ராமநாதபுரத்தில் சிகிச்சை பெற வந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை- டாக்டர் கைது

பெண்ணுக்கு டாக்டர் ஜபருல்லாகான் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. பாலியல் தொல்லை குறித்து பெண் ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
ராமநாதபுரத்தில் சிகிச்சை பெற வந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை- டாக்டர் கைது
Published on

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம் பட்டினங்காத்தான் சேதுபதி நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் டாக்டர் ஜபருல்லாகான் (வயது 71). இவர் ராமநாதபுரம் பாரதிநகர் மீன்மார்க்கெட் பகுதியில் கிளினிக் நடத்தி வருகிறார்.

இவரது கிளினிக்கிற்கு பட்டினங்காத்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் தினமும் சிகிச்சை பெற வந்து செல்வர். அதேபோல் கடந்த 2-ந் தேதி உடல் நலம் பாதித்திருந்த புதுவலசை பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் ஜபருல்லாகானின் கிளினிக்கிற்கு சிகிச்சை பெற வந்துள்ளார்.

அப்போது அந்த பெண்ணுக்கு டாக்டர் ஜபருல்லாகான் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண் ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஹெலன்ராணி மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

அதில் இளம்பெண்ணுக்கு டாக்டர் ஜபருல்லா கான் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com