என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலத்தை அடுத்த மாதம் 16-ந் தேதி நடக்கவுள்ளது.
    • 10 அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை இன்று வெளியிட வேண்டும்.

    19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் 16-ந் தேதி நடக்கவுள்ளது. அதற்கு முன்னர் 10 அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும். இதையொட்டி தற்போது வீரர்கள் பரஸ்பர வர்த்தக பரிமாற்றம் தொடங்கியுள்ளது.

    அந்த வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்த சஞ்சு சாம்சனை சென்னை அணி டிரேட் முறையில் வாங்க உள்ளதாக பல தகவல்கள் வந்த நிலையில் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

    அதன்படி சென்னை அணியில் விளையாடிய ஜடேஜா, சாம் கரனை ராஜஸ்தான் அணிக்கு கொடுத்து ராஜஸ்தான் அணியின் கேப்டனாக செயல்பட்ட சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணி வாங்கியுள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் பேட் செய்த இலங்கை 50 ஓவரில் 288 ரன்கள் எடுத்தது.

    ராவல்பிண்டி:

    இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

    கடந்த 11-ம் தேதி நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இலங்கையை 6 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 288 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து, 289 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய பாகிஸ்தான் அணி 48.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 289 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை பாகிஸ்தான் 2-0 என கைப்பற்றியது. சதமடித்து அசத்திய பாபர் அசாம் ஆட்ட நாயகன் விருது பெற்றார். கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது.

    • முதலில் பேட் செய்த இந்தியா ஏ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 297 ரன்கள் குவித்தது
    • வைபவ் சூர்யவன்ஷி 42 பந்தில் 15 சிக்சர், 11 பவுண்டரிகளுடன் 144 ரன்கள் குவித்தார்.

    தோஹா:

    இளம் வீரர்களுக்கான ரைசிங் ஸ்டார்ஸ் ஆசியக் கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.

    நேற்று நடைபெற்ற குரூப் ஏ லீக் போட்டியில் இந்தியா ஏ அணி, ஐக்கிய அரபு எமிரேட்ஸை எதிர்கொண்டது.

    டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா ஏ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 297 ரன்கள் குவித்தது

    தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி ருத்ர தாண்டவம் ஆடி 32 பந்துகளில் சதமடித்து வரலாறு படைத்தார். அவர் 42 பந்தில் 15 சிக்சர், 11 பவுண்டரிகளுடன் 144 ரன்கள் குவித்தார். கேப்டன் ஜிதேஷ் சர்மாவும் அதிரடியாக ஆடி 32 பந்தில் 6 சிக்சர், 8 பவுண்டரியுடன் 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த இன்னிங்சில் இந்திய அணி 25 சிக்சர், 24 பவுண்டரிகள் அடித்தது.

    வைபவ் சூர்யவன்ஷி 15 சிக்ரும், ஜிதேஷ் சர்மா 6 சிக்சரும் அடித்தனர்.

    அடுத்து ஆடிய யுஏஇ அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 149 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா ஏ அணி குரூப் ஏ பிரிவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

    இந்தியா ஏ அணிக்காக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி 32 பந்துகளில் சதம் அடித்தார். ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிரான போட்டியில் அவர் இந்த வரலாற்று சாதனையை நிகழ்த்தினார்.

    • வங்கதேசம் முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 587 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
    • அயர்லாந்து அணி 2வது இன்னிங்சில் 254 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    டாக்கா:

    வங்கதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 டி20 கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

    இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் கடந்த 11-ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற அயர்லாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய அயர்லாந்து முதல் இன்னிங்சில் 286 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஸ்டெர்லிங் 60 ரன்கள் சேர்த்தார்.

    தொடர்ந்து, முதல் இன்னிங்சை ஆடிய வங்கதேசம் 8 விக்கெட்டுக்கு 587 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியின் ஹசன் ஜாய் அதிகபட்சமாக 171 ரன்கள்எடுத்தார். ஷாண்டோ சதமடித்து அவுட்டானார்.

