என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- ஜெமிமா ரோட்ரிக்ஸ் 127 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
- ஜெமிமாவின் மதத்தை குறிவைத்து எண்ணற்ற ட்ரோல்கள் வந்தன.
மகளிர் உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை அதிரடியாக வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்திய அணி 48.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 341 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பரான வெற்றியோடு 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்த போட்டியில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 127 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். அவரை பலரும் பாராட்டினர்.
இதனிடையே, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றிக்கு பின்பு பேசிய ஜெமிமா ரோட்ரிக்ஸ், "நான் இயேசுவுக்கு நன்றி கூறுகிறேன், இதை நான் தனியாகச் செய்திருக்க முடியாது. அவர் என்னைவழி நடத்தினார்" என்று தெரிவித்தார்.
இதனையடுத்து இணையத்தில் ஜெமிமாவின் மதத்தை குறிவைத்து எண்ணற்ற ட்ரோல்கள் வந்தன.
ஜெமிமா விவகாரத்தில் கடந்த ஆண்டு அவரது தந்தையையொட்டி நடந்த மதமாற்ற சர்ச்சையும் சேர்ந்துகொண்டது.
அதாவது, கடந்தாண்டு டிசம்பர் மாதம் மும்பையில் உள்ள ஜிம்கானா கிளப்பின் உறுப்பினரில் இருந்து ஜெமிமா நீக்கம் செய்யப்பட்டார். அதற்கு கிளப்பின் வளாகத்திற்குள் அவரது தந்தை ரோட்ரிக்ஸ் மதம் தொடர்பான நிகழ்வுகளை நடத்தி மத மாற்றம் செய்ய ஊக்குவித்ததாக சிலர் புகார் தெரிவித்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், இந்த மதமாற்ற குற்றச்சாட்டுகளை அப்போதே கிளப்பின் தலைவர் மறுத்திருந்தார்.
அதேபோல், ஜெமிமாவின் தந்தையும் கிளப் வளாகத்திற்குள் கூட்டங்கள் நடத்தப்பட்டது உண்மைதான். ஆனால் கிளப்பின் விதிகளுக்கு உட்பட்டே நடத்தியதாக விளக்கம் அளித்தார்.
அந்த சமயத்தில் ஜெமிமாவின் கிறிஸ்தவ மத நம்பிக்கை குறித்து எதிர்மறையாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக அவரது குடும்பத்தினருடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அவர் மீது மோசமான விமர்சனங்கள் வைக்கப்பட்டது.
இந்நிலையில், அவரது குடும்பம் மீது வைக்கப்பட்ட மத ரீதியிலான விமர்சனங்கள் குறித்து ஜெமிமா ரோட்ரிக்ஸ் முதல்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.
இதுதொடர்பாக இந்தியா டுடேவுக்கு பிரத்யேக பேட்டியளித்த ஜெமிமா ரோட்ரிக்ஸ், "உண்மையைச் சொல்லப் போனால், அது எப்போது நடந்தது என்பது எனக்கு நினைவில் இருக்கிறது. .நாங்கள் செய்யாத ஒரு விஷயத்திற்காக என் பெற்றோர் அதில் இழுக்கப்பட்டபோது எனக்கு அது மிகவும் வேதனையாக இருந்தது. அந்த நேரத்தில், நாங்கள் விதிமுறைகளின்படிதான் செயல்பட்டோம். அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் இருந்தன. ஆனால், எனக்கும் என் குடும்பத்தினருக்கும் எதிராகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் எங்களை மிகவும் பாதித்தன. ஏனெனில் நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை" என்று தெரிவித்தார்.
- எம்.எஸ்.தோனி ஐ.பி.எல். தொடரில் விளையாடுவது குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வந்தன.
- சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
ஐ.பி.எல். தொடர் தொடங்கியதில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பங்கேற்று வருகிறார் எம்.எஸ்.தோனி. அவர் இல்லாமல் ஐ.பி.எல் தொடரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இல்லை என்றே ரசிகர்கள் கருதுகின்றனர்.
