search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளி கைது"

    • சஜ்ஜத்துக்கும், மனைவி கவுசருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    • சஜ்ஜத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் அலிபூரைச் சேர்ந்தவர் சஜ்ஜத் கோகர். இவரது மனைவி கவுசர் (வயது 42). இந்த தம்பதியினருக்கு 4 மகன்கள் மற்றும் 3 மகள்கள் இருந்தனர்.

    இவர்கள் அனைவருமே 8 மாதம் முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகள் ஆவர். இந்தநிலையில் சஜ்ஜத் கூலி வேலை பார்த்து வந்தார். ஆனால் தனது குடும்பத்தை காப்பாற்றக்கூடிய அளவுக்கு அவருக்கு போதிய வருமானம் இல்லை என கூறப்படுகிறது.

    இதனால் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் தனது குழந்தைகளுக்கு வயிறார உணவு கூட வழங்க முடியவில்லையே என்ற மன உளைச்சலில் சஜ்ஜத் இருந்துள்ளார்.

    இந்தநிலையில் சஜ்ஜத்துக்கும், மனைவி கவுசருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த சஜ்ஜத் வீட்டில் இருந்த கோடரியை எடுத்து தனது மனைவியை வெட்டிக் கொன்றார்.

    மேலும் ஆத்திரம் அடங்காத அவர் பெற்ற குழந்தைகள் என்றும் பாராமல் தனது 7 குழந்தைகளையும் அதே கோடரியால் சரமாரியாக வெட்டினார். இதில் அந்த குழந்தைகள் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இதனையடுத்து சஜ்ஜத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெற்ற குழந்தைகளை தந்தையே வெட்டிக் கொன்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே இந்த சம்பவத்தில் பலியானவர்களுக்கு பலுசிஸ்தான் மாகாண முதல்-மந்திரி மரியம் நவாஸ் ஆழ்ந்த தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

    • வேலன் உயிரிழந்த சம்பவம் குறித்து தகவல் அவரது உறவினர்களுக்கு தெரியவந்தது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காவேரிப்பட்டணம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை அடுத்த எர்ரஅள்ளி கருகன்சாவடி சேர்ந்தவர் வேலன் (வயது42).

    இவர் குடிநீர் தொட்டி டேங்க் ஆபரேட்டராக வேலை செய்து வந்தார்.

    இவர் நேற்று மாலை 5 மணிக்கு காவேரிப்பட்டணத்தில் ஏழுஜடை முனியப்பன் கோவில் பகுதியில் உள்ள ஏரி அருகேமின் மோட்டார் அணைக்க சென்றார்.

    அங்கு அதே பகுதியை சார்ந்த முனியப்பன் என்பவர் மது குடித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

    இதனை அடுத்து வேலன் முனியப்பனுக்கு இடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

    ஒரு கட்டத்தில் வாக்கு வாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த முனியப்பன் அங்கிருந்த மீன் வெட்டும் கத்தியால் வேலனை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்து ரத்தம் அதிகமாக வெளியேறி சம்பவ இடத்திலேயே வேலன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதனையடுத்து அந்த பக்கம் சென்றவர்கள் வேலன் கீழே பிணமாக இருப்பதை பார்த்து உடனடியாக காவேரிப்பட்டணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து வேலனின் உடலை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    வேலன் உயிரிழந்த சம்பவம் குறித்து தகவல் அவரது உறவினர்களுக்கு தெரியவந்தது. உடனே அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அந்த ஏரியில் இருந்த மீன் ஷெட்டுக்கு தீ வைத்தனர்.

    இதனால் மீன்பிடிக்கும் செட்டுக்குள் இருந்த இரு சக்கர வாகனம் மற்றும் பொருட்கள் முற்றிலும் எரிந்தது.

    பின்பு பாலக்கோடு ரோட்டில் சாலை மறியல் ஈடுபட்டனர். உடனே அங்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் கலைந்து செல்லும்படி கூறினர். பின்பு அவர்கள் அங்கிருந்து காவேரிப்பட்டணம்-சேலம் மெயின் ரோடு, பாலக்கோடு பிரிவு சாலையில் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். கொலை செய்தவனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பேப்பருக்கு தீவைத்து கோஷங்கள் எழுப்பினர்.

    இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிருஷ்ணகிரி உட்கோட்ட போலீஸ் துணை கண்காணிப்பாளர் அவர்களை சமாதானம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் இப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை உருவானது. அப்பொழுது அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

    இதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தார். இதனை அடுத்து வேலனை கொலை செய்த முனியப்பன் தருமபுரிக்கு தப்பி வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    உடனே காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி ரமணன் மற்றும் போலீசார் உடனே விரைந்து வந்து தருமபுரி பஸ் நிலையத்தில் தலைமறைவாக இருந்த முனியப்பனை நேற்று இரவு கைது செய்தனர்.

    தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த 3 மணி நேரத்துக்குள்ளாகவே கொலையாளி முனியப்பனை போலீசார் கைது செய்ததால் அப்பகுதியில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

    இதுகுறித்து, அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

    இந்த பகுதியில் ஒரு டாஸ்மாக் கடை உள்ளது.

    மேலும் 24 மணி நேரமும் அந்த பகுதியில் உள்ள ஒரு சந்து கடையில் மது பானங்கள் விற்கப்படுகிறது.

    குறிப்பாக பாலக்கோடு ரோட்டில் உள்ள சந்து கடையில் 24 மணி நேரமும் கிடைக்கிறது. இதனால் இப்பகுதியில் குடித்துவிட்டு ரோட்டில் செல்பவர்களை குடித்துவிட்டு வீண் தகராறுகள் ஏற்பட்டு தற்போது நடந்த கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களும் அரங்கேறி வருகிறது என்றனர்.

    எனவே இப்பகுதியில் உள்ள சந்துகடைகளில் 24 மணிநேரமும் நடைபெறும் மது விற்பனையை உடனடியாக அதிகாரிகள் தடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    • மாணவி மனதளவிலும், உடல் அளவிலும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்.
    • குன்னூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் செய்தனர்.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கெரடா மட்டம் வெற்றி நகரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 42). கூலித்தொழிலாளி.

    அதே பகுதியில் 10 வயதான பள்ளி மாணவி, பெற்றோருடன் வசித்து வருகிறார். ஒரே இடத்தில் வசிப்பவர்கள் என்பதால் ரவிச்சந்திரனும், சிறுமியின் பெற்றோரும் நட்பாக பழகி வந்தனர். அவ்வப்போது மாணவிக்கு ரவிச்சந்திரன் இனிப்புகளும் வாங்கி கொடுத்தார்.

    சமீபகாலமாக ரவிச்சந்திரன், இனிப்பு வாங்கி கொடுத்து தனது வீட்டுக்கே சிறுமியை அழைத்துச் சென்றார். அங்கு சிறுமியிடம் அத்துமீறி அவர் பாலியல் தொல்லை கொடுத்தார்.

    பல நாட்களாக இந்த பாலியல் தொல்லை தொடர்ந்துள்ளது. இதன் காரணமாக மாணவி மனதளவிலும், உடல் அளவிலும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார். இதுபற்றி மாணவியின் பெற்றோர் விசாரித்துள்ளார். அப்போது ரவிச்சந்திரன் தனக்கு செய்த கொடுமையை கூறி கண்ணீர் விட்டுள்ளார். இதைக் கேட்டதும் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்த னர்.

    உடனடியாக அவர்கள் குன்னூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் செய்தனர். தங்கள் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரவிச்சந்திரன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் புகாரில் கூறியிருந்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவிச்சந்திரனை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    இதேபோல கோத்தகிரி அருகே உள்ள கடினமாலா பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியும் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார்.

    அந்த சிறுமிக்கு அதே பகுதியைச் சேர்ந்த 18 வயது வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுபற்றி சிறுமியின் பெற்றோர் குன்னூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.

    இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வேளாங்கண்ணி உதயரேகா, 18 வயது வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • வெடிகுண்டு வைக்கப்பட்டதாக வந்த தகவல் பொய் என்பது தெரியவந்தது.
    • இன்று காலை வீட்டில் இருந்த கணேசனை போலீசார் கைது செய்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 108 அவசர ஆம்புலன்ஸ் அவசர சேவை மையம் செயல்பட்டு வருகிறது.

