search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக
    X
    திமுக

    திருவள்ளூர் ஒன்றியத்தை திமுக பிடித்தது - வெற்றி பெற்றவர்கள் முழு விவரம்

    உள்ளாட்சி தேர்தலில் திருவள்ளூர் ஒன்றியத்தை திமுக கைப்பற்றி உள்ளது. வெற்றி பெற்றவர்கள் முழு விவரங்களையும் விரிவாக பார்க்கலாம்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில், 14 ஒன்றியங்களில், 526 ஊராட்சி தலைவர், 3,945 ஊராட்சி உறுப்பினர், 230 ஒன்றிய கவுன்சிலர் மற்றும் 24 மாவட்ட கவுன்சிலர் என மொத்தம் 4,725 பதவிகளுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடந்தது.

    ஊராட்சி தலைவர், கவுன்சிலர் என 806 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ள, 3,919 பதவிகளுக்கு, 13 ஆயிரத்து, 338 பேர் போட்டியிட்டனர்.

    27-ந் தேதி மற்றும் 30-ந் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடந்த தேர்தலில் 2577 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் அந்தந்த ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நேற்று 14 வாக்கு எண்ணும் மையங்களில் எண்ணும் பணி தொடங்கியது.

    தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

    திருவள்ளூர் மாவட்டத்தில் ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் மாவட்ட வார்டு உறுப்பினர்கள் வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.

    திருவள்ளூர் ஒன்றியத்தில் உள்ள 18 வார்டுகளில் 12 இடங்களை தி.மு.க.வும், 3 இடங்களை அ.தி.மு.க.வும் பிடித்து உள்ளன. சுயேட்சைகள் 3 இடங்களில் வெற்றி பெற்று உள்ளனர்.

    திருவள்ளூர்

    திருவள்ளூர் ஒன்றியத்தில் வெற்றி பெற்றவர்கள் விபரம் வருமாறு:-

    1-வது வார்டு- பர்கத் துல்லா (தி.மு.க.), 2-வது வார்டு- வேலு (தி.மு.க.), 3-வது வார்டு- சங்கீதா (தி.மு.க.), 4-வது வார்டு- விமலா (தி.மு.க.), 5-வது வார்டு- செல்வராணி (அ.தி.மு.க.), 6-வது வார்டு- சரத்பாபு (தி.மு.க.), 7-வது வார்டு- பூவண்ணன் (சுயே), 8-வது வார்டு- எத்திராஜ் (தி.மு.க.), 9-வது வார்டு- சகிலா (சுயே), 10-வது வார்டு- சாந்தி (தி.மு.க.)

    11-வது வார்டு- வேதவள்ளி (தி.மு.க.), 12-வது வார்டு- ஜெயசீலி (தி.மு.க.) போட்டியின்றி தேர்வு, 13-வது வார்டு- விமலா (சுயே), 14-வது வார்டு- ஹரி (தி.மு.க.), 15-வது வார்டு- கிருபாவதி (அ.தி. மு.க.), 16-வது வார்டு- பொற்கொடி (அ.தி.மு.க.), 17-வது வார்டு- திலிபிராஜ் (தி.மு.க.), 18-வது வார்டு- நவமணி (தி.மு.க.).

    பூண்டி

    1-வது வார்டு- பேபி (தி.மு.க.), 2-வது வார்டு- பிரசாந்தி (தி.மு.க.), 3-வது வார்டு- குமார் (தி.மு.க.), 4-வது வார்டு- தேன்மொழி (தி.மு.க.), 5-வது வார்டு- வெங்கட்ரமணா (அ.தி.மு.க.), 6-வது வார்டு- மணி (அ.தி.மு.க.), 7-வது வார்டு- பாலாஜி (அ.தி.மு.க.), 8-வது வார்டு- சண்முகம் (பா.ஜ.), 9-வது வார்டு- யசோதா (அ.தி.மு.க.), 10-வது வார்டு- ஞானமுத்து (தி.மு.க.)

    11-வது வார்டு- வெங்கடேசன் (சுயே), 12-வது வார்டு- மகாலட்சுமி (தி.மு.க.), 13-வது வார்டு- விஜி (அ.தி.மு.க.), 14-வது வார்டு- பிரபாவதி (தே.மு.தி.க.), 15-வது வார்டு- சுபாஷினி (தி.மு.க.), 16-வது வார்டு- சுலோச்சனா (அ.தி.மு.க.), 17-வது வார்டு- ரெஜிலா (சுயே), 18-வது வார்டு- மஞ்சு (தி.மு.க.)