    இதையடுத்து, 301 ரன்கள் பின்தங்கிய நிலையில் அயர்லாந்து 2வது இன்னிங்சை தொடங்கியது. வங்கதேசத்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அயர்லாந்து அணி விரைவில் விக்கெட்களை இழந்தது. மூன்றாம் நாள் முடிவில் அயர்லாந்து 5 விக்கெட்டுக்கு 86 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. ஆண்டி மெக்பிரின் அரை சதம் கடந்து 52 ரன்னும், கேப்டன் ஆண்ட்ரூ பால்பெரின் 38 ரன்னும், ஜோர்டான் நெயில் 36 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், அயர்லாந்து அணி 2வது இன்னிங்சில் 254 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் வங்கதேசம் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 47 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

    • 2025 மெகா ஏலத்தில் 10 கோடி ரூபாய்க்கு முகமது ஷமியை ஏலம் எடுத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.
    • லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் இவரை வாங்க இரு அணிகளுக்கும் இடையில் வர்த்தகம் ஏற்பட்டுள்ளது.

    ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி ஏலம் அடுத்த மாதம் 15-ந்தேதி நடக்கிறது. நாளைக்குள் 10 அணிகளும் எந்தெந்த வீரர்களைகள் தக்கவைத்துக் கொள்ளப்பட்டார்கள் மற்றும் வெளியேற்றப்பட்டார், வர்த்தகம் நடைபெற்றது என்ற தகவலை தெரிவிக்க வேண்டும்.

    அதன்வகையில் ஒரு அணியில் இருந்து மற்றொரு வீரர்கள் வர்த்தகம் ஆவது தொடர்பான செய்திகள் வெளியாகி வருகிறது.

    அந்த வகையில் 2025 மெகா ஏலத்தில் 10 கோடி ரூபாய்க்கு முகமது ஷமியை ஏலம் எடுத்த சன்ரைசர்ஸ் ஐதராபாத், அவரை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு வர்த்தகம் செய்கிறது.

    இரு அணிகளும் இதை ஒப்புக்கொண்டுள்ளன. கடந்த சீசனில் 9 போட்டிகளில் விளையாடிய முகமது ஷமி 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். சராசரி 56.16 ஆகும், எகானமி ரேட் 11.23 ஆகும்.

    உடற்தகுதி விவகாரம் தொடர்பாக ஷமி இந்திய அணியில் இடம் பெற முடியாமல் இருக்கிறார். கடைசியாக மார்ச் மாதம் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் விளையாடினார்.

    • ஜெய்ஸ்வால் 12 ரன்கள் எடுத்திருந்த போது யான்சன் பந்து வீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார்.
    • முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 20 ஓவரில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 37 ரன்கள் எடுத்துள்ளது.

    இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் இன்று தொடங்கியது.

    இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 159 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக மார்க்ரம் 31 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதனையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால்- கேஎல் ராகுல் களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆட்டத்தை தொடங்கினர். இதில் ஜெய்ஸ்வால் 12 ரன்கள் எடுத்திருந்த போது யான்சன் பந்து வீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார்.

    அதனை தொடர்ந்து வந்த வாஷிங்டன் சுந்தர், கேஎல் ராகுலுடன் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 20 ஓவரில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 37 ரன்கள் எடுத்துள்ளது.

    • தீபர் சாஹர் மீண்டும் சிஎஸ்கே அணியில் சேர்க்க ஆலோசனை நடைபெற்று வருகிறது.
    • ஆர்சிபி-ல் இருந்து லியாம் லிவிங்ஸ்டன் சிஎஸ்கே அணிக்கு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந்தேதியில் நடக்கவுள்ளது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை நாளை 10 அணிகளும் சமர்ப்பிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் வீரர்கள் பரிமாற்றத்துக்கான பரஸ்பர பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.

    அந்த வகையில் சில வீரர்களை டிரேட் முறையில் மற்ற அணிக்கு கொடுக்க ஆலோசனை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய தீபர் சாஹர் மீண்டும் சிஎஸ்கே அணியில் சேர்க்க ஆலோசனை நடைபெற்று வருகிறது.

