search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகளிரணி ஆலோசனை கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசினார்.
    X
    மகளிரணி ஆலோசனை கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசினார்.

    உள்ளாட்சி தேர்தலை சந்திப்போம்- கனிமொழி தலைமையில் மகளிரணி தீர்மானம்

    உள்ளாட்சி தேர்தல் விரைவில் வர உள்ளதால் அதை எதிர்கொள்ளும் வகையில் தி.மு.க. மகளிர் அணியினரின் பணி சிறப்பாக அமைந்திட கனிமொழி தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    சென்னை:

    தி.மு.க. மகளிர் அணி தொண்டரணி ஆலோசனை கூட்டம் மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    * பெண்கள் பாதுகாப்பு என்பது இன்று ஒரு பெரிய கேள்விக்குறியாகிவிட்டது. பாலியல் வன்முறையால் நிர்பயா போன்று பல பெண்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். கோவையில் சமீபத்தில் 16 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சீரழிக்கப்பட்டு இருக்கிறார்.

    எனவே, கடுமையான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

    * வெங்காயத்தை நினைத்தாலே கண்ணில் நீர் வரும் அளவிற்கு வெங்காய விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பெண்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.

    *அடிப்படை பொருட்கள் கூட மக்களுக்கு நியாயமான விலையில் கிடைக்க வழிவகை செய்ய முடியாமல் மத்திய - மாநில அரசுகள் செயலற்றதாக உள்ளது. இந்த நிலை மாற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    * புதிய கல்விக்கொள்கை 2019 தேவையற்ற வகையில் மாநில உரிமைகளில் மத்திய அரசின் தலையீட்டுக்கு வழிவகுக்கிறது. எனவே கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

    * விரைவில் உள்ளாட்சி தேர்தல் வர இருக்கிறது. அதை எதிர்கொள்ளும் வகையில் தி.மு.க. மகளிர் அணியினரின் பணி சிறப்பாக அமைந்திட வேண்டும். கடுமையாக உழைத்து கழகத்துக்கு வெற்ற தேடி தருவோம் என உறுதி ஏற்போம்.

    மேற்கண்ட தீர்மானங்கள் உள்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×