search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீசார் தடியடி நடத்த முயன்றதால் மாணவ-மாணவிகள் கலைந்து சென்றனர்.
    X
    போலீசார் தடியடி நடத்த முயன்றதால் மாணவ-மாணவிகள் கலைந்து சென்றனர்.

    மதுரையில் லேப்டாப் வழங்கக்கோரி மாணவ-மாணவிகள் சாலை மறியல்: போலீசார் தடியடி

    மதுரை-திருமங்கலத்தில் லேப்டாப் கேட்டு மாணவ-மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்த முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    மதுரை:

    தமிழக அரசின் இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் மாணவ-மாணவிகள் பயனடைந்தனர்.

    ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக லேப்டாப் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் பல மாணவ-மாணவிகளுக்கு லேப்டாப் கிடைக்கவில்லை.

    மடிக்கணினி

    கடந்த சில வாரமாக லேப்-டாப் வழங்கக்கோரி மாநிலம் முழுவதும் மாணவ-மாணவிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலும் நாள்தோறும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

    மதுரையில் இன்றும் மாணவ-மாணவிகள் லேப்-டாப் கேட்டு மறியல் போராட்டம் நடத்தினர். மதுரை புட்டுதோப்பு மங்கையர்கரசி மேல்நிலைப்பள்ளி மற்றும் பல்வேறு பள்ளிகளில் கடந்த ஆண்டு படித்த 75-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மதுரை எம்.ஜி.ஆர். பஸ் நிலையம் முன்பு திரண்டனர்.

    அவர்கள் திடீரென மெயின்ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    லேப்-டாப் வழங்கக்கோரி கோ‌ஷம் எழுப்பினர். திடீர் மறியலால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    அண்ணாநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. திடீரென போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்த முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதே கோரிக்கையை வலியுறுத்தி திருமங்கலம் பி.கே.என். பெண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-1, பிளஸ்-2 மாணவிகள் 150-க்கும் மேற்பட்டோர் இன்று காலை திருமங்கலம் பெரியகடை வீதி ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். லேப்டாக் வழங்காத அரசை கண்டித்தும், உடனே லேப் டாப் வழங்கக்கோரியும் கோ‌ஷம் எழுப்பினர்.

    மறியல் குறித்து தகவலறிந்த திருமங்கலம் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். மாணவிகளின் சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



    Next Story
    ×