search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    எடப்பாடி பழனிசாமிக்கு வெடிகுண்டு மிரட்டல் - உடுமலை வாலிபர் கைது

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த உடுமலை வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பூர்:

    மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பகுதி பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார்.

    மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு கோவை வந்தார். பின்னர் அவர் சேலம் புறப்பட்டு சென்றார்.

    இந்த நிலையில் சென்னையில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று நள்ளிரவு போன் வந்தது. அதில் பேசிய மர்ம நபர் மேட்டூர் அணையில் குண்டு வைத்துள்ளோம். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணையை திறந்து விடும்போது குண்டுவெடிக்கும். முடிந்தால் அவரை காப்பாற்றி கொள்ளுங்கள் என கூறி போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

    இந்த போன் அழைப்பு எங்கிருந்து வந்தது என சென்னை கட்டுப்பாட்டு அறை போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் இருந்து பேசியது தெரிய வந்தது.

    இதுகுறித்து திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் தனிப்படை அமைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் குறித்து விசாரணை நடத்தினார்.

    அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் உடுமலை அருகே உள்ள குழியூர் பகுதியை சேர்ந்த தேவகிருஷ்ணன் என்கிற குமார் (30) என்பது தெரிய வந்தது. அவரை தனிப்படையினர் கைது செய்து திருப்பூர் அழைத்து வந்தனர்.

    அவரிடம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.


    Next Story
    ×