    அதேபோல் பஞ்சாப் அணிக்காக விளையாடிய அதிரடி ஆல் ரவுண்டர் மேக்ஸ்வெல் சிஎஸ்கே அணிக்கு கொடுக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    மேலும் ஆர்சிபி-ல் இருந்து லியாம் லிவிங்ஸ்டனும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து துஷார் தேஷ்பாண்டேவும் சிஎஸ்கே அணிக்கும் மாற்ற பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை அணிக்கு மேக்ஸ்வெல், லிவிங்ஸ்டன் ஆகிய இரண்டு பேர் சிஎஸ்கே அணிக்கு வருவதை ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர். 

    • இந்திய தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
    • தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக மார்க்ரம் 31 ரன்கள் எடுத்திருந்தார்.

    இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் இன்று தொடங்கியது.

    இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

    அதன்படி தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக மார்க்ராம், ரியான் ரிக்கல்டன் களமிறங்கினர். இந்த பும்ரா ஓவரை மட்டும் தடுத்து ஆடினார். சிராஜ் ஓவரை சிக்சரும் பவுண்டரியுமாக பறக்க விட்டனர். இதனால் அக்சர் படேலுக்கு ஓவர் கொடுக்கப்பட்டது. அவர் ஓவரையும் அதிரடியாக விளையாடினர்.

    இந்த ஜோடி முதல் 10 ஓவருக்கு 57 ரன்கள் எடுத்தது. 11-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் ரிக்கல்டன் போல்ட் ஆகி வெளியேறினார். அவர் 22 பந்தில் 23 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    இதனை தொடர்ந்து 13-வது ஓவரை மீண்டும் பும்ரா வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் மார்க்ரம் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 31 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    அடுத்து வந்த கேப்டன் பவுமா, 3 ரன்னில் குல்தீப் யாதவ் பந்து வீச்சில் துருவ் ஜூரலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

    இதனையடுத்து வியான் முல்டர்- டோனி டி சோர்ஜி ஜோடி நிதானமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதனால் முதல் நாள் உணவு இடைவேளை வரை தென் ஆப்பிரிக்கா 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 105 ரன்கள் எடுத்திருந்தது.

    அதன்பிறகு மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதன்படி வியான் முல்டர் 24, டோனி டி சோர்ஜி 24 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர்.

    அதனை தொடர்ந்து கைல் வெர்ரேய்ன் 16, மார்கோ ஜான்சன் 0, கார்பின் போஷ் 3, சைமன் ஹார்மர் 5, கேசவ் மகராஜ் 0 என விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மட்டும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 15 ரன்கள் எடுத்திருந்தார்.

    இந்திய தரப்பில் பும்ரா 5 விக்கெட்டும் சிராஜ், குல்தீப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 

    • 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் 16-ந்தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    • KKR உதவி பயிற்சியாளராக ஷேன் வாட்சன் நேற்று நியமிக்கப்பட்டார்.

    19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் 16-ந்தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை 10 அணிகளும் சமர்ப்பிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் வீரர்கள் பரிமாற்றத்துக்கான பரஸ்பர பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.

    மேலும் ஒவ்வொரு அணியும் தங்களது பயிற்சியாளர் குழுவை மாற்றியமைத்து வருகின்றனர். அந்த வகையில் கொல்கத்தா அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்து பாரத் அருணை நீக்கியுள்ளது. அவருக்கு பதிலாக நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் டிம் சவுதி நியமிக்கப்பட்டுள்ளார்.

    சமீபத்தில் கொல்கத்தா அணியின் தலைமை பயிற்சியாளராக அபிஷேக் நாயரும் உதவி பயிற்சியாளர் ஷேன் வாட்சனும் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • துணை கேப்டனாக நாராயண் ஜெகதீசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • இந்தத் தொடரில், தமிழ்நாடு அணி எலைட் குரூப் 'டி' பிரிவில் இடம்பெற்றுள்ளது.

    சென்னை:

    சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 கிரிக்கெட் தொடர் வருகிற நவம்பர் 26-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த தொடருக்கான தமிழ்நாடு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியின் கேப்டனாக, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

    துணை கேப்டனாக நாராயண் ஜெகதீசன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்திய அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் நடராஜன், இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஆர். சாய் கிஷோர் மற்றும் இளம் வீரர் ஆண்ட்ரே சித்தார்த் ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

    நடப்பு ரஞ்சி டிராபி சீசனில் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் தமிழ்நாடு அணி, டி20 தொடரில் சிறப்பாகச் செயல்பட்டு முத்திரை பதிக்கும் முனைப்பில் உள்ளது. இந்தத் தொடரில், தமிழ்நாடு அணி எலைட் குரூப் 'டி' பிரிவில் இடம்பெற்றுள்ளது.