இதனிடையே, 2020-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து எம்.எஸ்.தோனி ஓய்வு பெற்றார். இதனை தொடர்ந்து எம்.எஸ்.தோனி ஐ.பி.எல். தொடரில் விளையாடுவது குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வந்தன. இதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக, சென்னை அணிக்காக தொடர்ந்து விளையாடுவேன் என்று எம்.எஸ்.தோனியும் தெரிவித்து இருந்தார்.
இருப்பினும் எம்.எஸ்.தோனி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். தொடரில் விளையாட மாட்டார் என்று வதந்தி பரவி வருகிறது.
இந்த நிலையில், 2026 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவார் என்பதை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உறுதி செய்துள்ளது.
இது தொடர்பாக சி.எஸ்.கே. அணி வீடியோ வெளியிட்டுள்ளது. அதில், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் தோனி அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்று ரசிகர்கள் கேட்கின்றனர். அதற்கு ONE LAST TIME என்று பதில் கொடுத்து தோனி ரசிகர்களை சி.எஸ்.கே. அணி உற்சாகப்படுத்தியுள்ளது.
- அணியை வலுப்படுத்தும் செயலில் மும்பை இந்தியன்ஸ் தீவிரம் காட்டியுள்ளது
- தற்போது வீரர்கள் பரஸ்பர வர்த்தக பரிமாற்றம் தொடங்கியுள்ளது.
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலத்தை அடுத்த மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் 10 அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும். இதையொட்டி தற்போது வீரர்கள் பரஸ்பர வர்த்தக பரிமாற்றம் தொடங்கியுள்ளது.
கடந்த ஆண்டு இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்ததால் அணியை வலுப்படுத்தும் செயலில் மும்பை இந்தியன்ஸ் தீவிரம் காட்டியுள்ளது. இதன் ஒரு பகுதியாக குஜராத் அணியிடம் இருந்து ரூ.2.6 கோடிக்கு அதிரடி வீரர் ஷெர்பான் ரூதர்போர்ட்-ஐ மும்பை அணி TRADE செய்துள்ளது.
முன்னதாக லக்னோ வீரர் ஷர்துல் தாக்கூரை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.2 கோடி கொடுத்து வாங்கியது குறிப்பிடத்தக்கது.
- அணியை வலுப்படுத்தும் செயலில் மும்பை இந்தியன்ஸ் தீவிரம் காட்டியுள்ளது.
- தற்போது வீரர்கள் பரஸ்பர வர்த்தக பரிமாற்றம் தொடங்கியுள்ளது.
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலத்தை அடுத்த மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் 10 அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும். இதையொட்டி தற்போது வீரர்கள் பரஸ்பர வர்த்தக பரிமாற்றம் தொடங்கியுள்ளது.
கடந்த ஆண்டு இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்ததால் அணியை வலுப்படுத்தும் செயலில் மும்பை இந்தியன்ஸ் தீவிரம் காட்டியுள்ளது. இதன் ஒரு பகுதியாக மும்பை அணி நிர்வாகம் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாகூரை தங்கள் பக்கம் இழுக்க பேச்சுவாார்த்தை நடத்தி வருவதாக முன்னாள் சி.எஸ்.கே. வீரர் ரவிசந்திரன் அஸ்வின் நேற்று தெரிவித்தார். .
இந்நிலையில், லக்னோ வீரர் ஷர்துல் தாக்கூரை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.2 கோடி கொடுத்து வாங்கியுள்ளது.
2026 ஐபிஎல் தொடருக்காக பலவித TRADE யூகங்கள் பரவிய நிலையில், முதல் வீரராக ஷர்துல் தாக்கூர் TRADE ஆகியுள்ளார்.