    எல்லாபுரம்

    1-வது வார்டு- லதா (அ.தி.மு.க.), 2-வது வார்டு- சுரேஷ் (சுயேட்சை), 3-வது வார்டு-குணசேகரன் (தி.மு.க.), 4-வது வார்டு-வித்யாலட்சுமி (அ.தி.மு.க.), 5-வது வார்டு- புஷ்பா (பா.ம.க.), 6-வது வார்டு- கோகிலா (தி.மு.க.), 7-வது வார்டு-விவேகானந்தா (அ.தி.மு.க.), 8-வது வார்டு- சுரேஷ் (அ.தி.மு.க.), 9-வது வார்டு- ஜமுனா (தி.மு.க.), 10-வது வார்டு- கல்பனா வெங்கடேசன் (திமு.க.), 11-வது வார்டு- திருமலை (காங்.), 12-வது வார்டு- ரமேஷ் (அ.தி.மு.க.), 13-வது வார்டு- சியாமளா (சுயேட்சை), 14-வது வார்டு-ஜெயலட்சமி (அ.தி.மு.க.), 15-வது வார்டு-பா.சுகந்தி (அ.தி.மு.க.), 16-வது வார்டு- ரவி (சி.பி.ஐ.(எம்.), 17-வது வார்டு- தட்சணாமூர்த்தி (சுயேட்சை),18-வது வார்டு- சரவணன் (அ.தி.மு.க.), 19-வது வார்டு-குழந்தைவேலு (அ.தி.மு.க.), 20-வது வார்டு- தனலட்சுமி (தி.மு.க.).

    பள்ளிப்பட்டு

    1-வது வார்டு- ஜெகதீஷ் (அ.தி.மு.க.), 2-வது வார்டு- உஷாபிரியா (தே.மு.தி.க.), 3-வது வார்டு- ரவி (அ.தி.மு.க.), 4-வது வார்டு- சுகுணா (தி.மு.க.), 5-வது வார்டு- பாரதி (தி.மு.க.), 6-வது வார்டு- நதியா (தி.மு.க.), 7-வது வார்டு- பத்மா (இ.தே.கா.), 8-வது வார்டு- முத்துராமன் (அ.தி.மு.க.), 9-வது வார்டு- புஷ்பா (அ.தி.மு.க.), 10-வது வார்டு- முத்துரெட்டி (தி.மு.க.), 11-வது வார்டு- ஜான்சிராணி (அ.தி.மு.க.), 12-வது வார்டு- விநாயகம்மா (அ.தி.மு.க.).

    கடம்பத்தூர்

    1-வது வார்டு- ராணி (அ.தி.மு.க.), 2-வது வார்டு- சுரேஷ் (அ.தி.மு.க.), 3-வது வார்டு- ஹரிகரன் (அ.தி.மு.க.), 4-வது வார்டு- யாழினி (சுயே), 5-வது வார்டு- பூங்கோதை (அ.தி.மு.க.), 6-வது வார்டு- நரேஷ்குமார் (அ.தி.மு.க.), 7-வது வார்டு திராவிடபத்தன் (தி.மு.க.), 8-வது வார்டு- யோகநாதன் (பா.ம.க.), 9-வது வார்டு- வெங்கடேசன் (பா.ம.க.), 10-வது வார்டு- தரணி (தே.மு.தி.க.)

    11-வது வார்டு- கோவிந்தம்மாள் (பா.ம.க.), 12-வது வார்டு- சரஸ்வதி (தி.மு.க.), 13-வது வார்டு- பிரசாத் (சுயே), 14-வது வார்டு- தயாளன் (சுயே), 15-வது வார்டு- சுப்பிரியா (தி.மு.க.), 16-வது வார்டு- சுமதி (அ.தி.மு.க.), 17-வது வார்டு- கார்த்திகேயன் (தி.மு.க.), 18-வது வார்டு- நீலாவதி (தி.மு.க.), 19-வது வார்டு- சுஜத்தா (அ.தி.மு.க.).

    வில்லிவாக்கம் ஒன்றியம்

    வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 8 வார்டுகள் உள்ளன. இதில் 7 வார்டுகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இதில் தி.மு.க.-3 இடங்களிலும், அ.தி.மு.க.-1 இடத்திலும், பா.ம.க.-2 இடங்களிலும், சுயேட்சை- 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.

    திருவாலங்காடு

    1-வது வார்டு- சுந்தரம்மாள் (தி.மு.க.), 2-வது வார்டு- சாந்தி (அ.தி.மு.க.), 3-வது வார்டு- சரசா (அ.தி.மு.க.), 4-வது வார்டு- சாந்தி (அ.தி.மு.க.), 5-வது வார்டு- பாரதி (சுயேட்சை), 6-வது வார்டு- கவுசல்யா (பி.ஜே.பி.), 7-வது வார்டு- மேனகா (அ.தி.மு.க.), 8-வது வார்டு- தேவி (அ.தி.மு.க.), 9-வது வார்டு-டில்லிபாபு (அ.தி.மு.க.), 10-வது வார்டு-ராஜேஸ்வரி (தி.மு.க.), 11-வது வார்டு- நந்தகுமார் (தி.மு.க.), 12-வது வார்டு- ஜீவா (அ.தி.மு.க.), 13-வது வார்டு- மகாலிங்கம் (அ.தி.மு.க.), 14-வது வார்டு- சுஜாதா (தி.மு.க.), 15-வது வார்டு- ஜெயபாரதி (தி.மு.க.), 16-வது வார்டு- தினகரன் (தி.மு.க.)

    Next Story
    ×