search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gudka"

    வத்தலக்குண்டுவில் ரூ.2¼ லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் மளிகை கடையின் உரிமையாளரை கைது செய்தனர்.
    வத்தலக்குண்டு:

    தமிழகத்தில் புகையிலை, குட்கா, போதைபாக்கு பயன்படுத்த தடை விதிக்கப்பட்டபோதும் பல்வேறு பகுதிகளில் பதுக்கி விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பாக மளிகை மற்றும் பெட்டிக்கடைகளில் அதிக அளவு போதை பாக்குகள் விற்கப்படுகின்றன.

    குடோன்களில் பதுக்கி இளைஞர்கள் மற்றும் மாணவர்களை குறிவைத்து விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. போதை பழக்கத்துக்கு அடிமையானால் அவர்களே தேடி வந்து போதை பாக்குகளை வாங்குவதால் கடைக்காரர்கள் கூடுதல் விலை வைத்தபோதும் விற்பனை குறையவில்லை. போலீசார் இவற்றை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வத்தலக்குண்டு பகுதியில் சில மாணவர்கள் மயங்கி கிடப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்த்தபோது அவர்கள் குட்கா பொருட்கள், போதைபாக்கு பயன்படுத்தியது தெரிய வந்தது. இது குறித்து திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேலிடம் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். எஸ்.பி. உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் வத்தலக்குண்டு பிளீஸ்புரம் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அதே பகுதியில் உள்ள மளிகை கடையில் மாணவர்கள் போதை பாக்குகள் வாங்கியது தெரிய வந்தது. அங்கு சென்று சோதனை நடத்திய போது 18 மூடைகளில் சுமார் ரூ2¼ லட்சம் மதிப்பிலான போதை பாக்கு, குட்பா பொருட்கள் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து கடையின் உரிமையாளர் பாலரமேஷ் என்பரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். #tamilnews
    தடை செய்யப்பட்ட குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்தால் 6 மாதம் ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு அதிகாரி எச்சரித்து உள்ளார்.
    கோவை:

    கோவை அருகே கண்ணம் பாளையத்தில் இயங்கி வந்த குட்கா குடோனில் போலீசார் அதிரடி சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கிருந்து ரூ.1 கோடி மதிப்புள்ள குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    இந்தநிலையில் கடந்த சில நாட்களாக உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களும் கோவை நகர பகுதிகளில் குட்கா பதுக்கி வைத்துள்ள கடைகள், குடோன்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    கோவை தாமஸ் வீதியில் மேக்ராஜா(வயது 30) என்பவருக்கு சொந்தமான குடோனில் நடத்திய சோதனையில் 32 பெட்டிகளில் குட்கா, பான் பராக், பான்மசாலா மற்றும் போதை பொருட்கள் 750 கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.7 லட்சம் ஆகும். இவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் அவற்றின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைத்தனர். ஏற்கனவே கடந்த 2-ந் தேதி செல்வபுரம் பகுதியில் ஒரு குடோனில் இருந்து 1.5 டன் எடை கொண்ட குட்கா பதுக்கிய குடோனுக்கு சீல் வைத்தனர்.

    அதற்கு முன்னர் கோவை ராஜவீதி, தாமஸ் வீதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தி ஏராளமான குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். கடந்த 1 மாதத்தில் மட்டும் 4 டன் அளவுக்கு குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறியதாவது:-

    வீடுகள் அதிகம் உள்ள பகுதிகளில் குடோன்களை வாடகைக்கு எடுத்து குட்கா பதுக்கி வைத்து பிரித்து அனுப்புகின்றனர். கோவையில் பறிமுதல் செய்யப்படும் குட்கா பாக்கெட்டுகள் பெங்களூரில் தயாரிக்கப்பட்டுள்ளது. அங்கு குட்கா, பான் மசாலாவுக்கு தடை இல்லை.

    இதனால் அங்கு உற்பத்தி செய்து தமிழகத்துக்கு ரகசியமாக கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்கள். இங்கிருந்து கேரளாவுக்கும் கொண்டு செல்லப்படுவதாக தகவல் வந்துள்ளது. எனவே சோதனையை தீவிரப்படுத்த உள்ளோம்.

    பறிமுதல் செய்த குட்கா பாக்கெட்டுகளின் மாதிரிகளை சேகரித்து உடனடியாக ஆய்வுக்காக அனுப்பி விடுகிறோம். ஆய்வு அறிக்கை வந்ததும் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். இதில் 6 மாதம் ஜெயில் தண்டனை அல்லது ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கோவையில் லோடு ஆட்டோவில் கடத்தி வந்த 850 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக 2 வட மாநில வாலிபர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை பெரியகடை வீதி போலீசார் நேற்று இரவு ராஜவீதி தேர்முட்டி பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது அவ்வழியாக வந்த லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள் பண்டல், பண்டல்களாக இருந்ததை கண்டுபிடித்தனர்.

    ஆட்டோவில் இருந்த வடமாநில வாலிபர்கள் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்துக்கு உதவி கமி‌ஷனர் வெங்கடேஷ், இன்ஸ்பெக்டர்கள் ராஜேஷ், ஜோதி மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர். லோடு ஆட்டோவில் 28 பண்டல்களில் மொத்தம் 850 கிலோ குட்கா பாக்கெட்டுகள் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு துறையினர் அங்கு சென்று குட்கா பண்டல்களை ஆய்வு செய்தனர். பின்னர் அவற்றை கைப்பற்றி ரேஸ்கோர்சில் உள்ள அலுவலகத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை கண்ணம்பாளையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்டவிரோதமாக இயங்கி வந்த குட்கா ஆலையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அங்கிருந்து ரூ.80 லட்சம் மதிப்பிலான குட்கா புகையிலையை பறிமுதல் செய்தனர். இந்த ஆலையில் இருந்து தமிழகம் மட்டுமல்லாது கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு குட்கா அனுப்பி வைக்கப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

    இந்தநிலையில் கோவை மாநகருக்குள் விற்பனைக்காக கடத்தி வந்த குட்காவை போலீசார் பறிமுதல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த குட்கா பண்டல்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? யாருக்காக கொண்டு வரப்பட்டது? என விசாரித்த போது, ஆட்டோவில் இருந்த 2 வாலிபர்களும் முன்னுக்குப்பின் முரணாக பேசினர்.

    வெளிமாநிலத்தில் இருந்து வாகனங்கள் மூலம் இந்த குட்கா பண்டல்கள் கடத்தி வரப்பட்டதா? அல்லது கோவை மாவட்டத்திலேயே மேலும் குட்கா ஆலைகள் இயங்கி வருகிறதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.#tamilnews
    ×