search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    கும்மிடிப்பூண்டி அருகே ரூ.60 லட்சம் குட்கா சிக்கியது: 2 பேர் கைது
    X

    கும்மிடிப்பூண்டி அருகே ரூ.60 லட்சம் குட்கா சிக்கியது: 2 பேர் கைது

    கும்மிடிப்பூண்டி அருகே கர்நாடாகாவில் இருந்து சென்னைக்கு கடத்தப்பட்ட ரூ. 60 லட் சம் மதிப்புளள குட்கா போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி தலைமையில் கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன் மற்றும் போலீஸ் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அவ்வழியே வந்த லாரி ஒன்றை போலீசார் மடக்கி பிடித்து சோதனை நடத்தினர். லாரியின் பக்கவாட்டில் பழங்கள் அடுக்கி வைக்கும் பிளாஸ்டிக் டிரேக்கள் இருந்தன. அதன்பின் மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.

    இதனையடுத்து போலீசாரின் முழுமையான சோதனையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த மேற்கண்ட லாரியில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள 230 மூட்டை தடைசெய்யப்பட்ட குட்கா போதை,பொருட்கள் இருப்பது தெரியவந்தது. லாரியுடன் குட்கா போதை பொருட்கள் மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து குட்கா பொருட்களை லாரியில் கடத்தி வந்த அதன் உரிமையாளரும், டிரைவருமான ஆந்திர மாநிலம் அனந்தபூரைச்சேர்ந்த காசிம் மற்றும் கிளீனர் நாகராஜ் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×