என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஏலத்தில் ரூ. 30 கோடியுடன் களமிறங்கும் சிஎஸ்கே: தக்கவைக்கும், கழற்றி விடும் வீரர்கள் விவரம்
- தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை நாளை சமர்ப்பிக்க பிசிசிஐ கெடு விதிக்கப்பட்டுள்ளது.
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.30 கோடி ரூபாய் உடன் நாளை நடக்கும் ஏலத்தில் கலந்து கொள்ள உள்ளது.
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 15 அல்லது 16-ந்தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை நாளை 10 அணிகளும் சமர்ப்பிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் வீரர்கள் பரிமாற்றத்துக்கான பரஸ்பர பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.
அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தக்கவைக்கப்படும் வீரர்கள், கழற்றிவிடப்பட்டும் வீரர்கள் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி வெளிநாட்டு வீரர்களில் ரச்சின் ரவீந்திரா, டேவான் கான்வே (நியூசிலாந்து) ஆகிய வீரர்கள் கழற்றி விட உள்ளதாகவும் கடந்த சீசனில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர்களான விஜய் சங்கர், ராகுல் த்ரிபாதி, தீபக் ஹூடா ஆகியோர் உள்பட பல வீரர்களை கழற்றி விட உள்ளாதவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய வீரர்களில் ஆயுஸ் மாத்ரே, உர்வில் படேல் தக்க வைக்கப்படுகின்றனர். வெளிநாட்டு வீரர்களில் பிரேவிஸ், நாதன் எல்லீஸ், பத்திரனா ஆகியோர் தக்க வைக்கபடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. பல அணிகள் எல்லிஸை ட்ரேட் முறையில் வாங்க ஆர்வம் காட்டிய நிலையில் சிஎஸ்கே அணி மறுத்துவிட்டது. ட்ரேட் முறையில் ஜடேஜா, சாம் கரன் வெளியேறுகின்றனர்.
இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.30 கோடி ரூபாய் உடன் நாளை நடக்கும் ஏலத்தில் கலந்து கொள்ள உள்ளது. புதிய வீரர்களை ஏலத்தில் எடுக்க உள்ளதால் சென்னை ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.






