search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    பேச்சிப்பாறையில் 12.6 மி.மீ. மழை

    பேச்சிப்பாறையில் அதிகபட்சமாக 12.6 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. மலையோர பகுதிகளிலும் மழை நீடித்து வருவதால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
    நாகர்கோவில்:

    குமரி கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடித்து வருவதால் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    நாகர்கோவில், பூதப்பாண்டி, சுருளோடு, கன்னிமார், கொட்டாரம், மயிலாடி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை பெய்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

    திற்பரப்பு அருவி பகுதியிலும் சாரல் மழை நீடித்து வருகிறது. அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் அருவியில் ஆனந்த குளியல் இட்டு வருகிறார்கள். இங்கு ஐயப்ப பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது.

    பேச்சிப்பாறையில் அதிகபட்சமாக 12.6 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. மலையோர பகுதிகளிலும் மழை நீடித்து வருவதால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 45.25 அடியாக இருந்தது. அணைக்கு 976 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 611 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 72.50 அடியாக இருந்தது. அணைக்கு 376 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    சிற்றாறு-1 அணையின் நீர்மட்டம் 16.14 அடியாகவும், சிற்றாறு-2 அணையின் நீர் மட்டம் 16.24 அடியாகவும், பொய்கை அணையின் நீர் மட்டம் 33.50 அடியாகவும் உள்ளது. மாம்பழத்துறையாறு அணை முழு கொள்ளளவான 54.12 அடியை எட்டி நிரம்பி வழிகிறது.

    நாகர்கோவில் நகருக்கு தண்ணீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 23.80 அடியாக உள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை-12.6, பெருஞ்சாணி-8.6, சிற்றாறு 1-11.6, சிற்றாறு 2-5, மாம்பழத்துறையாறு-3, நாகர்கோவில்-3.6, பூதப்பாண்டி- 10.2, சுருளோடு-7, கன்னிமார்-8.2, ஆரல்வாய்மொழி- 11, பாலமோர்-5.2, கொட்டாரம்-4.2, மயிலாடி-6, ஆனைக்கிடங்கு-10.2, அடையாமடை-4, முள்ளங்கினாவிளை-2, புத்தன் அணை-7.2.
    Next Story
    ×