search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொட்டும் மழையில் வாக்கு சேகரித்த ரங்கசாமி.
    X
    கொட்டும் மழையில் வாக்கு சேகரித்த ரங்கசாமி.

    காங்கிரசுக்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்- ரங்கசாமி கடும் தாக்கு

    எதிர்க்கட்சிகள் மீது பழிபோடும் காங்கிரசுக்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று ரங்கசாமி கூறியுள்ளார்.
    புதுச்சேரி:

    காமராஜர் நகர் தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணாநகர் 14-வது குறுக்குத்தெருவில் இன்று என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி வீடு, வீடாக சென்று நோட்டீஸ் வழங்கி ஜக்கு சின்னத்துக்கு வாக்களிக்கும்படி கோரினார். அப்போது பலத்த மழை பெய்தது. மழையில் நனைந்தபடியே சென்று ரங்கசாமி வாக்கு சேகரித்தார். ரங்கசாமியுடன் எம்.எல். ஏ.க்கள் திருமுருகன், செல்வம், அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ., முன்னாள் வாரிய தலைவர்கள் மதி, பாலமுருகன், பா.ஜனதா பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன், புதிய நீதிக்கட்சி ஸ்ரீதர் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் சென்றனர். பிரசாரத்தின்போது ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    என்.ஆர்.காங்கிரஸ் தொடங்கப்பட்டபோதும் சரி, அதன்பிறகும் சரி மாநில அந்தஸ்து பெறுவதுதான் எங்கள் லட்சியமாக இருந்தது. அ.தி.மு.க.வின் கொள்கையும் புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறுவதுதான். இதை பல ஆண்டாக கேட்டு வருகிறோம். ஆனால், ஆட்சிக்கு வந்துள்ள காங்கிரஸ் இதற்கு எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் என ஐகோர்ட்டு கூறியுள்ளது. 

    அதன்பிறகும் ஏன் கோப்புகளை கவர்னருக்கு அனுப்ப வேண்டும். அரசின் அன்றாட நிகழ்வுகளிலும் கவர்னர் தலையிடக்கூடாது என கோர்ட்டு கூறியுள்ளது. இதற்கு பிறகும் கவர்னர் மீது இந்த அரசு பழி போட முடியாது. தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் எதையும் அரசு செயல்படுத்தவில்லை. புதிதாக எந்த திட்டத்தையும் காங்கிரஸ் செயல்படுத்தவில்லை. ஆனால், எதிர்க்கட்சிகள் மீது பழிபோடுவதை நாராயணசாமி வாடிக்கையாக வைத்துள்ளார். இதற்கு இத்தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். 

    இவ்வாறு அவர் கூறினார்.       
    Next Story
    ×