search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெட்ரோல் விலை 42 காசுகள் குறைந்தது- ஒரு லிட்டர் 80 ரூபாய்க்கு கீழ் வந்தது
    X

    பெட்ரோல் விலை 42 காசுகள் குறைந்தது- ஒரு லிட்டர் 80 ரூபாய்க்கு கீழ் வந்தது

    சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை குறைந்தது. இன்று பெட்ரோல் விலை 42 காசுகளாகவும், டீசல் விலை 32 காசுகளாகவும் குறைந்தது.
    சென்னை:

    சர்வதேச கச்சா எண்ணை விலைக்கு ஏற்ப இந்தியாவில் தினமும் பெட்ரோல், டீசல் விலையை இந்திய எண்ணை நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.

    கடந்த மாதம் பெட்ரோல், டீசல் விலை தினம், தினம் உயர்த்தப்பட்டது.

    இந்த மாத தொடக்கத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.83-ஐ கடந்தது. பெட்ரோல், டீசல் விற்பனை மீது மத்திய, மாநில அரசுகள் வரியை குறைத்தால், அவற்றின் விலை குறைந்து விடும் என்ற கோரிக்கை விடப்பட்டது.

    ஆனால் மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல் மீதான வரியை விலக்க மறுத்த விட்டன. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் பெட் ரோல், டீசல் விலை கடந்த வாரம் முதல் குறையத் தொடங்கியது. நேற்று பெட்ரோல் விலை 21 காசும், டீசல் விலை 15 காசும் குறைந்தது.

    இன்றும் (சனிக்கிழமை) பெட்ரோல், டீசல் விலை குறைந்தது. இன்று பெட்ரோல் விலை வட மாநிலங்களில் 40 பைசாவும், டீசல் விலை 30 காசும் குறைந்தது.

    மாநிலத்துக்கு மாநிலம் வரி விதிப்பு மாறுபடுவதால் தமிழ்நாட்டில் இன்று பெட்ரோல் விலை 42 காசுகள் குறைந்தது. டீசல் விலையில் 32 காசுகள் குறைந்தது. இதனால் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.79.95 ஆக இருந்தது.

    டீசல் விலை லிட்டர் ரூ.72.08 ஆக உள்ளது. இந்திய எண்ணை நிறுவனங்கள் ஒவ்வொன்றும் சில காசுகள் வித்தியாசத்தில் தங்களுக்கு ஏற்ப விலையை நிர்ணயம் செய்கின்றன.

    இதனால் பெட்ரோல், டீசல் விலைகள் ஒவ்வொரு பங்கிற்கும் ஒவ்வொரு விதமாக உள்ளன. இந்திய எண்ணை நிறுவனங்கள் இன்று 11-வது நாளாக விலையை குறைத்துள்ளதால் இதுவரை லிட்டருக்கு ரூ.3 வரை குறைந்துள்ளது.

    பெட்ரோல் விலை சில தினங்களுக்கு பிறகு மீண்டும் 80 ரூபாய்க்கு கீழ் வந்துள்ளது. #Petrol #Diesel
    Next Story
    ×