search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கன்னியாகுமரி கடல் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு
    X

    கன்னியாகுமரி கடல் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு

    கன்னியாகுமரி கடல் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க ‘சவுகாச்‘ என்ற பெயரில் கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் போலீஸ் இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையில் 3 அதி நவீன படகுகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதில் ஒரு குழுவினர் சின்னமுட்டம் முதல் கூடங்குளம் வரையிலும், இன்னொரு குழுவினர் சின்னமுட்டம் முதல் மணக்குடி வரையிலும், மற்றொரு குழுவினர் சின்னமுட்டம் முதல் முட்டம் கடற்கரை வரையிலும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    இதுதவிர குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை கடற்கரை கிராமங்களில் உள்ள 11 சோதனை சாவடிகளிலும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார், உள்ளூர் போலீசாருடன் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் தொடங்கிய இந்த கண்காணிப்பு பணி இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 
    Next Story
    ×