருக்காகரை உதவி கமிஷனர் சம்சின் சிறுவனை துன்புறுத்திய அசாமோல் மற்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்யுமாறு உத்தரவிட்டார். இதனையடுத்து போலீசார் இருவரையும் தேடி வந்தனர்.
இந்நிலையில் மைசூரில் உள்ள ஒரு ஆடம்பர ஓட்டலில் அவர்கள் தங்கியிருந்தது செல்போன் சிக்னல் மூலம் தெரியவந்தது. இதனையடுத்து மைசூர் சென்று போலீசார் அசாமோல் மற்றும் டாக்டர் ராதாகிருஷ்ணனை கைது செய்து கேரள அழைத்து வந்தனர். இன்று எர்ணாகுளம் கோர்ட்டில் ஒப்படைக்க உள்ளனர். #tamilnews
மணலிபுதுநகரைச் சேர்ந்தவர் பிரேம்ஆனந்த் பல் டாக்டர். இவரது மனைவி கடந்த ஆண்டு பிரிந்து சென்று விட்டார். இதையடுத்து பிரேம்ஆனந்த் விச்சூரைச் சேர்ந்த மகாலட்சுமி என்பவருடன் சேர்ந்து வாழ்ந்தார். அவரிடம் முதல் மனைவி இருப்பதை மறைத்து திருமணம் செய்வதாக கூறி இருந்தார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி மார்க்கெட் எதிரே பல் மருத்துவமனை நடத்தி வருபவர் டாக்டர் சரவணன். அரசு டாக்டராகவும் உள்ளார்.
இவரது மருத்துவமனைக்கு ஊட்டியை சேர்ந்த இளம் பெண் தனது தாயுடன் சிகிச்சை பெற வந்தார். டாக்டர் சரவணன் அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்த போது சிகிச்சைக்கு தேவையான பணம் இல்லாத நிலையில் அவரது தாய் பணம் எடுத்து வருவதாக கூறி வீட்டிற்கு சென்று விட்டார்.
திடீரென இளம்பெண் கூச்சலிட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு சென்றனர். அப்போது இளம்பெண் தன்னிடம் டாக்டர் தவறாக நடந்து கொள்ள முயன்றதாக கூறினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் டாக்டர் சரவணனை அடித்து உதைத்தனர். அவருக்கு தலையில் பலத்த காயம் எற்பட்டது.
மேலும் மருத்துவமனையையும் சூறையாடினார்கள். தகவல் அறிந்து ஊட்டி போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் டாக்டரை தாக்கிய பொதுமக்களை சமாதானம் செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணை அழைத்து சென்றனர்.
டாக்டர் சரவணனையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவரை கைது செய்தனர். மாஜிஸ்திரேட்டு முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






