search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீமான்
    X
    சீமான்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பிறப்பு சான்றிதழ் இல்லை- சீமான் தகவல்

    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனக்கு பிறப்பு சான்றிதழ் இல்லை என்று கூறியதாக திருச்சியில் நடைபெற்ற போராட்டத்தில் சீமான் பேசியுள்ளார்.
    திருச்சி:

    திருச்சியில் குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. 21-வது நாளான நேற்று போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்து பேசினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    என்.பி.ஆருக்கு எதிராக மற்ற மாநிலங்கள் தீர்மானம் நிறைவேற்றியது போன்று தமிழக அரசும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியே தனக்கு பிறப்புச்சான்றிதழ் இல்லை என என்னிடமே கூறியுள்ளார். நம் நாட்டின் குடியரசுத் தலைவருக்கும் பிரதமருக்கும் கூட பிறப்புச்சான்றிதழ் இருக்காது.

    சி.ஏ.ஏ. சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டும் எதிரானது அல்ல, ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் எதிரானது. இந்த சட்டத்தில் இருக்கும் நடைமுறையால் ஒட்டுமொத்த மக்களும் முகாமுக்கு செல்ல வேண்டிய நிலை தான் வரும்.

    இந்தியாவிற்குள் இனிமேல் அகதிகளாக வருபவர்களுக்கு குடியுரிமை தரமாட்டோம் எனக் கூறலாமே தவிர, ஏற்கனவே இந்தியாவில் இருப்பவர்களுக்கு குடியுரிமை தரமாட்டோம், குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு தரமாட்டோம் என கூறுவதுதான் பாசிசம்.

    டிரம்ப், மோடி ஆகியோர் ஒரே சிந்தனை கொண்டவர்கள் என்பதால் இந்தியாவிற்கு வந்தபோது சி.ஏ.ஏ. சட்டம் குறித்து எதுவும் பேசாமல் சென்றுள்ளார். நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருந்து கொண்டு உள்ளது. ஆனால் அவற்றை பேசவிடாமல் சி.ஏ.ஏ. சட்டத்தை நிறைவேற்றி அதை மட்டுமே நம்மை பேச வைத்துக் கொண்டுள்ளார்கள்.

    இனிமேல் ஆயுதங்களை ஏந்தி போரிடுவதற்கு பதிலாக உயிரியல் போர்கள் (பயோ வார்) தான் நடக்கும். அதில் ஒன்றுதான் இந்த கொரானா வைரஸ். உலகம் பேரழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதை இது காட்டுகிறது. இது குடிமக்களை மட்டுமல்லாமல் நாட்டின் அதிபரையும் தாக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முதல்-அமைச்சருக்கு காவிரி காவலன் என்கிற பட்டம் வழங்கப்பட்டது குறித்த கேள்விக்கு எல்லோரும் தமிழர்கள்தான், ஒவ்வொருவரும் மாறி மாறி பட்டம் வழங்கி கொள்ள வேண்டியதுதான் என்றார்.
    Next Story
    ×