search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தே.மு.தி.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை ரகசியமானது- வைத்திலிங்கம் எம்.பி. பேட்டி
    X

    தே.மு.தி.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை ரகசியமானது- வைத்திலிங்கம் எம்.பி. பேட்டி

    தே.மு.தி.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை ரகசியமானது என்று வைத்திலிங்கம் எம்.பி. கூறியுள்ளார். #admk #dmdk #parliamentelection

    தஞ்சாவூர்:

    தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இன்று செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அ.தி.மு.க. அரசின் 2-ம் ஆண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி தொடங்கப்பட்டது.

    இந்த கண்காட்சியை கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் அமைச்சர் துரைகண்ணு, வைத்திலிங்கம் எம்.பி., ஆகியோர் திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் பட்டுகோட்டை எம்.எல்.ஏ. சி.வி.சேகர், மாவட்ட பால்வள தலைவர் காந்தி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் நிருபர்களுக்கு வைத்திலிங்கம் எம்.பி. பேட்டியளித்தார்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க கட்சியோடு கூட்டணி சேர மற்ற கட்சிகளோடு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஜெயலலிதாவின் ஆத்மா எங்களை வழி நடத்துகிறது. இதனால் தான் 2 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட சிலரால் முடியவில்லை. எந்த கட்சி தான் எந்த கட்சியை விமர்சனம் செய்யாமல் இருந்துள்ளது. எனவே கூட்டணி என்பது வேறு, விமர்சனம் என்பது வேறு.

    தே.மு.தி.க. இடைதேர்தலில் எம்.எம்.ஏ. மற்றும் மாநிலங்களவையில் எம்.பி. சீட் கேட்பதால் தான் அவர்களுடன் கூட்டணியில் இழுபறி என கருத்து நிலவுகிறதே என நிருபர்கள் கேட்டதற்கு, இதையெல்லாம் நாங்கள் வெளியில் சொல்ல முடியாது. இது ரகசியமானது.

    கூட்டணி பற்றி ஒவ்வொரு அமைச்சரும் ஒவ்வொரு கருத்துகளை கூறுகிறார்களே? என்ற கேள்விக்கு முதல்- அமைச்சர், துணை முதல்-அமைச்சர் என்ன சொல்கிறார்களோ அது தான் கட்சியின் இறுதியான கருத்து.

    இவ்வாறு அவர் கூறினார். #admk #dmdk #parliamentelection

    Next Story
    ×