    நேற்றிரவு இந்த மையத்தில் ஊழியர் ஒருவர் பணியில் இருந்தார். அப்போது ஒருபோன் அழைப்பு வந்தது.

    பணியில் இருந்த நபர் போனை எடுத்து பேசினார். அப்போது மறுமுனையில் பேசிய நபர், முதலமைச்சர் வீடு உள்பட 7 இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என கூறினார்.

    இதைகேட்டு அதிர்ச்சியான ஊழியர், அவரிடம் நீங்கள் யார் என்று விசாரித்தார். ஆனால் அதற்குள் அந்த நபர் தனது செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

    இதையடுத்து, அங்கிருந்த ஊழியர் சம்பவம் குறித்து ஊட்டி போலீசாருக்கு தகவல் அளித்தார். இதனை தொடர்ந்து போலீசார் உஷார்படுத்தப்பட்டு மாவட்ட முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

    மேலும் சென்னைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். தொடர்ந்து வெடிகுண்டு வைக்கப்பட்டதாக கூறப்பட்ட இடங்களில் போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் சோதனை நடத்தினர்.

    சோதனையில் குண்டு எதுவும் வைக்கப்படவில்லை என்பது உறுதியானது. இதையடுத்து வெடிகுண்டு வைக்கப்பட்டதாக வந்த தகவல் பொய் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் 108 ஆம்புலன்ஸ் சேவை மையத்திற்கு சென்று போன் வந்த நம்பரை வைத்து அது யாருடையது? எங்கிருந்து வந்தது என விசாரணையை தொடங்கினர்.

    விசாரணையில், வெடிகுண்டு வைக்கப்பட்டதாக போனில் கூறியது ஊட்டி அருகே உள்ள தாம்பட்டியை சேர்ந்த தொழிலாளி கணேசன் என்பது தெரியவந்தது.

    இன்று காலை ஊட்டி தாம்பட்டியில் உள்ள அவரது வீட்டில் இருந்த கணேசனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மதுபோதையில் இருந்ததால் 108 அவசர சேவை மையத்திற்கு அழைத்து மிரட்டல் விடுத்ததாக தெரிவித்தார்.

    தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் ஊட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக மனைவியின் ஊருக்கு ஷாஜி வந்திருக்கிறார்.
    • அக்கம்பக்கத்தினர் வருவதை பார்த்த ஷாஜி அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று விட்டார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பையனூர் அருகே உள்ள ஆலபடம்பு பகுதியை சேர்ந்தவர் ஷாஜி(வயது40). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி பிரசன்னா(38).

    ஷாஜி மற்றும் பிரசன்னாவுக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் இருவரும் கடந்த ஒரு ஆண்டாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பிரசன்னா கண்ணூர் கட்டிலபீடிகா பகுதியில் உள்ள பெற்றோரின் வீட்டில் வசித்துவந்தார்.

    இந்நிலையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக மனைவியின் ஊருக்கு ஷாஜி வந்திருக்கிறார். அப்போது அவர் மனைவியின் வீட்டிற்கு சென்றிருக்கிறார். கணவன்-மனைவி இருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டிருக்கிறது.

    அதில் ஆத்திரமடைந்த ஷாஜி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவியின் கழுத்தை அறுத்து தலையை துண்டித்து கொலை செய்தார். பிரசன்னாவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், அவரது வீட்டிற்கு ஓடிவந்து பார்த்தனர். அப்போது அங்கு பிரசன்னா தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