முன்னதாக, ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக அர்ஜுன் டெண்டுல்கரை லக்னோ அணிக்கு கொடுக்க மும்பை அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதனையடுத்து ஷர்துல் தாகூருக்கு பதில் அர்ஜுன் டெண்டுல்கரா? என்று இந்த தகவலை நெட்டிசன்கள் இணையத்தில் கிண்டலடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆசிய கோப்பை தொடரின் போது ஹர்திக் பாண்ட்யாவுக்கு காயம் ஏற்பட்டது.
- காயத்தால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் பாண்ட்யா விளையாடவில்லை.
இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. இவர் நடப்பு ஆண்டில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் போது காயமடைந்தார். சூப்பர் 4 சுற்றில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தின் போது இவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் இறுதிப்போட்டியில் விலகினார். இருப்பினும் இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.
காயத்தால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் அவர் விளையாடவில்லை. தற்போது காயத்தில் இருந்து மீண்ட ஹர்திக் பாண்ட்யா, வரும் 26-ம் தேதி தொடங்கவுள்ள சயத் முஸ்தாக் அலி கோப்பை தொடரில் பரோடா அணிக்காக விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் இந்த ஏலம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- இதன் மூலம் தொடர்ந்து 3-வது முறையாக ஏலத்தை வெளிநாட்டில் இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தவுள்ளது.
மும்பை:
19-வது ஐ.பி.எல் கிரிக்கெட் 20 ஓவர் போட்டி தொடர் அடுத்த ஆண்டு மார்ச் 15-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை நடக்கிறது.
இந்த சீசனுக்கான வீரர்களின் மினி ஏலம் நடத்தப்பட உள்ளது. இதையடுத்து தக்க வைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை 10 அணிகளும் நாளை மாலை 3 மணிக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஐ.பி.எல் வீரர்களின் மினி ஏலம் நடைபெறும் தேதி, இடம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 16-ந்தேதி அபுதாபியில் வீரர்களின் ஏலம் நடைபெற உள்ளது.
ஐ.பி.எல் வீரர்களின் ஏலம் தொடர்ந்து 3-வது முறையாக வெளிநாட்டில் நடக்கிறது. 2024-ம் ஆண்டுக்கான வீரர்கள் ஏலம் துபாயில் நடந்தது. 2025-ம் சீசனுக்கான வீரர்கள் ஏலம் ஜெட்டாவில் நடந்தது.
தக்க வைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை 10 அணிகளும் அளித்தபிறகு ஏலம் விடப்படும் வீரர்களின் பட்டியலை ஐ.பி.எல் நிர்வாகம் தயாரிக்கும்.
- நியூசிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி 16-ந் தேதி நடக்கிறது.
- இந்த ஒருநாள் தொடருக்கான ஷாய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணி, 3 வடிவ கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதலில் நடந்த டி20 தொடரில் 3-1 (ஒரு ஆட்டம் மழையால் பாதிப்பு) என்ற கணக்கில் நியூசிலாந்து அணி தொடரை கைப்பற்றியது.
இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் வருகிற 16-ந் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில போட்டிகளாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கிங் இந்த தொடரில் இடம் அளிக்கவில்லை.
அவருக்கு பதிலாக ஜான் ஜம்பல் இடம் பிடித்துள்ளார். தொடக்க வீரரான இவர் 6 ஆண்டுக்கு பிறகு அணியில் இடம் பிடித்து அசத்தி உள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி:-
ஷாய் ஹோப் (கேபடன்), அலிக் அதானாஸ், அக்கீம் அகஸ்டே, ஜான் கேம்ப்பெல், கீசி கார்டி, ரோஸ்டன் சேஸ், மேத்யூ ஃபோர்டே, ஜஸ்டின் க்ரீவ்ஸ், அமீர் ஜாங்கூ, ஜோஹன் லெய்ன், காரி பியர், ஷெர்ஃபேன் ரதர்ஃபோர்ட், ஜேடன் சீல்ஸ், ரொமாரியோ ஷெப்பர்ட்.
- தென் ஆப்பிரிக்க அணியை பொறுத்தவரை அவர்கள் பலமானவர்கள்.