    இந்தப் பிரிவில் ராஜஸ்தான், டெல்லி, கர்நாடகா, உத்தரகாண்ட், திரிபுரா, ஜார்கண்ட் மற்றும் சௌராஷ்டிரா போன்ற பலம் வாய்ந்த அணிகளும் உள்ளன. தமிழ்நாடு அணி தனது முதல் போட்டியில் அகமதாபாத்தில் ராஜஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

    சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 கிரிக்கெட் தொடருக்கான தமிழ்நாடு அணி விவரம்:-

    வருண் சக்கரவர்த்தி (கேப்டன்), நாராயண் ஜெகதீசன் (துணை கேப்டன், விக்கெட் கீப்பர்),துஷார் ரஹேஜா (விக்கெட் கீப்பர்)வி.பி. அமித் சாத்விக், ஷாருக் கான், ஆண்ட்ரே சித்தார்த், பிரதோஷ் ரஞ்சன் பால், சிவம் சிங், ஆர். சாய் கிஷோர், எம். சித்தார்த், டி. நடராஜன், குர்ஜப்னீத் சிங், ஏ. இசக்கிமுத்து, ஆர். சோனு யாதவ், ஆர். சிலம்பரசன், எஸ். ரித்திக் ஈஸ்வரன் (விக்கெட் கீப்பர்).

    • இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று கொல்கத்தாவில் தொடங்கியது.
    • இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

    கொல்கத்தா:

    இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி முதல் நாள் உணவு இடைவேளை வரை 3 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்கள் எடுத்துள்ளது.

    முன்னதாக இந்த ஆட்டத்தையும் சேர்த்து இதுவரை 8 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ள சுப்மன் கில் ஒரே ஒரு முறை மட்டுமே டாஸில் வெற்றி பெற்றுள்ளார்.

    இந்நிலையில் இந்த போட்டியில் டாஸை இழந்த பின் சுப்மன் கில் அளித்த பேட்டியில், "நான் வெல்லப் போகும் ஒரே டாஸ் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில்தான் என்று நம்புகிறேன்" என சிரித்துக்கொண்டே கூறினார்.

    • வியான் முல்டர் 22 ரன்னிலும் டோனி டி சோர்ஜி 15 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.
    • இந்திய தரப்பில் பும்ரா 2 விக்கெட்டும் குல்தீப் 1 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது.

    அதன்படி இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் இன்று தொடங்கியது.

    இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

    அதன்படி தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக மார்க்ராம், ரியான் ரிக்கல்டன் களமிறங்கினர். இந்த பும்ரா ஓவரை மட்டும் தடுத்து ஆடினார். சிராஜ் ஓவரை சிக்சரும் பவுண்டரியுமாக பறக்க விட்டனர். இதனால் அக்சர் படேலுக்கு ஓவர் கொடுக்கப்பட்டது. அவர் ஓவரையும் அதிரடியாக விளையாடினர்.

    இந்த ஜோடி முதல் 10 ஓவருக்கு 57 ரன்கள் எடுத்தது. 11-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் ரிக்கல்டன் போல்ட் ஆகி வெளியேறினார். அவர் 22 பந்தில் 23 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    இதனை தொடர்ந்து 13-வது ஓவரை மீண்டும் பும்ரா வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் மார்க்ரம் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 31 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    அடுத்து வந்த கேப்டன் பவுமா, 3 ரன்னில் குல்தீப் யாதவ் பந்து வீச்சில் துருவ் ஜூரலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

    இதனையடுத்து வியான் முல்டர்- டோனி டி சோர்ஜி ஜோடி நிதானமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதனால் முதல் நாள் உணவு இடைவேளை வரை தென் ஆப்பிரிக்கா 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 105 ரன்கள் எடுத்தது. வியான் முல்டர் 22 ரன்னிலும் டோனி டி சோர்ஜி 15 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.

    இந்திய தரப்பில் பும்ரா 2 விக்கெட்டும் குல்தீப் 1 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.

    ×