    அக்கம்பக்கத்தினர் வருவதை பார்த்த ஷாஜி அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று விட்டார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிரசன்னாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மனைவியை தலை துண்டித்து கொன்ற ஷாஜியை தேடி வந்தனர். இந்நிலையில் பையனூர் போலீஸ் நிலையத்தில் அவர் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடும்ப தகராறில் பிரிந்து வாழ்ந்த மனைவியை கட்டிட தொழிலாளி தலை துண்டித்து கொலை செய்த சம்பவம் கண்ணூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வயநாடு மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமி வயிறு வலிப்பதாக பெற்றோரிடம் கூறினா
    • சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், வயிற்று வலி அல்ல என்றும் அது பிரசவ வலி என்று கூறினர்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவின் வயநாடு மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமி வயிறு வலிப்பதாக பெற்றோரிடம் கூறினார். இதனைத்தொடர்ந்து அவரை ஆஸ்பத்திரிக்கு பெற்றோர் அழைத்துச்சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சிறுமிக்கு வயிற்று வலி அல்ல என்றும் அது பிரசவ வலி என்றும் கூறினர். இதனை கேட்டு சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையில் சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது.

    தொடர்ந்து சிறுமியிடம் விசாரித்தபோது, அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த 56 வயது தொழிலாளி தான் இதற்கு காரணம் என தெரியவந்தது. அவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • சிலம்பரசன் வீட்டில் 3 வாத்துகளை வளர்த்து வந்தார்.
    • வெங்கடேசனும் வீட்டில் ஏராளமான கோழிகளை வளர்த்து வருகிறார்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அடுத்த ஏ.கே. மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 35). வீடுகளுக்கு டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்தார்.

    இவரது மனைவி ஜமுனா. இவர்களுக்கு 2 வயதில் மகன் உள்ளார். ஜமுனா தற்போது கர்ப்பிணியாக உள்ளார். இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் வெங்கடேசன் (60). கூடை பின்னும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனர்.

    சிலம்பரசன் வீட்டில் 3 வாத்துகளை வளர்த்து வந்தார். இதே போல் வெங்கடேசனும் வீட்டில் ஏராளமான கோழிகளை வளர்த்து வருகிறார்.

    வாத்துகள் வெங்கடேசன் வளர்க்கும் கோழிகளை கொத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் சிலம்பரசனிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    இந்த நிலையில் இன்று காலை கோழி, வாத்துகள் சம்பந்தமாக மீண்டும் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    இதில் சிலம்பரசனும், வெங்கடேசனும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

    ஆத்திரமடைந்த வெங்கடேசன் வீட்டில் இருந்து கத்தியை எடுத்து வந்து சிலம்பரசன் கழுத்தில் வெட்டினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிலம்பரசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாத்து, கோழி தகராறில் நடந்த கொலை சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • 5 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக தொழிலாளி மீது அவரது மனைவி மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
    • புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தொழிலாளியை கைது செய்தனர்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சித்தர்கள் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் மகன் ஜெயராஜ் (வயது 31). இவருக்கும் பெரியகுளம் அருகே ஜி.கல்லுப்பட்டி நேருஜி நகரைச் சேர்ந்த சுகன்யா தேவி (வயது 28) என்பவருக்கும் கடந்த 17.05.2021 ஆம் ஆண்டு பெரியோர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

    திருமணத்தின் போது நகை மற்றும் சீர் வரிசை கொடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது மேலும் 5 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் வரதட்சணை கேட்டதாக நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லதா விசாரணை செய்து வரதட்சணை கேட்டு கொடுமை படுத்திய ஜெயராஜ் மற்றும் தாயார் ஜெயலட்சுமி ஆகிய 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து ஜெயராஜை கைது செய்து திண்டுக்கல் சிறையில் அடைத்தார்.

    • சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அ.தி.மு.க. சார்பில் மனு அளிக்கப்பட்டது.
    • அங்கிருந்த கண்காணிப்பு கேமிரா உதவியுடன், போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் புதிய பேருந்து நிலைய நுழைவாயில் அருகில் அ.தி.மு.க. சார்பில் ஒரே பீடத்தில் பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.

