என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரபல டாக்டர் கைது"

    கோவையில் தாயை சிகிச்சைக்கு அழைத்து வந்தபோது பெண்ணிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்ட பிரபல டாக்டர் கைது செய்யப்பட்டார்.
    கோவை:

    கோவை அவினாசி ரோடு அண்ணா சிலை சிக்னல் அருகில் உள்ள  கிளீனிக் ஒன்றில் பிரபல சிறுநீரக சிகிச்சை பிரிவு டாக்டர் ராம லிங்கம்(65) சிகிச்சை அளித்து வருகிறார்.

    சம்பவத்தன்று செல்வபுரத்தை சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவர், தன்னுடைய தாயை சிறுநீரக சிகிச்சைக்காக இங்கு அழைத்து வந்தார். தாய்க்கு சிறுநீரகத்தில் கல் இருப்பதாகவும், அந்த கல்லை அகற்ற வேண்டும் என்றும் டாக்டர் ராமலிங்கம் கூறி உள்ளார்.

    தாயின் உடலை பரிசோதிக்க வேண்டிய டாக்டர் அவருடைய மகளின் உடல் பாகங்களை தொட்டு தாய்க்கு இந்த, இந்த இடங்களில் வலி இருக்கிறதா? என்று கேட்டு மகளிடம் சில்மி‌ஷம் செய்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து காந்திபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், பாதிக்கப்பட்ட இளம்பெண் புகார் செய்தார். அதன்பேரில் டாக்டர் ராமலிங்கம் மீது சட்டப்பிரிவு 354(ஏ)-பெண்ணின் உணர்ச்சிக்கு குந்தகம் விளைவித்தல் மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவு 4 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    பின்னர் அவரை ஜே.எம்.2 மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து டாக்டர் ராமலிங்கம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    ×