- ஆசிய கண்டங்களில் உள்ள ஆடுகளங்களில் தென் ஆப்பிரிக்கா போன்ற அணியை எதிர்கொள்வது என்பது எப்போதுமே கடினமான விஷயம்.
கொல்கத்தா:
இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி வெள்ளிக்கிழமை கொல்கத்தாவில் தொடங்குகிறது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த போட்டி குறித்து செய்தியாளர்களை சந்தித்த கில் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அதைப்பற்றி தற்போது பார்க்கலாம்.
இந்த இரண்டு போட்டிகளும் எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் நாங்கள் விளையாட வேண்டும் என்றால் இந்த போட்டிகளில் நாங்கள் வெற்றி பெற்றாக வேண்டும். தென் ஆப்பிரிக்க அணியை பொறுத்தவரை அவர்கள் பலமானவர்கள். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றவர்கள். எனவே அவர்களை வீழ்த்துவது என்பது எளிதான காரியமாக இருக்காது.
இந்த டெஸ்ட் போட்டியில் பல சவால்கள் இருக்கும் என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். ஆனால் ஒரே அணியாக நாங்கள் இந்த சூழலை பெரிதாக கையாளும் என்று நம்புகிறேன். ஆசிய கண்டங்களில் உள்ள ஆடுகளங்களில் தென் ஆப்பிரிக்கா போன்ற அணியை எதிர்கொள்வது என்பது எப்போதுமே கடினமான விஷயம். ஆனால் இந்த சவாலை நாங்கள் எதிர்கொள்ள தயாராக இருக்கின்றோம்.
என்று சுப்மன் கில் கூறினார்.
- சென்னை வந்த கவுருக்கு பிரமாண்ட மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
- கவுர், பள்ளி மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.
13-வது மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி 52 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 52 ஆண்டு கால உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணி கோப்பையை வென்றது இதுவே முதல்முறையாகும். இந்த வெற்றிக்கு பல அரசியல் தலைவர்களும், பிரபலங்களும், நடிகர்களும் தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர்.
அந்த வகையில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதனால் சென்னை வந்த அவருக்கு மேளதாளங்கள் முழங்க, பிரமாண்ட மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாணவிகள் இந்திய வீராங்கனைகளின் ஜெர்சியை அணிந்து வந்து ஹர்மன்பிரீத் கவுரிடம் கோப்பையை பெற்றுக்கொண்டனர். அதாவது மகளிர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியினர் கோப்பையை வென்று கொண்டாடியதை போன்று அவர்கள் நடித்து காட்டினர்.
இதனை தொடர்ந்து அவர் பள்ளி மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார். அப்போது கவுரிடம் மாணவர் ஒருவர் தோனி, விராட் கோலி இவர்களில் யார் உங்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் என கேள்வி எழுப்பினார். அதற்கு தோனி என கவுர் பதிலளித்தார். இதனால் அரங்கமே அதிர்ந்தது.
அதனை தொடர்ந்து தோனி, ஸ்மிருதி மந்தனா இவர்களில் யார் என கேள்வி எழுப்ப மந்தனா என பதிலளித்தார். இதனால் அதிர்ந்த அரங்கம் அமைதியானது. அதனை தொடர்ந்து மந்தனாவா மிதாலி ராஜா என கேள்வி எழுப்ப மீண்டும் ஸ்மிருதி என பதிலளித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றிருந்தது.
- 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.
வெஸ்ட் இண்டீஸ் - நியூசிலாந்து அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. இதில் முதல் 4 போட்டிகள் முடிவில் நியூசிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஒரு போட்டி மழையால் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, நியூசிலாந்தின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 18.4 ஓவரில் 140 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
அதிகபட்சமாக ரோஸ்டன் சேஸ் 38, ஷெப்பர்ட் 36 ரன்கள் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டஃபி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அதிரடியாக விளையாடி 15.4 ஓவரில் 141 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கான்வே 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.
- தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை நாளை சமர்ப்பிக்க பிசிசிஐ கெடு விதிக்கப்பட்டுள்ளது.