    அதில் பெரியார் சிலை யின் இடது கை பெருவிரல் சேதப்படுத்தப்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அ.தி.மு.க.வினர், மாவட்ட செயலாளர் இளம்பை இரா. தமிழ்ச்செல்வன் தலைமை யில் மறியல் மற்றும் ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினருடன், பெரம்பலூர் டி.எஸ்.பி. சுக்கிரன் பழனிச்சாமி தலைமையிலான போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது சிலையை சேதப்படுத்தியது குறித்து உரிய விசாரணை நடத்தி, மர்ம நபர் கைது செய்யப்படுவார் என்று உறுதி அளித்தார். சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அ.தி.மு.க. சார்பில் மனு அளிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து சிலை சேதப்படுத்தியது தொடர்பாக, அங்கிருந்த கண்காணிப்பு கேமிரா உதவியுடன், போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், பெரம்பலூர் மாவட்டம் ஒகளூர் கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவரது மகன் அனுசந்திரன் (வயது 37) என்ற கூலித்தொழிலாளி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில், குடிபோ தை யில் பெரியார் சிலை அருகே படுத்திருந்ததாகவும், பெரியாரின் சிலையில் உள்ள விரலை பிடித்து எந்திரிக்க முயற்சித்த போது, உடைந்து விட்டதாகவும், இதனால் தான் பயன்படுத்திய சிவப்பு துண்டை வைத்து, மறைத்து விட்டு சென்றதாகவும், ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரை கைது செய்த போலீசார், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராதா வீட்டில் இருந்த பொருட்கள், துணிகள், படிப்பு சான்றிதழ்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகியது.
    • போலீசார் வழக்குப்பதிந்து பாபுராஜை கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூர் கனிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பாபுராஜ் (வயது 22). இவரது மனைவி ராதா. குடும்ப பிரச்சினை காரணமாக ராதா தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றிருந்தார்.

    அப்போது அவரது வீட்டிற்கு பாபுராஜ் தீ வைத்திருக்கிறார். இதில் ராதா வீட்டில் இருந்த பொருட்கள், துணிகள், படிப்பு சான்றிதழ்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகியது. இதுகுறித்து நெடுபுழா போலீசில் ராதா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து பாபுராஜை கைது செய்தனர்.

    • ராஜ் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்திருக்கிறார்.
    • ராஜ் மாயமானது குறித்து திருவல்லம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள திருவலம் பகுதியை சேர்ந்தவர் பேபி. இவரது மகன்கள் பினு மற்றும் ராஜ். இருவரும் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்திருக்கின்றனர்.

    ராஜ் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்திருக்கிறார். ஆனால் பினு அடிக்கடி வேலைக்கு செல்லாமல் இருந்திருக்கிறார். இதன் காரணமாக சகோதரர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் ஓணம் பண்டியை முடிந்த ஆகஸ்ட் மாத இறுதி வாரத்தில் ராஜ் திடீரென மாயமானார். வீட்டில் இருந்து வந்தவர் திடீரென எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்பது தெரியாமல் அவரது தாய் தவித்தார். அவர் தனது மகனை உறவினர்களின் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடினார்.

    ஆனால் ராஜை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவரை பற்றி தனது மற்றொரு மகனான பினுவிடம் தாய் பேபி கேட்டிருக்கிறார். ஆனால் தனக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்தார். ஆகவே ராஜ் மாயமானது குறித்து திருவல்லம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசாரும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். ராஜின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மாயமான ராஜ் மற்றும் அவரது அண்ணன் பினு ஆகிய இருவரும் அடிக்கடி சண்டையிட்டு வந்த தகவலை போலீசாரிடம் அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.

    இதனால் பினுவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அவர்களது வீட்டின் பின் பகுதியில் தோண்டப்பட்டிருந்த பெரிய குழியில் புதிதாக மாமரக்கன்று நடப்பட்டிருப்பது குறித்து பேபி உள்ளிட்டோரிடம் போலீசார் கேட்டனர்.

    ஆனால் மரக்கன்று நடுவதற்காக பல மாதங்களுக்கு முன்பு குழி தோண்டப்பட்டதாகவும், அதில் எப்போது, யார் மரக்கன்றை நட்டார்கள்? என்பது குறித்து தனக்கு தெரியாது என்று பேபி கூறியிருக்கிறார். இதனால் பினு மீது போலீசாருக்கு மேலும் சந்தேகம் ஏற்பட்டது.

