search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊட்டி-கூடலூர் இடையே போக்குவரத்து தொடங்கியது
    X
    ஊட்டி-கூடலூர் இடையே போக்குவரத்து தொடங்கியது

    மழை ஓய்ந்ததால் இயல்பு நிலைக்கு திரும்பும் ஊட்டி

    இன்று மழை இல்லாததாலும் மேலும் விடுமுறை நாள் என்பதாலும் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வர தொடங்கினார்கள். இதனால் ஊட்டி களை கட்டியது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பலத்த மழை பெய்தது. அவலாஞ்சி பகுதியில் வரலாறு காணாத வகையில் ஒரே நாளில் 91 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது.

    இந்த கனமழைக்கு ஊட்டி, கூடலூர், குந்தா, பந்தலூர் ஆகிய 4 தாலுகாவில் பலத்த சேதம் ஏற்பட்டது. மண் சரிவு ஏற்பட்டு சாலைகள் சேதம் அடைந்தது. ராட்சத மரங்கள் ரோட்டில் விழுந்தது. மழைக்கு 5 பேர் பலியாகி உள்ளனர்.

    நீலகிரி மாவட்டத்தில் நேற்று மழை இல்லை. மேக மூட்டம் காணப்பட்டது. இன்று மழை வெறித்து வெயில் அடிக்க தொடங்கியது. இதனால் இயல்பு நிலை திரும்பியது.

    பலத்த மழை காரணமாக ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து இருந்தது. இதனால் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் ஆகியவை வெறிச்சோடி காணப்பட்டது.

    இன்று மழை இல்லாததாலும் மேலும் விடுமுறை நாள் என்பதாலும் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வர தொடங்கினார்கள். இதனால் ஊட்டி களை கட்டியது.

    இதற்கிடையே மழையால் சேதம் அடைந்த பகுதிகளில் மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வருவாய் துறை, நெடுஞ்சாலைத்துறை, தீயணைப்பு துறை, பேரிடர் மீட்பு படையினர் மற்றும் ராணுவத்தினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மழை ஓய்ந்ததால் கூடலூர் - ஊட்டிக்கு பஸ் சேவை தொடங்கியது. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குன்னூர் மற்றும் பேரிடர் உதவிக்குழு சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

    தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் முருகன் மஞ்சூர் வந்தார். பின்னர் மேலிதளா வினோபாஜி நகர், எமரால்டு, அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று மழை வெள்ள சேதங்களை பார்வையிட்டார்.

    முகாம்களில் தங்கி உள்ள பாதிக்கப்பட்ட பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.



    Next Story
    ×