என் மலர்

  செய்திகள்

  ஆண்டிப்பட்டி அருகே பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது
  X

  ஆண்டிப்பட்டி அருகே பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆண்டிப்பட்டி அருகே பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

  ஆண்டிப்பட்டி:

  ஆண்டிப்பட்டி அருகே கோம்பை தொழுவை சேர்ந்தவர் தீபாவளி (வயது44). இவரது மனைவிக்கு அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் (35) என்பவர் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

  சம்பவத்தன்று தீபாவளி வேலைக்கு சென்று விட்டார். அவரது மனைவி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை நோட்டமிட்ட ஈஸ்வரன் அங்கு சென்று அவரது மனைவியை அழைத்துள்ளார்.

  திடீரென அவரை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் ஒன்றுகூடவே ஈஸ்வரன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து மயிலாடும்பாறை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து ஈஸ்வரனை கைது செய்தனர்.

  Next Story
  ×