    அவர் ராஜை கொன்று புதைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், பினுவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது தனது தம்பியை அடித்துக்கொன்று, உடலை வீட்டின் பின்பகுதியில் தோண்டப்பட்டிருந்த பெரிய குழியில் போட்டு புதைத்து, அதன் மீது மாமரக்கன்றை நட்டதாக தெரிவித்தார்.

    இதனைக்கேட்டு போலீசாரும், குடும்பத்தினரும் அதிர்ச்சியடைந்தனர். ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தின்போது பினுவுக்கும், ராஜூக்கும் தகராறு நடந்திருக்கிறது. அப்போது ஆத்திரமடைந்த பினு, தம்பி ராஜை தாக்கியுள்ளார். இதில் அவர் இறந்துவிட்டார்.

    அப்போது வீட்டில் யாரும் இல்லாததால், யாருக்கும் தெரியாமல் தம்பியின் உடலை வீட்டின் பின் பகுதியில் ஏற்கனவே தொண்டப்பட்டிருந்த குழியில் போட்டு புதைத்திருக்கிறார். அதனை யாரும் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக, தம்பியின் உடலை புதைத்த குழியில் புதிய மாமரக்கன்றை நட்டு வைத்திருக்கிறார்.

    மேற்கண்ட தகவல்களை போலீசாரிடம் பினு தெரிவித்திருக்கிறார். இதையடுத்து பினுவை போலீசார் கைது செய்தனர். அவர் கூறியதன் அடிப்படையில் ராஜ் புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட இடத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் போலீசார் தோண்டினர்.

    அப்போது குழிக்குள் ராஜின் உடல் இருந்தது. உடல் புதைக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு மேல் ஆவதால், சற்று அழுகி காணப்பட்டது. ராஜின் உடலை பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. உடன்பிறந்த தம்பியை அவரது அண்ணனே அடித்துக்கொன்று, உடலை வீட்டு வளாகத்தில் குழிதோண்டி புதைத்த சம்பவம் திருவனந்தபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த சில நாட்களுக்கு முன் விக்ரம் அத்வாலுக்கும், ரூபால் ஒக்ரேக்கும் ஏதோ பிரச்சனை தொடர்பாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
    • வீட்டில் தனியாக இருந்த பயிற்சி விமான பணிப்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மும்பை:

    சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ரூபால் ஒக்ரே(வயது24). இவர் விமான பணிப்பெண் வேலையில் சேர கடந்த ஏப்ரல் மாதம் மும்பை வந்தார். அந்தேரி மரோல் பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் சகோதரி மற்றும் அவரது ஆண் நண்பருடன் வசித்து வந்தார். ஏர் இந்தியா நிறுவனத்தில் பயிற்சி விமான பணிப்பெண்ணாகவும் வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் ரூபால் ஒக்ரேவின் சகோதரி, ஆண் நண்பருடன் சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். வீட்டில் ரூபால் ஒக்ரே மட்டும் தனியாக இருந்தார்.

    இந்தநிலையில் ரூபால் ஒக்ரேக்கு அவரது குடும்பத்தினர் சொந்த ஊரில் இருந்து நேற்று முன்தினம் போன் செய்தனர். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை.

    இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் இது குறித்து மும்பையில் வசிக்கும் நண்பர் ஒருவரிடம் கூறினர். அவர் உடனடியாக வீட்டுக்கு சென்று பார்த்தபோது, கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. பலமுறை தட்டியும் ரூபால் ஒக்ரே கதவை திறக்கவில்லை. இதையடுத்து அவர் பவாய் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து மாற்று சாவி மூலம் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, அறையில் ரூபால் ஒக்ரே கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

    இதையடுத்து போலீசார் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜாவாடி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.

    இதில், அந்த கட்டிடத்தில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வரும் விக்ரம் அத்வால்(40) என்பவர் ரூபால் ஒக்ரே வீட்டுக்கு கடைசியாக வந்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விக்ரம் அத்வாலை கைது செய்தனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன் விக்ரம் அத்வாலுக்கும், ரூபால் ஒக்ரேக்கும் ஏதோ பிரச்சனை தொடர்பாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது. தொடர்ந்து கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விக்ரம் அத்வால் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தாரா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. வீட்டில் தனியாக இருந்த பயிற்சி விமான பணிப்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×