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.30 கோடி ரூபாய் உடன் நாளை நடக்கும் ஏலத்தில் கலந்து கொள்ள உள்ளது.
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 15 அல்லது 16-ந்தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை நாளை 10 அணிகளும் சமர்ப்பிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் வீரர்கள் பரிமாற்றத்துக்கான பரஸ்பர பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.
அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தக்கவைக்கப்படும் வீரர்கள், கழற்றிவிடப்பட்டும் வீரர்கள் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி வெளிநாட்டு வீரர்களில் ரச்சின் ரவீந்திரா, டேவான் கான்வே (நியூசிலாந்து) ஆகிய வீரர்கள் கழற்றி விட உள்ளதாகவும் கடந்த சீசனில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர்களான விஜய் சங்கர், ராகுல் த்ரிபாதி, தீபக் ஹூடா ஆகியோர் உள்பட பல வீரர்களை கழற்றி விட உள்ளாதவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய வீரர்களில் ஆயுஸ் மாத்ரே, உர்வில் படேல் தக்க வைக்கப்படுகின்றனர். வெளிநாட்டு வீரர்களில் பிரேவிஸ், நாதன் எல்லீஸ், பத்திரனா ஆகியோர் தக்க வைக்கபடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. பல அணிகள் எல்லிஸை ட்ரேட் முறையில் வாங்க ஆர்வம் காட்டிய நிலையில் சிஎஸ்கே அணி மறுத்துவிட்டது. ட்ரேட் முறையில் ஜடேஜா, சாம் கரன் வெளியேறுகின்றனர்.
இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.30 கோடி ரூபாய் உடன் நாளை நடக்கும் ஏலத்தில் கலந்து கொள்ள உள்ளது. புதிய வீரர்களை ஏலத்தில் எடுக்க உள்ளதால் சென்னை ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
- இந்த போட்டியை எங்களை மிகப்பெரிய அளவில் சோதித்துக் கொள்வதற்குரிய ஒன்றாக கருதுகிறோம்.
- தென் ஆப்பிரிக்க அணியின் சுற்றுப்பயணங்களில் மிகவும் கடினமான தொடராக இது இருக்கும்.
கொல்கத்தா:
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜ் நேற்று அளித்த பேட்டியில், 'இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த வேண்டும் என்ற உண்மையான வேட்கையும், ஆவலும் எங்கள் அணிக்குள் அதிகமாக இருக்கிறது.
அனேகமாக தென் ஆப்பிரிக்க அணியின் சுற்றுப்பயணங்களில் மிகவும் கடினமான தொடராக இது இருக்கும். இந்த போட்டியை எங்களை மிகப்பெரிய அளவில் சோதித்துக் கொள்வதற்குரிய ஒன்றாக கருதுகிறோம். எங்களது திறமையை நாங்களே தரப்படுத்திக் கொள்ளவும், நாங்கள் எந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறோம் என்பதை பார்க்கவும் இது அருமையான வாய்ப்பு. இந்திய துணை கண்டத்தில் மற்ற பகுதிகளில் வெற்றி பெற தொடங்கி விட்டோம். இப்போது இந்தியாவை வீழ்த்த வேண்டும் என்பதே எங்களது அடுத்த இலக்கு.
கொல்கத்தா ஆடுகளம் பாகிஸ்தானில் இருந்தது போல் முழுமையாக சுழலுக்கு உகந்த வகையில் அமைக்கப்படும் என நினைக்கவில்லை. இந்தியாவின் பாரம்பரிய டெஸ்ட் ஆடுகளங்கள் போலவே இது இருக்கும் என எதிர்பார்க்கிறேன். அதாவது போக போக ஆடுகளத்தன்மை மாறும் போது சுழலுக்கு உதவும்' என்றார்.
தென் ஆப்பிரிக்க அணி இந்திய மண்ணில் 2010-ம் ஆண்டுக்கு பிறகு டெஸ்டில் வெற்றி பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






